மதுரை விமான நிலைய பேருந்தில் ‘துரோகத்தின் அடையாளம் எடப்பாடியார்’ என FB Live போட்டு கூச்சலிட்ட சசிகலா ஆதரவாளர்!!
மதுரை : மதுரை விமான நிலைய பேருந்தில் ‘உடன் பயணித்த இளைஞர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியை துரோகத்தின் அடையாளம் என கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக வழங்கியவர்” என்று கூறினார். தொலைபேசியில் வீடியோ எடுத்தப்படியே கோஷமிட்ட அந்த இளைஞரை விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த இளைஞர் சிங்கம்புணரியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது.