விரைவில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: விரைவில் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிக்கையில், விரைவில் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் களத்தில் எந்த கட்சிகள் நிற்கும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

விப்ரோவில் 450 பேர் பணி நீக்கம்| 450 layoffs in Wipro

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, தன் ஊழியர்கள் 450 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. உலகளாவிய பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து, உலகின் முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ‘கூகுள், மைக்ரோ சாப்ட், டுவிட்டர், ஸ்விக்கி, அமேசான்’ ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவும், தன் ஊழியர்கள் 450 பேரை பணி நீக்கம் செய்து உள்ளது. இதுகுறித்து விப்ரோ நிறுவனம் கூறியதாவது: விப்ரோ நிறுவனத்திற்கு என … Read more

ஐக்கிய அரபு அமீரக உயர் அதிகாரி என கூறி நட்சத்திர ஓட்டலில் ரூ.23 லட்சம் கட்டணம் செலுத்தாமல் தப்பிய மோசடி ஆசாமி கைது

புதுடெல்லி, டெல்லியில் பிரசித்தி பெற்ற ‘தி லீலா பேலஸ்’ நட்சத்திர ஓட்டலுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு 1-ந்தேதியன்று, முகமது ஷெரீப் என்பவர் வந்தார். “நான் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் பலாஹ் பின் சயீத் அல் நஹ்யான் அலுவலகத்தில் முக்கியமான அதிகாரி” என்று சொல்லி அறை எடுத்தார். தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன் என்பதற்கான அடையாள அட்டையை வழங்கினார். விசிட்டிங் கார்டும் கொடுத்தார். அவரது நடை, உடை, பாவனை, வார்த்தைகளை ஓட்டல் … Read more

இலங்கை: “13-வது சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும்; பாஜக-வுக்கு நம்பிக்கை இருக்கிறது" – அண்ணாமலை

தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, இலங்கையில் 13-வது சட்டத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தமிழக பா.ஜ.க-வுக்கு இருப்பதாக இன்று தெரிவித்திருக்கிறார். அண்ணாமலை இதுகுறித்து அண்ணாமலை, “1987-ல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்பட்ட 13-வது சட்டத் திருத்தமானது, இலங்கையில் உள்ள மாகாணங்கள், சுயாட்சி மேற்கொள்ளும் வகையில், கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டுவசதி, நிலம், காவல்துறை போன்ற பிரிவுகளில் மாகாண நிர்வாகங்களுக்கு அதிகாரம் வழங்கியது. இலங்கைத் … Read more

வரும் 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: வரும் 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளக்தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் சில இடங்களில், லேசான மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது. கோவை, கடலுார், மதுரை, திருப்பத்துார், திருச்சி, திருவள்ளூர் மற்றும் வேலுார் மாவட்டங்களில், காலை நேர வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகம் பதிவானது. வரும், … Read more

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. 19-ம் தேதி நடந்த வெடி விபத்தில் ரவி என்பவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த ஜெயராஜ் என்பவர் மதுரை தனியார் மருத்துவனமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேசில் ராணுவ தளபதி அதிரடி நீக்கம்| Brazil military commander fired

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பிரேசிலியா, : தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகரில் சமீபத்தில் நடந்த கிளர்ச்சியை தடுக்க தவறிய, அந்நாட்டு ராணுவ தளபதியை, அதிபர் லுாயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அதிரடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். வன்முறை பிரேசிலில் கடந்த அக்டோபரில் நடந்த அதிபர் தேர்தலில் லுலா வெற்றி பெற்றார். முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோ, தன் தோல்வியை ஏற்க மறுத்து, ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டினார். … Read more

திரிபுரா சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்டு-காங்கிரஸ் கூட்டணியில் சேர மாட்டோம்: திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

அகர்தலா, பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில், அடுத்த மாதம் 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதையொட்டி, பா.ஜனதாவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து களம் காண்கிறது. இந்தநிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் திரிபுரா மாநில தலைவர் பியுஷ் கந்தி பிஸ்வாஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- திரிபுரா சட்டசபை தேர்தலுக்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-காங்கிரஸ் கூட்டணியில் திரிணாமுல் … Read more

Motivation Story: `பொன்னியின் செல்வன்’ எழுதிய கல்கி; தேடி வந்த அமைச்சர் பதவி; மறுத்ததன் காரணம்!

`காலியாக இருக்கும் ஒரு பதவிக்கு ஒருவரை நியமிக்கும் ஒவ்வொரு முறையும், நூற்றுக்கணக்கானவர்களை மகிழ்ச்சியற்றவர்களாக ஆக்குகிறேன்; ஒருவரை நன்றி கெட்டவராக ஆக்குகிறேன்.’ – பிரெஞ்ச் அரசர் பதினான்காம் லூயி பதவி… யாருக்குத்தான் பிடிக்காது… ஐந்நூற்றுச் சொச்சம் மக்கள் வாழும் பகுதிக்கு கவுன்சிலர் ஆவதற்கே பன்னிரண்டு பேர் போட்டி போடுகிறார்கள். நிலைமை இப்படி இருக்க, அமைச்சர், முதலமைச்சர், மத்திய அமைச்சர், பிரதமர், ஜனாதிபதிப் பதவிகளைப் பற்றியெல்லாம் சொல்லவே வேண்டாம். இவ்வளவு ஏன்… நீண்ட நாள் கழித்துச் சந்திக்கும் இரண்டு பேர் … Read more

சம்பள பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் இன்று ஆலோசனை

சென்னை: ஆசிரியர்களுக்கான ஜனவரி மாத சம்பள பிரச்னை குறித்து, நிதித்துறை அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வி அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இணைய தள பிரச்னையால், சம்பள பட்டுவாடாவில் அடிக்கடி சிக்கல் ஏற்படுவதற்கு சரியான தீர்வு காணவும், எதிர்காலத்தில் பிரச்னைகள் இன்றி, இணையதளத்தை செயல்படுத்துவது குறித்தும், நிதித்துறை அதிகாரிகளுடன், , பள்ளிக்கல்வி அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.