கைவினை கலைஞர்களை தொழில்முனைவோராக்குவோம்| Lets turn artisans into entrepreneurs
புதுடில்லி:”நம் நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் கைவினை கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை ஒரு இயக்கமாக செயல்படுத்துவோம். கைவினை கலைஞர்களை, தொழில்முனைவோராக்குவதே அரசின் நோக்கம்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். கருத்தரங்கம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் பெறும், இணையக் கருத்தரங்குகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதன் கடைசி இணையக் கருத்தரங்கம் நேற்று நடந்தது. ‘பிரதமர் விஸ்வகர்மா குஷால் சம்மான்’ எனப்படும் கைவினை கலைஞர்கள் மேம்பாட்டு திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more