லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி லாட்டரி விற்பனை நிலையம் தொடங்கினார்!

கேரள லாட்டரியில் 25 கோடி ரூபாய் ஓணம் பம்பர் பரிசாக வென்ற அனூப் என்ற நபரை யாரும் மறந்திருக்க வாய்ப்பு இல்லை. திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூபுக்கு கேரள அரசு சார்பில் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி நடந்த திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான 25 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. தனது மகன் சேமித்து வைத்த உண்டியலை உடைத்து அந்த பணத்தில் 500 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கியதாகவும். … Read more

விளாடிமிர் புடின் திடீரென்று ஒருநாள் மாயமாகிவிடுவார்: உளவுத்துறை தலைவர் வெளிப்படை

உக்ரைன் உடனான இந்த மோசமான போரில் ரஷ்யா தோல்வியை தழுவும் என்றால், ஜனாதிபதி பொறுப்பில் இருந்து விளாடிமிர் புடின் ஒருநாள் காணாமல் போய்விடுவார் என பிரித்தானிய முன்னாள் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். புடினால் தாங்கிக்கொள்ள முடியாது பிரித்தானியாவின் MI6 அமைப்பின் முன்னாள் தலைவரான Sir Richard Dearlove தெரிவிக்கையில், உக்ரைனுடனான தோல்வி விளாடிமிர் புடினால் ஒருபோது தாங்கிக்கொள்ள முடியாது எனவும், அவரது அரசியல் வாழ்க்கை தற்போது ஊசலாடுகிறது எனவும் தெரிவித்துள்ளார். @getty மேலும், ரஷ்யாவின் முக்கியமான ஒரு தலைவர், … Read more

கமல்ஹாசன், வைகோ, திருமாவளவன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின், கூட்டணி கட்சி தலைவர்களான  வைகோ, திருமாவளவன் உள்பட  கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியதுடன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கோரினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இவிகேஎஸ் இளங்கோவன் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணி … Read more

காங்கிரசையும், கமல்ஹாசனையும் யாராலும் பிரிக்க முடியாது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

சென்னை: பாசத்திற்குரிய கமல்ஹாசனை இன்று சந்தித்து, இடைத்தேர்தலில் என்னை ஆதரிக்க வேண்டும் என கேட்டேன், நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக உறுதியளித்தார் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். கமல்ஹாசனின் இரத்தத்தில் தேசியமும், காங்கிரசும் கலந்திருக்கிறது. காங்கிரசையும், கமல்ஹாசனையும் யாராலும் பிரிக்க முடியாது. எனவே எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹோண்டா ஆக்டிவா H-Smart ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஸ்கூட்டர்களில் முதன்மை வகிக்கின்ற ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் H-Smart எனப்படும் ஸ்மார்ட் கீ வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி வடிவ அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. ஆக்டிவா H-Smart ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா ஸ்மார்ட் கீ ஸ்கூட்டரில் சாவி இல்லாத செயல்பாடுகளை வழங்குகின்றது. இதனால், ரைடர் ஹேண்டில்பார் லாக் அல்லது திறக்க உதவுதல், இருக்கைக்கு அடியில் உள்ள சேமிப்பை பயன்படுத்த மற்றும் முன்புறத்தில் உள்ள சுவிட்சை பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப மூடியைத் … Read more

“பசுவதையை நிறுத்தினால் பூமியிலுள்ள அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும்" – குஜராத் நீதிமன்றம்

2020-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் இருந்து மாடுகளை சட்டவிரோதமாக கடத்தியதாக ஒருநபர் கைதுசெய்யப்பட்டார். அந்த வழக்கு, தொடர்பான விசாரணைக்கு பிறகு அவருக்கு ஆயுள் தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நவம்பர் 2022 -ல் நீதிமன்றம் தனது உத்தரவை வழங்கியது. குஜராத் தபி மாவட்ட நீதிமன்ற முதன்மை மாவட்ட நீதிபதி சமீர் வினோத்சந்திர வியாஸ் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது பேசிய அவர், “பசு என்பது … Read more

தண்ணீரில் மயக்க மருந்து..இரண்டு வயது மகனுடன் ரயிலில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..சிக்கிய டிக்கெட் பரிசோதகர்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் ஓடும் ரயிலில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெரிந்த டிக்கெட் பரிசோதகர் உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் பெண்ணொருவர் தனது 2வயது மகனுடன் ரயிலில் பயணிக்க டிக்கெட் வாங்கினார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் டிசி ராஜு சிங், AC coach-யில் அமர வைப்பதாக கூறி அழைத்துள்ளார். அவர் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் என்பதால் குறித்த பெண்ணும் அவருடன் சென்றுள்ளார். அங்கு ராஜு சிங் கொடுத்த … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் பேட்டி…

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்   மக்கள் நீதி மையத்திடம் ஆதரவு கோரப்படும்  என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.  ஈரோடு கிழக்கு தொகுதியில், “மகனுக்கு தான் வாய்ப்பு கேட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாங்கள் தான் அவரை முன்னிறுத்தினோம் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், … Read more

நில அபகரிப்பு முயற்சி வழக்கில் முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் முன்ஜாமின் மனு தள்ளுபடி

நீலகிரி: நில அபகரிப்பு முயற்சி வழக்கில் முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. புத்தி சந்திரன் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.