ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 238 வாக்குச்சாவடிகளிலும் இறுதி கட்ட ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஆன்மிக ஹெலிகாப்டர் சேவை: புதுச்சேரி அரசு அதிரடி திட்டம்| Spiritual Helicopter Service: Puducherry Government Action Plan

புதுச்சேரி: புதுச்சேரியில், ஆன்மிக ஹெலிகாப்டர் சேவை விரைவில் துவக்கப்பட உள்ளது.வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில், 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கெங்கவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோவில், காசியைவிட புகழ்பெற்றதாக போற்றப்படுகிறது. இந்நிலையில், புனிதமான சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 15ம் தேதியன்று துவங்கும் புஷ்கரணி திருவிழா, தொடர்ந்து 15 நாட்களுக்கு நடக்கிறது. இதில், புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் … Read more

Doubt of Common Man: பத்ம விருதுகள் யாருக்கு வழங்கப்படுகின்றன? அதற்கு விண்ணப்பிப்பது எப்படி?

விகடனின் Doubt of Common man பக்கத்தில் பத்ம விருதுகள் யாருக்கு வழங்கப்படுகின்றன? அதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இதுகுறித்து கல்வியாளர் தேனி மு.சுப்பிரமணி விளக்கமளித்திருக்கிறார். இந்தியாவின் உயரிய குடியியல் விருதுகளாக பத்ம விருதுகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளை முன்னிட்டு, இந்திய அரசால் அறிவிக்கப்படும் இவ்விருதுகள் பத்ம விபூசன், பத்ம பூசன், பத்மஸ்ரீ என்று மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகள் இந்திய அரசு 1954 ஆம் ஆண்டில் பாரத … Read more

தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் காலை 6.25 முதல் 6.27 வரையும், இரவு 8.38 முதல் 8.40 வரை 2 நிமிடங்கள் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திமுக எம்.பி.க்களின் தொடர் அழுத்தத்தால் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது என கொடியசைத்து தொடக்கி வைத்தபின் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டி அளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவு

பைசாபாத்: ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. பைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை 02.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 180 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவு!

பப்புவா நியூ கினியாவில் இந்திய நேரப்படி காலை 4.20 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகியுள்ளது. கட்டடங்கள் குழுங்கியதால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

“இனி முத்ததிற்கு பஞ்சம் இல்லை” காதலர்களுக்காக வந்தாச்சு Remote Kissing device! சீனா அசத்தல்

சீனாவை சேர்ந்த ஜியாங் சோங்லி என்ற நபர், தொலைதூரக் காதலர்கள் தங்களது உண்மையான முத்தத்தை பரிமாறிக் கொள்வதற்காக remote Kissing device என்ற புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளார். ரிமோட் கிஸ் சாதனம்  சீனாவில் உள்ள சாங்கோ தொழிற்கல்வி என்ற நிறுவனம் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதன்படி உலகம் முழுவதும் பயனர்களை மின்னணு முறையில் முத்தம் அனுப்ப இந்த சாதனம் அனுமதிக்கிறது. இந்த ரிமோட் கிஸ் சாதனம் ஒரு ஜோடி சிலிகான் உதடுகளாகும், அதில் உள்ள அழுத்த உணரிகள் மற்றும் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,797,492 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.97 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,797,492 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,557,447 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,358,072 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,549 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதம்: ஜேர்மனியில் போராட்டத்தில் குதித்த ஆயிரக்கணக்கான மக்கள்

போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்குவதை எதிர்த்து ஜேர்மனிய தலைநகர் பெர்லினில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜேர்மனியில் போராட்டம் ஜேர்மனி, அமெரிக்காவுடன் சேர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்குவதை எதிர்த்து ஜேர்மனிய தலைநகர் பெர்லினில் கிட்டத்தட்ட 10,000 மக்கள் சனிக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்த பலகையில், “பேச்சுவார்தை நடத்துங்கள், மோதலை அதிகரிக்க வேண்டாம், நம்முடைய போர் அல்ல” என்பது … Read more