`நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்கணும்' – ரூ.72 லட்சம் வசூலித்த வழக்கறிஞர் சிக்கினார்

கேரள மாநில உயர் நீதிமன்றம் கொச்சியில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள நீதிபதிகளான குஞ்ஞிகிருஷ்ணன், முஹம்மது முஸ்தாக், சியாத் ரஹ்மான் ஆகியோருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சைபி ஜோஸ் கிடங்கூர் என்பவர் பலரிடம் பணம் வசூலித்துள்ளதாக உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் டீம் கண்டுபிடித்துள்ளது. வழக்குகளில் இருந்து விடுவிப்பதற்காக லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும் என வக்கீல் சைபி ஜோஸ் கிடங்கூர் 72 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றதாக உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. … Read more

உக்ரைன் போரில் காணாமல் போன பிரித்தானியர்கள்: இறுதியில் வெளிவந்துள்ள பகீர் தகவல்

உக்ரைன் போரில் தன்னார்வலர்களாக செயல்பட்டு வந்த இரண்டு பிரித்தானியர்கள்  கிறிஸ்டோபர் பாரி மற்றும் ஆண்ட்ரூ பாக்ஷா உயிரிழந்து விட்டதாக (FCDO) செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. காணாமல் போன பிரித்தானியர்கள் உக்ரைன்-ரஷ்யா போர் நடவடிக்கையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கி உதவி வருகின்றனர். அந்த வகையில் உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பொதுமக்கள் வெளியேற்றம் மற்றும் மனிதாபிமான முயற்சிகளில் ஈடுபட்டு இருந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ பாக்ஷா(Andrew Bagshaw) மற்றும் கிறிஸ்டோபர் பாரி(Christopher Parry) ஆகிய … Read more

ஜனவரி 25: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 249-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 249-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சுருக்கு மடி வலை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி| சுருக்கு மடி வலை பயன்படுத்த அனுமதி

புதுடில்லி தமிழகத்தின் கடல் எல்லையைத் தாண்டியுள்ள பகுதியில், நிபந்தனைகளுடன் சுருக்கு மடி வலை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு, தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் தடை விதித்துள்ளன. சாதாரண மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹீமா கோஹ்லி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, நேற்று பிறப்பித்த … Read more

டெல்லி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு : பின்னணி என்ன?

புதுடெல்லி, 250 இடங்களை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் 4-ந்தேதி தேர்தல் நடந்தது. 7-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. 3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் 134 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.வோ 104 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் கிடைத்தன. மேயர் தேர்தல் ஒத்திவைப்பு டெல்லி மாநகராட்சி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 6-ந்தேதி நடக்க … Read more

நான்கு வயதில் ஏழு மொழிகள்…சிறுவயதில் மென்சா IQ சமூகத்தில் இணைந்த பிரித்தானிய சிறுவன்

பிரித்தானியாவில் 4 வயது சிறுவன் டெடி ஹோப்ஸ், சிறுவயதிலேயே ஏழு மொழிகளில் படிக்கவும், எண்ணவும் முடிவதால் அவர் பிரித்தானியாவின் இளம் மென்சா உறுப்பினராக உருவாகியுள்ளார்.   4 வயது சிறுவன் அசத்தல் பிரித்தானியாவில் சோமர்செட்டின்(Somerset) போர்ட்ஸ்ஹெட் நகரைச் சேர்ந்த டெடி ஹோப்ஸ் என்ற நான்கு வயது சிறுவன், தனது சிறுவயதிலேயே  ஏழு மொழிகளில் படிக்கவும், எண்ணவும் முடிவதால் அவர் பிரித்தானியாவின் இளம் மென்சா உறுப்பினராக உருவாகியுள்ளார். டெடி தனது இரண்டு வயதில் பெற்றோர் உதவி கூட இல்லாமல் தொலைக்காட்சியைப் … Read more

விஜயாஸனர் திருக்கோயில், நத்தம்

விஜயாஸனர் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், நத்தத்தில் அமைந்துள்ளது. நத்தம் என்று ‌சொன்னால்தான் பலருக்கு புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்‌த்தனைப்படி விஜயாசனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி ‌‌கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம். நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு … Read more

ஜன-25: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.