4வது கட்சி: கட்சி கட்சியாக தாவிய மதுரை டாக்டர் சரவணன் எடப்பாடி பழனிச்சாமியிடம் தஞ்சம்!

சென்னை: பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம் எல் ஏ மருத்துவர் சரவணன் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். இவர் 4வது முறையாக கட்சி மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக இருந்து வந்த முன்னாள் எம்எல்எ டாக்டர் சரவணன், ஏற்கனவே மதிமுக,  திமுகவில் இருந்தவர். அங்கு பிடிக்காத நிலையில், பின்னர் பாஜகவில் இணைந்தார். அங்கும் கட்சி தலைமையிடம் ஒத்துவராத … Read more

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க தமிழ்நாடு அரசு குழு அமைத்ததற்கு ஜவாஹிருல்லா நன்றி..!!

சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க தமிழ்நாடு அரசு குழு அமைத்ததற்கு ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு குழு அமைத்ததற்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்துக்கொண்டார். தமிழக அரசின் நடவடிக்கையால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தடைபடாமல் இருக்கும் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

உங்களிடம் இருந்தே துவங்கட்டும் லஞ்ச ஒழிப்பு: வைரலாகும் விழிப்புணர்வு வீடியோ| Let Anti-Corruption Start From You: A Viral Awareness Video

புதுடில்லி: ஒரு நாட்டின் வளர்ச்சியானது சிறந்த மற்றும் நேர்மையான நிர்வாகத்தை பொறுத்து அமையும். வளர்ச்சி தடைப்படுமானால் அதற்கு மிகப்பெரிய காரணியாக இருப்பது லஞ்சம், ஊழல் தான். அதிகாரிகள் அனைத்திலும் ஊழல் செய்கின்றனர், எதற்கெடுத்தாலும் லஞ்சம் பெறுகின்றனர் என பெரும்பாலான மக்கள் புலம்புகின்றனர். ஆனால், லஞ்சம், ஊழலை வழிவகுக்க துவக்கப்புள்ளியே நாம் தான் என்பதை உணர வேண்டும். ஆமாம், லஞ்சம் கேட்டால் அதனை நாம் கொடுப்பதும், ஊழலை தட்டிக்கேட்காமல் இருப்பதும், நாட்டின் வளர்ச்சியையே பாதிக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் … Read more

விஜயகாந்தை கண்டு கண்ணீர் விட்ட தொண்டர்கள்… உடல்நிலையும் தேமுதிக-வினர் மனநிலையும்!

புரட்சிகர வசனங்களினாலும் அதிரடியான சண்டைக் காட்சிகளாலும் தமிழ்த் திரையுலகின் `புரட்சிக் கலைஞராக’ வலம் வந்தவர் விஜயகாந்த். கண்கள் சிவக்க, கைகள் முறுக்க சினிமாவைப் போலவே அரசியலிலும் பல அதிரடிகளை நிகழ்த்திக் காட்டியவர். ஒரு காலத்தில் கணீர் குரலாலும் கம்பீரத் தோற்றத்தாலும் தனது ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் ராஜநடை போட்டுக்கொண்டிருந்தவர், இப்போது உடல் நலக்குறைவால் பேச வார்த்தையில்லாமலும் எழுந்து நிற்க பலமில்லாமலும் வீல் சேரில் அமர்ந்திருக்கும் கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். முன்பு `கேப்டன்… கேப்டன்….’ என மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்த … Read more

திட்டங்கள் எதுவும் பலிக்கவில்லை: கடும் மன உளைச்சலில் ஹரி- மேகன் தம்பதி

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோரின் நெட்ஃபிளிக்ஸ் தொடர் பார்வையாளர்களை ஈர்க்காதது அவர்களை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன உளைச்சலில் ஹரி- மேகன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி இரண்டாவதாக வெளியிட்டுள்ள நெட்ஃபிளிக்ஸ் தொடர் Live to Lead மொத்தமாக தோல்வியடைந்தது என்றே கூறப்படுகிறது. முதன்மையான 100 தொலைக்காட்சி தொடர்கள் என்ற வரிசையிலும் இடம்பெறவில்லை என்பதால், ஹரி- மேகன் தம்பதி கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. @getty மேலும், குறித்த … Read more

சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை! தேவசம் போர்டு அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை  விதிக்கப்பட்டு உள்ளதாகவும்,  பம்பை முதல் சன்னிதானம் வரையில் எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் தேவசம் போர்டு என அறிவித்து உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஜனவரி 14ந்தேதி மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம்  நடைபெறுகிறது. இதையொட்டி, கோவில் நடை டிசம்பர் 30ந்தேதி  மாலை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவில் நடை  அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு … Read more

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாற்று தற்காலிக பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் போக்குவரத்துக்கு தடை விதித்து உத்தரவு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாற்று தற்காலிக பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் போக்குவரத்துக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் போக்குவரத்துக்கு தடை விதித்து எஸ்.பி சுதாகர் உத்தரவிட்டார்.

மதுரை: ரயில் பாதையில் விரிசல்; மொபைலில் படம் பிடித்து விபத்தைத் தடுத்த இளைஞர்!

ரயில்பாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளதைப் பார்த்து சமயோசிதமாகச் செயல்பட்ட இளைஞரை மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அழைத்து பரிசு கொடுத்துப் பாராட்டியுள்ளனர். ரயில்வே மதுரை அருகே சமயநல்லூர் – கூடல் நகர் பிரிவு ரயில் பாதை அருகே வசித்து வருகிறார் சுந்தர மகாலிங்கம். இவர் மகன் சூர்யா கடந்த டிசம்பர் 15 அன்று காலை 8 மணியளவில் தனது வீட்டு அருகே செல்லும் ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டார். அதை என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தவர், … Read more

குடும்பத்துடன் மோதல்! சிம்ம ராசிக்காரரான மேகன்… இளவரசி டயானாவின் ஜோதிடர் கணிப்பு

பிரபல ஜோதிடரும் மறைந்த இளவரசி டயானாவின் நம்பகமான நண்பருமான டெபி ஃபிராங்க், மேகன் மெர்க்கல் தொடர்பான எதிர்காலத்தை கணித்துள்ளார். மேகன் பிரகாசிக்கப் பிறந்தவர்  அதன்படி 2023 ஆம் ஆண்டில் மேகன் பல இன்னல்களை சந்திப்பார் என டெபி கூறியிருக்கிறார். அதே நேரம் சிம்ம ராசிக்காரரான மேகன் பிரகாசிக்கப் பிறந்தவர் என குறிப்பிட்டுள்ள டெபி, அவருக்கு 2023 ஆம் ஆண்டு மிகவும் நிறைவான ஆண்டாக இருக்கும் என கணித்துள்ளார். அவரது போராடும் குணம், மே மாதம் முடி சூட்டும் … Read more