ம.பி: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி; புல்டோசர் ஆக்‌ஷன் எடுத்த பெண் காவலர்கள்! – நடந்தது என்ன?

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் புல்டோசர் கலாசாரம் அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புல்டோசர் பாபா என்றுதான் அழைக்கின்றனர். எந்த ஒரு குற்றத்தில் ஈடுபட்டாலும் சந்தப்பட்ட நபரின் வீடு அல்லது இடங்களில் சட்டவிரோதமாக இருக்கும் கட்டமைப்புகளை புல்டோசரைக்கொண்டு உடனடியாக இடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த கலாசாரம் இப்போது அருகில் உள்ள மத்திய பிரதேசத்திற்கும் பரவியிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் தமோஹ் என்ற இடத்தை சேர்ந்தவர் கெளஷல் கிஷோர். கிஷோரும் அவரின் நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து அங்குள்ள … Read more

பிரித்தானியாவில் பல்டியடித்து கொண்டு பட்டம் பெற்ற சீன பெண்: இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

பிரித்தானிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சீன மாணவி ஒருவர் பல்டியடித்து சாகசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பல்டியடித்த சீன மாணவி பிரித்தானியாவின் ரோஹாம்ப்டன் பல்கலைக்கழத்தில் சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது நடிப்பு மற்றும் நடனப் பயிற்சி துறையில் பட்டம் பெற காத்து இருந்த சீனாவை சேர்ந்த சென் யினிங் (chen yining) பெயர் வாசிக்கப்பட்டது. Chinese student Chen Yining陈奕宁in UK, celebrating graduation in Kung fu style, remembered by teachers and … Read more

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தொடர்பான செய்திகளை வெளியிட்ட 6 யூடியூப் சேனல்கள் முடக்கம்!

டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தொடர்பான செய்திகளை வெளியிட்ட 6 யூடியூப் சேனல்களை மத்தியஅரசு முடக்கி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி அரசு பொறுப்பேற்றது முதல் காலிஸ்தான்கள் ஆதரவாளர்களிடன் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பஞ்சாப்பில் காலிஸ்தான் கோஷங்கள் மீண்டும் உயிர்பெறத் தொடங்கி உள்ளன இதையொட்டி, பல யுடியூப் சேனல்களும் தொடங்கப்பட்டு காலிஸ்தான் ஆதரவு செய்திகள் வெளியாகி வந்தன. சமீபத்தில், காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் அஜ்னாலா போலீஸ் நிலையத்தில் புகுந்து … Read more

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி உள்பட 3 கடைகளில் கொள்ளை

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி உள்பட 3 கடைகளில் கொள்ளை அடித்துள்ளனர். காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடியின் பூட்டை உடைத்து ரூ.58,000 பணத்தை மர்மநபர்கள் திருடியுள்ளனர். ராஜா அண்ணாமலை பகுதியில் உள்ள தையல் கடை, பல்பொருள் அங்காடியிலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

செல்போன்களில் வரும் `லிங்க்’கை தொட வேண்டாம்! பொதுமக்களுக்கு டி.ஜி.பி. எச்சரிக்கை

சென்னை: செல்போன்களில் வரும் `லிங்க்’கை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு  எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவையற்ற லிங்கை தொட்டால் உங்கள் பணம் கொள்ளைபோய்விடும் என அறிவுறுத்தி உள்ளார். டிஜிட்டல் வளர்ச்சியின் பயனாக டிஜிட்டர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. சமீப காலமாக இணையதளம், மற்றும் ஆப்கள் மூலம் பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க தமிழ்நாடு காவல்துறை பல்வேறு விழிப்புணர்களை ஏற்படுத்தி வருவதுடன், சைபர் கிரைமும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இருந்தாலும் ஏமாறுபவர்கள் எண்ணிக்கை … Read more

சென்னை அருகே படப்பையில் இருசக்கர வாகன பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு

காஞ்சிபுரம்: சென்னை அருகே படப்பையில் இருசக்கர வாகன பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் திருடி சென்றுள்ளனர். பணத்தை பறிகொடுத்த சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர் வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

“தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மறைமுக ஒப்பந்தம்… நாடகம் நடக்கிறது" – சி.வி.சண்முகம் சாடல்

விழுப்புரம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அறக்கட்டளை ஒன்றின் துவக்க விழாவில் நேற்றைய தினம் கலந்து கொண்டார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம். அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடையே பேசிய அவர், “ஸ்டாலின் தலைமையிலான இந்த திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் போதை களமாக மாறி இருக்கிறது. எங்கே பார்த்தாலும் போதை. டாஸ்மார்க் 24 மணி நேரமும் செயல்படுகிறது. கஞ்சா அனைத்து பகுதிகளிலும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம், விலை மதிப்பில்லாத இளைஞர்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,811,196 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.11 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,811,196 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,397,023 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,258,193 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,329  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.