என் நிழலைக் கூட நெருங்க முடியாது! யாரை சொல்கிறார் சசிகலா…?

திருவாரூர்:  மக்களவைத் தேர்தலுக்குள் அதிமுக இணைப்பு நடக்கும் – எனது நிழலைக்கூட யாரும் நெருங்க முடியாது என்று  சசிகலா ஆவேசமாக கூறினார். அவரது இன்றைய பேட்டி,   அதிமுக காலடியில் கிடக்கும் பாஜகவை சீண்டும் வகையிலேயே  அமைந்துள்ளதுடன், திமுகவையும் கடுமையாக சாடியுள்ளார். அதிமுக இரண்டாக பிரிந்துள்ள நிலையில், நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுவின் இரு தரப்பும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளதால், கட்சியின் சின்னமும் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிமுக … Read more

சென்னை விமான நிலையம் முதல் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்க ஒப்புதல்

சென்னை: சென்னை விமான நிலையம் முதல் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாக ஆர்.டி.ஐ  மூலம் கேட்ட கேள்விக்கு அரசு பதிலளித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் மெட்ரோ பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லியில் கட்டடங்கள் குலுங்கின| Powerful earthquake in Nepal: Buildings shook in Delhi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நேபாளத்தில் இன்று (ஜன.,24) மதியம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டில்லியில் பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இந்திய எல்லை அருகே, நேபாள நாட்டில் இன்று மதியம் 2:28 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் நிலத்திற்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டில்லியின் பல … Read more

ஜேர்மனியில் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம்: 5 பேர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு

ஜேர்மனியில் ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் ஜேர்மனியில் அரசாங்கத்தை கவிழ்க்க தீவிர வலதுசாரி சதி செய்ததாக ஐந்து பேர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது, இதில் சுகாதார அமைச்சரைக் கடத்தும் திட்டங்களை உள்ளடக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சதித்திட்டத்தின் பேரில் சமீபத்திய மாதங்களில் 4 ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர். கோவிட்-எதிர்ப்பு நடவடிக்கைகளால் கடும் எதிர்ப்பை சம்பாதித்த சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் தீவிர … Read more

தெலுங்கானா புதிய சட்டப்பேரவை கட்டிடம் திறப்பு விழா: தமிழக முதலமைச்சருக்கு அழைப்பு…

‘ஐதராபாத்:  தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலக திறப்பு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகரில் உசைன் சாகர் ஏரிக்கு அருகே உள்ள கட்டிடத்தில் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் சரித்திர புகழ் வாய்ந்தது ஆகும்.  இந்த கட்டிடத்தில் வாஸ்து சரியில்லை என கூறப்பட்டது.  இதையடுத்து, புதிய கட்டிடம்  கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தலைமை செயலகத்துக்கு ரூ.400 கோடி செலவில் ஒரு … Read more

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில் அடுத்தடுத்து சதம்..!!

இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில் அடுத்தடுத்து சதம் விளாசினர். இந்தூரில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 82 பந்துகளில் சதம் அடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தமது 30வது சதத்தை ரோஹித் சர்மா பூர்த்தி செய்தார். மற்றொரு தொடக்க வீரர் சுப்மான் கில் 93 பந்துகளில் 103 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

பா.ஜ., ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதல்: டில்லி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு| BJP, AAP councilors clash: Delhi Mayoral election postponed again

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் மேயர், துணைமேயர் தேர்தல் இன்று(ஜன.,24) மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.,104 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து சில நாட்களுக்கு முன் புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அப்போது மாநகராட்சிக்கு 10 நியமன உறுப்பினர்களை டில்லி கவர்னர் சக்சேனா நியமித்தார். தொடர்ந்து பா.ஜ., கவுன்சிலர் சத்யா சர்மாவை, மேயர் … Read more

2023 – 24 வேளாண் பட்ஜெட்: விவசாயிகள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் கருத்துகளை கூறலாம்..!

வரும் 2023-24 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு, விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்கள்ஆகியோர் கருத்துகளை தெரிவிக்கலாம் என வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வருமானம் உயர்வதற்காக தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கையினை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை … Read more

கண்டம் தாண்டி ஒலித்த நடிகர் விஜய்யின் புகழ்! நெகிழ்ந்து பேசிய கனடா பெண் மேயர்

கனடாவில் விஜய் ரசிகர்கள் மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான பணிகளை பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்டு பாராட்டியுள்ளார். சிறப்பான முறை சமூகப் பணிகள் இது தொடர்பாக கனடாவின் பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்டு வெளியிட்ட வீடியோவில், கனடாவில் செயல்படும் விஜய் மக்கள் இயக்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன், மிகச் சிறப்பான முறையில் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமூகப் பணிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர வேண்டும் என கூறினார். Hon’ble Mayor @MariannMeedWard … Read more