பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பாரிய அளவில் நிதி திரட்டிய குவைத் மக்கள்!

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா மக்களுக்காக குவைத் 67 மில்லியன் டொலர்களை திரட்டியுள்ளது. பாரிய நிதி துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன. அந்த வகையில் குவைத் தற்போது பாரிய அளவில் நிதி திரட்டியுள்ளது. குவைத்தின் சமூக விவகார அமைச்சகம் தொடங்கிய நன்கொடை இயக்கத்தில், நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 1,29,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து 20 மில்லியன் குவைத் தினார்கள் நிதி திரட்டப்பட்டது. அமெரிக்க டொலர்கள் மதிப்பில் 67 மில்லியன் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களுடன் தனியார் விடுதியில் ஆலோசனை!

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களுடன், வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை மேற்கொள்கிறார். முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செம்மலை, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கணவர் வீட்டுக்குப் புறப்பட்ட மணமகள்; பிரியமறுத்த வளர்ப்பு நாயின் பாசமழை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சித்திரை திருமகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு செல்வன். இவரின் மகள் சுகப்பிரியா. சுகப்பிரியா வீட்டில் நாய் ஒன்றை பாசமாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் பொறியியல் பட்டதாரியான சுகப்பிரியாவுக்கும், சாஃப்ட்வேர் இன்ஜினீயரான அசோக் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களது திருமணம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு முகிலன்விளையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண மண்டபத்தில் திருமணம் முடிந்த பிறகு தனது வீட்டுக்குச் சென்ற சுகபிரியா, குடும்பத்தினரிடம் கூறிவிட்டு … Read more

துருக்கி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை குறிவைக்கும் ஏமாற்றுக்காரர்கள்! 48 பேர் கைது

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, கொள்ளையடித்த அல்லது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்ற முயன்றதற்காக 48 பேரை துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 42 சந்தேக நபர்கள் கைது கடந்த வாரம் திங்கட்கிழமை (பிப்ரவரி 6) ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, கொள்ளையடித்தல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக சந்தேக நபர்கள் 8 வெவ்வேறு மாகாணங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு ஹடாய் மாகாணத்தில் கொள்ளையடித்ததற்காக 42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், காசியான்டெப்பில் பாதிக்கப்பட்ட ஒருவரை … Read more

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ஐ.டி. ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ஐ.டி. ஊழியர் சரவணன் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு கொள்ளையர்களுக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் சொர்ணாம்பிகை கோயில்: பெண்களுக்கு மாங்கல்யப் பேறு, குழந்தைப் பேறு வேண்டி அம்மனுக்குப் பூஜை!

சேலம், பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்றதும், பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்ததுமான சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை திருக்கோயில். இந்தக் கோயிலில் உள்ள சொர்ணாம்பிகை அம்மனுக்கு வருடப் பிறப்பு, ஆடி வெள்ளி, சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, தை கடைசி வெள்ளி ஆகிய நாள்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை தாயாருக்கு நான்கு கால பூஜைகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. … Read more

உக்ரைன் தேசிய பாதுகாப்புப்படை உயர் அதிகாரியை அதிரடியாக நீக்கிய ஜெலென்ஸ்கி

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் உக்ரைனின் தேசிய பாதுகாப்புப்படையின் துணைத் தளபதியை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். உயர் அதிகாரி பணி நீக்கம் உக்ரைனில் ஊழல் தொடர்பில் சமீபத்திய வாரங்களில் டசன் கணக்கான அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தேசிய பாதுகாப்புப்படையின் துணைத் தளபதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகம் வழங்கிய சுருக்கமான ஆணையின்படி, தேசிய பாதுகாப்புப்படையின் துணைத் தளபதி ரஸ்லன் டிஜூபாவை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதவி நீக்கம் செய்தார் … Read more

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: ஐஜி கண்ணன் பேட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் கைவரிசை காட்டியவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்று ஐஜி கண்ணன் பேட்டியில் தெரிவித்துள்ளார். 4 ஏ.டி.எம். இயந்திரங்களில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி பேனரால் ஏற்பட்ட பகை; பாமக நிர்வாகியை நடுரோட்டில் அடித்துக் கொன்ற திமுக அனுதாபி!

வேலூர் அருகேயுள்ள சித்தேரி பகுதியைச் சேர்ந்த மோகன் – விஜயா தம்பதியின் 26 வயது மகன் பிரகாஷ். இவர், பாட்டாளி மக்கள் கட்சியில், அன்புமணி தம்பிகள் படை மண்டலச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான ராமகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. ராமகிருஷ்ணனும் பா.ம.க-வில்தான் இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற வேலூர் மாநகராட்சி தேர்தலின்போது ராமகிருஷ்ணன் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். இந்தப் பகுதிக்குள் ஒரே சமூக மக்கள் பெரும்பான்மையாக … Read more