செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மதுவில் விஷம் கலந்து கணவரை கொன்ற மனைவி கைது..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மதுவில் விஷம் கலந்து கணவர் சுகுமாரை கொன்ற மனைவி கவிதா கைது செய்யப்பட்டார். மதுராந்தகம் அருகே நடராஜபுரம் பகுதியை சேர்ந்த சுகுமார் (38), அரிலால் (49) விஷம் கலந்து மதுவை அருந்தியுள்ளனர். மதுவில் ஊசி மூலம் விஷம் செலுத்தி கணவர் சுகுமார், அவரது நண்பர் அரிலாலை கொன்ற மனைவி கவிதா கைது செய்யப்பட்டார்.

“2019 முதல் 2021 வரை சுமார் 1.12 லட்சம் தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை" – மத்திய அமைச்சர் தகவல்!

2019 முதல் 2021 வரையிலான காலகட்டம் என்பது கிட்டத்தட்ட உலகையே கொரோனா எனும் தொற்றுநோய் அச்சுறுத்திய காலகட்டம். அப்போதுதான் இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டது. இதில் புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை இந்த நிலையில், 2019 முதல் 2021 வரையில், 1.12 லட்சத்துக்கும் அதிகமான தினக்கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மக்களவையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், 2019-லிருந்து 2021 வரையிலான காலகட்டத்தில் உயிரிழந்த தினக்கூலி … Read more

மன்னர் சார்லஸின் மனைவி ராணி கமிலாவுக்கு இரண்டாவது முறை.., அரண்மனை அறிக்கை

மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவி ராணி கமிலாவுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவி ராணி கமிலாவுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. 75 வயதான ராணி கமிலா “பருவகால” நோயால் அவதிப்படுவதாகக் கூறப்பட்டது, ஆனால் பின்னர் எடுக்கப்பட்ட கோவிட் சோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், இப்போது அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யபட்டது. பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை Getty Images பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட … Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 37ஆயிரத்தை தாண்டியது.. ஐ.நா. உதவி…

துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 37,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் 50ஆயிரத்தை நெருங்கும் என ஐ.நா. தெரிவித்து உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.  இந்த நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில அதிர்வுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மிக்க கூடும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. … Read more

கிருத்திகா மீது வழக்குபதிய வாய்ப்புள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பு தகவல்

மதுரை: கிருத்திகா மீது வழக்குபதிய வாய்ப்புள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. கிருத்திகாவை கேரளா வழியாக 5 கார்களில் அடுத்தடுத்து குஜராத்திற்கு கடத்தி சென்றுள்ளனர். கிருத்திகா கடத்தல் தொடர்பாக சிசிடிவி வீடியோ காட்சிகள் உள்ளன என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

திரிபுரா சட்டசபை தேர்தல் எதிரொலி: ரூ.44 கோடி பறிமுதல்; தேர்தல் அதிகாரி தகவல்| Tripura assembly election reverberations: Rs 44 crore seized; Returning Officer Information

அகர்தலா: திரிபுராவில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, இதுவரை ரூ.44 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி கிரண்குமார் தினராவ் தகவல் தெரிவித்துள்ளார். வட கிழக்கு மாநிலமான திரிபுராவுக்கு பிப்., 16ம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டசபை தொகுதிகளுக்கு பிப்., 27ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள், மார்ச் 2ல் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா … Read more

இந்தியாவில் ரூ.51.43 லட்சத்தில் ஆடி Q3 ஸ்போர்ட் பேக் வெளியிடப்பட்டுள்ளது

இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ரூ.51.43 லட்சம் விலையில் ஆடி Q3 ஸ்போர்ட்பேக் எஸ்யூவி காரில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் மிக சிறப்பானதாக விளங்குகின்றது. இலவச சலுகையாக 2+3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் வழங்கப்படுகிறது. ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக், இந்தியாவில் தொடக்க நிலை சொகுசு எஸ்யூவி பிரிவில் முதல் கூபே ஸ்டைல் எஸ்யூவி மாடலாக விளங்குகின்றது. ஆடி Q3 ஸ்போர்ட் பேக் Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் Q3 எஸ்யூவி காரின் பவர்டிரெய்னைப் பகிர்ந்து கொள்கின்றன. 190hp, 320Nm … Read more

“மூணு மாச காதல்; 27 வருஷ கல்யாண வாழ்க்கை!" – பூ விற்கும் தேவகி அக்காவின் லவ் ஸ்டோரி

காதல் என்றதும் `ரோமியோ-ஜூலியட்’ தொடங்கி சர்ப்ரைஸ் செய்யும் காதல், பூங்கொத்து கொடுக்கும் காதல் என பெரும்பாலும் பேண்டஸி சார்ந்த விஷயங்களாகத்தான் நம் கண்முன் விரியும். ஆனால் `ஐ லவ் யூ’ கூட சொல்லிக் கொள்ளாமல் தன் துணையை இணையாகப் பார்த்து அவரின் கனவுக்கு துணை நிற்கும் ரசனைக்குரிய கியூட்டான காதல் கதைகளை நாம் கவனிக்காமல் கடந்து வந்திருப்போம். அப்படியான ஒரு கியூட் காதல் பகிர்வு இதோ… கணவருடன் தேவகி ரோஸ் டே முதல் ஹக் டே வரை… … Read more

பிரித்தானியா மீது கொண்டிருந்த வெறுப்பு: ரஷ்யாவுக்காக ஜேர்மனியில் உளவு பார்த்த பிரித்தானியர்

ஜேர்மனியில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றிய பிரித்தானியர் ஒருவர், பிரித்தானியா மீது கொண்டிருந்த வெறுப்பு காரணமாக ரஷ்யாவுக்காக உளவு பார்த்தது தெரியவந்துள்ளது. உளவு வேலையை எளிதாக்கிய தூதரகப் பணி   ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த டேவிட் (David Ballantyne Smith, 58), ஜேர்மனியிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாவலராகப் பணியாற்றிவந்துள்ளார். பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாவலராகப் பணியாற்றிய டேவிட், அதே ஜேர்மனியிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரி ஒருவருக்கு அனுப்பிய கடிதம் ஒன்று தற்செயலாக அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது. அதில் பிரித்தானிய … Read more