பைடன் விசிட்… புதின் அதிரடி – ஓராண்டைக் கடந்தும் ஓயாத போர் – பின்னணி என்ன?!

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு, பிப்ரவரி 24 அன்று தொடங்கிய இந்தப் போர் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதுதான் உலக மக்களின் வேண்டுகோளாக இருந்துவருகிறது. ஆனால், போர் முடிவடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்பதே உண்மை. என்ன நடக்கிறது உக்ரைன் – ரஷ்யா போரில்? உக்ரைன் சென்ற பைடன்! கடந்த பிப்ரவரி 20-ம் தேதி அன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், … Read more

பிரித்தானியாவில் கூடுதல் வேலை விசாக்கள்: இந்தியர்களுக்கு வழங்கப்படும் அதிகமான வாய்ப்புகள்

தொற்று நோய்க்கு முன்பை விட, கடந்த ஆண்டு பிரித்தானியா இருமடங்கு வதிவிட விசாக்களை வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியர்களுக்கு கூடுதல் விசா கொரோனா தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தை விட  கடந்த ஆண்டு மொத்தம் 1.4 மில்லியன் விசாக்கள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது 2019ம் ஆண்டு 7,14,300 ஆக இருந்தது. இதற்கு அதிகமான மக்கள் பிரித்தானியாவிற்கு வேலை செய்ய மற்றும் படிக்க வந்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  தொற்று நோய் காலத்தில் பயணங்கள் முடக்கப்படுவதற்கு முன்பு வரை, … Read more

உ.பி: திருமணம் மீறிய உறவு; திருமணத்துக்கு வற்புறுத்திய 30 வயது பெண் – 17 வயது சிறுவன் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம், சாஜஹான்பூர் பகுதியில் வசிப்பவர் மொஹமத் உஸ்மான். இவரின் மகன் 17 வயதான சிறுவன், டெய்லர் வேலை செய்துவந்தான். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இந்தச் சிறுவனுக்கு, வேலை செய்த கடைக்கு அருகில் வசிக்கும் 30 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருவருக்கும் சாதாரணமான பழக்கம்தான் இருந்தது. அதுவே நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியது. இவர்களின் உறவு குறித்து 30 வயது பெண்ணின் குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. இதையடுத்து இந்த உறவுக்கு அந்தப் பெண்ணின் … Read more

அடுத்தடுத்து இரண்டு இரட்டை குழந்தைகள்! 'மோமோ' இரட்டையர்களைப் பெற்றெடுத்த அமெரிக்க பெண்

ஒரு அரிய நிகழ்வில், அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு தொடர்ச்சியான கர்ப்பம் இருந்தது, இதன் விளைவாக இரண்டு ஜோடி ஒரே மாதிரியான இரட்டையர்கள் (Identical Twins) பிறந்தனர். இரண்டு முறை இரட்டைக் குழந்தைகள் பர்மிங்காமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தின் செய்திக்குறிப்பின்படி, அமெரிக்கவைச் சேர்ந்த பிரிட்னி ஆல்பாவுக்கு (Britney Alba) லூகா (Luka) மற்றும் லெவி (Levi) என்று அழைக்கப்படும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்தனர். இந்த முதல் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு … Read more

கள்ளநோட்டு வழக்கில் ஜாமின் கோரிய 2 பேரின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை

மதுரை: கள்ளநோட்டு வழக்கில் ஜாமின் கோரிய 2 பேரின் மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. சங்கரன்கோவில் பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை கடத்திய சந்தோஷ், பாலசுப்ரமணியன் கைது செய்யப்பட்டனர். வழக்கில் ஜாமின் கோரி இருவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு! -ஜனாதிபதி, முதல்வர், நம்மாழ்வார் ருசித்த கதை!

வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டது இலவம்பாடி முள்கத்திரிக்காய். இலவம்பாடி முள்கத்திரிக்காயைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இந்த ரகத்தைப் பரவலாக்கும் பணியில் ஈடுபட்டு வரும், விவசாயி ரமேஷிடம் பேசியபோது, ‘‘இலவம்பாடிங்கறது ஒரு சின்ன கிராமம். ஆனா, எங்க ஊர் முள்கத்திரிக்காயால, கிராமத்தோட பேரு நாடு முழுக்கப் பிரபலமாயிடுச்சு. ரமேஷ் & இலவம்பாடி முள் கத்திரிக்காய் `மிளகு பதப்படுத்தும் மையம்; புவிசார் குறியீடு!’ – மகிழ்ச்சியில் கொல்லிமலை மலைவாழ் மக்கள் பல தலைமுறைகளா எங்க ஊர் விவசாயிங்க இதைச் சாகுபடி … Read more

'8 வயதிலிருந்தே ஆசைப்பட்டேன்' திருமண நாளில் மருத்துவ தேர்வெழுதிய கேரள மணப்பெண்

திருமண கோலத்தில் மருத்துவ தேர்வெழுதிய கேரள இளம்பெண்ணின் சுவாரசியமான கதையை இங்கே பார்க்கலாம். திருமண கோலத்தில் மருத்துவ தேர்வு இன்றைய காலகட்டத்திலும், ஒரு பெண் தான் எதிர்கொள்ளும் பல தடைகளை மீறி சமூகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவது கடினம். ஆனால், வயது அல்லது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் மக்களை எப்போதும் ஊக்குவிக்கும் பல ஊக்கமளிக்கும் கதைகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒன்று தான் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ லெக்ஷ்மி அனிலின் கதை.  @officialhumansofbombay வைரலான வீடியோ ஸ்ரீ லெக்ஷ்மி … Read more

அதிமுக ஆட்சியை விட்டு செல்லும்போது கஜானாவை காலி செய்ததுடன் கடனையும் விட்டு சென்றது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: இளங்கோவனை தேர்தெடுத்தால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல நல்ல திட்டங்களை கொண்டு வருவார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி பரப்புரையில் தெரிவித்துள்ளார். ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் மக்களோடு மக்களாக இருந்து திமுக செயல்பட்டது என்று அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியை விட்டு செல்லும்போது கஜானாவை காலி செய்ததுடன் கடனையும் விட்டு சென்றதாக  முதலமைச்சர் கூறினார்.

ஆன்லைன் காதலனுக்காக நாடுகள் கடந்து இந்தியா வந்த பாகிஸ்தான் பதின்பருவ பெண்; பெற்றோரிடம் ஒப்படைப்பு!

பாகிஸ்தானில் தெற்கு சிந்து மாகாணத்தின் ஹைதராபாத் நகரத்தில் உள்ள ஷாஹி பஜாரில் வியாபாரம் செய்து வருபவர் சோஹைல் ஜீவானி. இவரின் மகள் இக்ரா ஜீவானி (வயது 16) கல்லூரியில் படித்து வந்தார். இக்ரா ஜீவானி ஆன்லைனில் ‘லுாடோ’ என்ற விளையாட்டை விரும்பி விளையாடிவந்தார். இந்த விளையாட்டு மூலம் இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முலாயம் சிங் (வயது 26), என்ற இளைஞருடன் நெருங்கிப் பழகி வந்தார். இன்ஸ்டா காதல் `ஒரு தேங்காய், ஒரு ரூபாய் போதும்!’ … Read more