டிபாசிட்டை அ.தி.மு.க., தக்கவைத்து கொண்டதே பெரிய வெற்றி தான் என்பதை இவர் ஏத்துக்க மாட்டாரா?| Speech, interview, report

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: ஈரோடு இடைத்தேர்தல் முடிவு, அ.தி.மு.க., தொண்டர்கள் ஒவ்வொருவரையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. பல காரணங்களால் பொது மக்கள், தி.மு.க., அரசின் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்தனர். இதை சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெறாமல், வரலாறு காணாத படுதோல்வியை அ.தி.மு.க., அடைந்துள்ளது. கட்சிக்காக உழைத்தவர்களை உதறித் தள்ளியது; பணத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனைந்தது போன்ற நம்பிக்கை துரோகங்கள் தான் இதற்கு காரணம். ஆளுங்கட்சியின் பண, படைபலத்துக்கு முன்னாடி, ‘டிபாசிட்’டை அ.தி.மு.க., தக்கவைத்து … Read more

`எம்ஜிஆர் மாளிகையா, கலைஞர் மாளிகையா?' – முடிவுக்கு வந்த நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக பெயர் விவகாரம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில், முன்பு நகராட்சியாக இருந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் குறுகலான சாலையில் இருப்பதால் போக்குவரத்து சிரமம் இருந்துவந்தது. அதை போக்கும் விதமாக அன்றைய நகராட்சி கமிஷனராக இருந்த சரவணகுமார் புதிய அலுவலகம் கட்ட தேர்வு செய்த இடம்தான் அண்ணா விளையாட்டு மைதானம் அருகில் உள்ள கலைவாணர் அரங்கம் பகுதி. சரவணக்குமார் பழைய கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டும்போதே சில எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் … Read more

இளநிலை நீட் தேர்வுக்கு முதல் விண்ணப்பிக்கலாம்…

டெல்லி: இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பம் இன்றுமுதல் (மார்ச் 6ந்தேதி) தொடங்குவதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவத்துறை சார்ந்த துணை படிப்புகளுக்கு, நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு … Read more

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் தொடங்கியது

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் தொடங்கியது. neet.nta.nic.in என்ற இணையத்தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது.

பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி| Bramos missile test success

புதுடில்லி : பிரமோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை நேற்று வெற்றிகரமாக ஏவி சோதனை செய்தது. இந்தியா – ரஷ்யா கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் சக்தி கொண்டது. இந்த ஏவுகணை, கப்பல், விமானம், நீர் மூழ்கி கப்பல் மற்றும் தரை வழியாக என பல நிலைகளில் இருந்து ஏவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய கடற்படை அரபி கடல் பகுதியில் நேற்று நடத்திய சோதனையில், ஏவுகணை இலக்கை … Read more

“முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சி…" – திமுகவை சாடிய அண்ணாமலை

வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பரப்பப்பட்ட வதந்தி பீகார் சட்டமன்றம் வரை எதிரொலித்தது. அதன் காரணமாக பல்வேறு அரசியல் சலசலப்புகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கின்றன. இது குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, “வெறுப்பையும் பகையையும் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க.வின் மாநிலத் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அண்ணாமலை, `வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?’ என்று கேட்பது வெட்கக் கேடு” என அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆர்.எஸ் பாரதி அதைத் தொடர்ந்து பா.ஜ.க மாநிலத் … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளம்பெண்கள்… பிரித்தானியாவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

பிரித்தானியாவில் வேல்ஸ் பகுதியில் இருந்து கடந்த 36 மணி நேரமாக மாயமாகியுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளம்பெண்கள் தொடர்பில் பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். வெள்ளிக்கிழமை முதல் மாயம் நியூபோர்ட் பகுதியில் அமைந்துள்ள Muffler இரவு விடுதிக்கு சென்ற Sophie Russon(20), Eve Smith(21), மற்றும் Darcy Ross(21) ஆகியோரே வெள்ளிக்கிழமை முதல் மாயமாகியுள்ளனர். Credit: Facebook இவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், இந்த மூன்று இளம்பெண்களுடன் இரு ஆண்களும் காணப்பட்டதாகவும், தற்போது … Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாசித்தேரோட்ட விழா

நெல்லை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாசித்தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  பெரிய தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். சுப்பிரமணியர் சுவாமி, வள்ளி, தெய்வானை ஆகியோர் ஒரே தேரில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.

Morning Motivation: அக்கறை நல்லது! – `சூடான எலுமிச்சைப்பழச்சாறும் தேனும்’ உணர்த்தும் சேதி!

`சில நேரங்களில், கருணையும் அக்கறையும் கலந்த ஒரே ஒரு சம்பவம், ஒருவரின் வாழ்கையையே மாற்றிவிடும்.’ – ஜாக்கி சான் `ஹாவ் எ நைஸ் டே.’ பெருநகரங்களில் வசிப்பவர்கள் இந்த வசனத்தை தினமும் ஒரு முறையாவது கேட்டிருப்பார்கள். லிஃப்டில் ஒலிக்கும் இயந்திரக் குரலில் தொடங்கி, பெரிய விற்பனையகங்களின் வரவேற்பறை வரை இந்த வசனத்தைக் கேட்டிருப்போம். `இன்றைய தினம் சிறந்த தினமாக’ இருப்பது இருக்கட்டும். உண்மையான அக்கறையோடுதான் அந்த வாசகத்தை நமக்குச் சொல்கிறார்களா என்பது மிகப்பெரிய கேள்வி. Morning Motivation … Read more

கருங்கடல் உணவு தானிய ஏற்றுமதி: ஒப்பந்தத்தை நீட்டிக்க துருக்கி கடுமையான முயற்சி

உக்ரைன் ரஷ்யா இடையிலான கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் முயற்சியில் துருக்கி செயல்பட்டு வருவதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் Mevlut Cavusoglu தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா தானிய ஒப்பந்தம் தானிய உற்பத்தியில் முன்னணி நாடுகளாக திகழும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், உலக அளவில் மிகப்பெரிய தானிய தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து உக்ரைனில் இருந்து தானியங்களை வெளியேற்றும் புதிய … Read more