ராகுல் காந்தியின் யாத்திரை வாக்கு திருட்டுக்கானது அல்ல; அது… அமித்ஷா பரபரப்பு பேச்சு

பாட்னா, பீகார் சட்டசபை தேர்தல் வருகிற அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், ரோத்தாஸ் நகருக்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொரு முறையும் பொய்யான கதைகளை பரப்பி வருகின்றனர். ராகுல் காந்தி யாத்திரை ஒன்றை மேற்கொண்டார். அது வாக்கு திருட்டுக்கானது அல்ல. நல்ல கல்வி, … Read more

கர்சிப்பால் முகத்தை துடைப்பதை வைத்து அரசியல் செய்வது வேதனையாக உள்ளது! எடப்பாடி பழனிச்சாமி

ஓமலூர்: கர்சிப்பால் முகத்தை துடைப்பதை வைத்து அரசியல் செய்வது வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது என  கூறிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான  எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி எதிர்க்கட்சியாக இருக்கும்போது கருப்பு காட்டியவர், இப்போது வெள்ளைக்கொடி காட்டுவது ஏன் என்றும். சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்த மனநிலை சரியில்லாதவர்  முதல்வர் ஸ்டாலின் என்றும்  சாடினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில்  பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து பேசிவிட்டு காரில் திரும்பியபோது, … Read more

நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியுடன் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி, இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் கடந்த 8-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். அது வன்முறையில் முடிந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 900-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றம், தலைமைச் செயலகம், உச்ச நீதிமன்றம், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் … Read more

Kamal: "திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேனா?"- கமல் சொன்ன பதில்

2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், 4 ஆண்டுகளுக்கு முன்பு 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இதையடுத்து அவரது கட்சியிலிருந்து பலரும் பல கட்சிகளுக்குத் தவினர். இத்தகைய சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக திமுகவுடன் இணைக்கமாக இருந்து வருகிறார். குறிப்பாக மு.க.ஸ்டாலினுடன் பல நிகழ்ச்சிகளில், திமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். திமுக ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினராகவும் கடந்த ஜூலை 25ம் தேதி பதவியேற்று மாநிலங்களவையில் … Read more

ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை! இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு…

டெல்லி: ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை  என இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆலந்து பைல்ஸ்  என்ற பெயரில் கர்நாடகாவில் ஒரு தொகுதியில்,  6018 வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ராகுல்கந்தி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவரது குற்றச்சாட்டு, தவறானவை மற்றும் … Read more

உத்தரகாண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயம்

ராஞ்சி, உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்றை முன் தினம் டேராடூனில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக தம்சா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றங் கரையோரத்தில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 15க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் .சாமோலி மாவட்டத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. 6 வீடுகள் இடிந்து விழுந்தன. நிலச்சரிவு ஏற்பட்டபோது ஏழு பேர் வீடுகளுக்குள் … Read more

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.! | Automobile Tamilan

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய ஜிஎஸ்டி 2.0 வரி விலை குறைப்பு பட்டியலை வெளியிட்டு ஒவ்வொரு மாடல்களின் ஆரம்ப விலையை உறுதிப்படுத்தியுள்ளது. பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முன்பே அறிவித்த விட்ட நிலையில், தற்பொழுது மாருதி சுசூகியும் இணைந்துள்ளது. சிறிய கார்களுக்கு 18 % மற்றும் மற்ற ஆடம்பர வாகனங்களுக்கு 40 % என மாற்றப்பட்டுள்ளதால், மாருதி நிறுவனம் ரூ.46,400 முதல் அதிகபட்சமாக எஸ்-பிரெஸ்ஸோ ரூ.1,29,600 வரை குறைந்துள்ளது. பிரசத்தி … Read more

தினமும் 'ஒரு பீர்' அளவிலான ஆல்கஹாலை உட்கொள்ளும் சிம்பன்சிகள் – ஆய்வில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்!

காடுகளில் வாழும் சிம்பன்சிகள், நன்கு பழுத்த பழங்களை உண்பதன் மூலம் தினமும் ஒரு பீர் பாட்டில் அளவுக்கு சமமான ஆல்கஹாலை உட்கொள்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு ஆல்கஹால் மீதுள்ள நாட்டம் எப்படி உருவானது என்பது குறித்த பரிணாம ரீதியான விளக்கத்தையும் இந்த ஆய்வு வழங்குகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, உகாண்டா மற்றும் ஐவரி கோஸ்ட் காடுகளில் இந்த ஆய்வை நடத்தியது. அங்குள்ள சிம்பன்சிகள் விரும்பி உண்ணும் அத்திப்பழங்கள், பிளம்ஸ் போன்ற … Read more

தனியார் வளாகங்களை விட மலிவான வாடகையில் அமைக்கப்படும் TNHB வணிக வளாகங்கள்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB), சென்னை முழுவதும் அதன் புதிய வணிக வளாகங்களை மிகவும் வசதியான மையங்களாக அமைத்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. சதுர அடி ரூ. 88 முதல் ரூ. 118 வரை வாடகைக்கு வழங்கிவருகிறது. இது தனியார் வளாகங்களுக்கு கொடுக்கும் வாடகையை விட 20% குறைவாக உள்ளதை அடுத்து EPFO ​​(ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) மற்றும் GST உள்ளிட்ட துறைகள் தங்கள் அலுவலகங்களை TNHB வணிக வளாகங்களுக்கு … Read more