“அந்தச் சிலையை வரவேற்பறையில் வெச்சிருக்கேன்!" – பாடகி வாணி ஜெயராமின் கடைசி காலகட்டம்

இந்தியத் திரையிசையின் ஒப்பற்ற குரல், இயற்கையுடன் தன்னைக் கரைத்துக் கொண்டது. நாடு முழுவதும் இசை ரசிகர்களைக் கொண்டிருந்த அபூர்வமான பாடகியான வாணி ஜெயராம், இசைத்துறைக்குக் கிடைத்த அரிதான பொக்கிஷம். அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும், குரலைப்போலவே, வாணியின் குணமும் எளிமையான பண்பும் அவ்வளவு இனிமையானவை என்று! வாணி ஜெயராம் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார் – தலையில் அடிபட்டதால் மரணம்? போலீஸார் விசாரணை! தென்னிந்தியாவில் வாணியின் குரலையும் புகழையும் உச்சத்துக்குக் கொண்டு சென்றது, … Read more

உங்க கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இதனை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்

பொதுாவாக நம்மில் பலருக்கு முகம் பார்ப்பதற்கு ஒரு நிறமும், கைகள் மற்றும் கால்கள் பார்ப்பதற்கு வேறு நிறமும் போன்று காட்சியளிக்கும். அதிலும் வெயில் மற்றும் சுற்றுப்புற மாசு காரணமாக அதிக பாதிக்கப்படும் உடல் பாகத்தில் முக்கியமானவை நம் பாதங்கள் . இந்த கருமையை போக்க, பெண்கள் விலையுயர்ந்த கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் வீட்டு வைத்தியம் மூலம், செலவில்லாமல் கை, பாதங்களின் பளபளப்பை மீட்க முடியும். தற்போது அவற்றை இங்கே பார்ப்போம்.   ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி … Read more

புதிதாக நியமிக்க மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை – எச்சரிக்கை…

சென்னை: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களிடம் பணிகளை விட்டுவிட்டு அமைதியாக இருந்துவிடுவோம் என்று எண்ண வேண்டாம் என்று  எச்சரிக்கை விடுத்தார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உடனான கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்.4) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஆட்சிப் பொறுப்பேற்று இந்தக் குறுகிய காலத்திற்குள்ளாக நம்முடைய அரசு சிறப்பான பெயரை பெற்றிருக்கிறது, இதற்கு எந்தவித மறுப்பும் … Read more

காயம் ஏற்படும் என்பதற்காக கபடி விளையாடுவதை தவிர்க்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: காயம் ஏற்படும் என்பதற்காக கபடி விளையாடுவதை தவிர்க்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை நெமிலியில் கபடி போட்டி நடத்த அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலவளவு படுகொலை: 13 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன?!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவில் 1997-ல் ஊராட்சித் தேர்தலில் பட்டியல் சமூகத்தினர் போட்டியிடக்கூடாது என்று மாற்று சமூகத்தை சேர்ந்த சிலரின் மிரட்டலை மீறி, போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது தமிழகத்தையே அதிரச் செய்தது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடந்து வந்த இந்த வழக்கில் ராமர் என்பவர் உள்ளிட்ட 17 பேருக்கு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை … Read more

கேட் மிடில்டன் தமது பிள்ளைகளுக்கு விதித்துள்ள கடுமையான ஒரு சட்டம்: மூவரும் மீறுவதில்லையாம்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தமது பிள்ளைகள் மூவருக்கும் வீட்டுக்குள் கடுமையான ஒரு சட்டத்தை விதித்துள்ளாராம், அதை அவர்கள் மீறுவதில்லையாம் என அந்த குடும்பத்திற்கு நெருக்கமானவர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு கடுமையான விதி கேட் மிடில்டனின் மூன்று பிள்ளைகளுக்கும் பொதுவாக ஒரு கடுமையான விதி அமுலில் இருக்கிறது. அது, அவர்கள் வீட்டுக்குள் இருக்கும் போது கத்தக் கூடாது என்பது தான். எவரேனும் இந்த விதியை மீறி ஒருவருக்கு ஒருவர் கத்துவதாக தகவல் அறிந்தால், அதற்கு தண்டனையும் அளிக்கப்படுமாம். … Read more

வாணியம்பாடியில் பரிதாபம்: இலவச சேலைக்கு ஆசைப்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி…

வாணியம்பாடி: தனியார் நிறுவனம் அறிவித்த இலவச சேலைக்கு ஆசைப்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியாகி உள்ளனர். இந்த சோக சம்பவம் வாணியம்பாடியில் அரங்கேறி உள்ளது. நாளை தைப்பூசம் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாணியம்பாடியில் தனியார் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இலவச வேட்டி – சேலை வழங்குவது வழக்கம்.  அதன்படி, இந்த ஆண்டு தைப்பூசம்  நாளை (ஞாயிற்றுக்கிழமை)  கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இனறு  இலவச வேட்டி – சேலைக்கான டோக்கன் தருவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, சேலைக்கான … Read more

சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து..!!

சென்னை: சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்த காரில் தீ விபத்து ஏற்பட்டது. புகை வருவதை கண்டு உடனடியாக இறங்கியதால் காரை ஓட்டி வந்த சுரேஷ் என்பவர் உயிர் தப்பினார். தீப்பிடித்து எரிந்த காரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரபலமான உலக தலைவர்கள்: பிரதமர் மோடி முதலிடம்| PM Modi emerges most popular global leader in survey

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அமெரிக்காவின் ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் நடத்திய உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க நிறுவனம் ஜன.,26 முதல் 31 வரை, அரசியல் ஆராய்ச்சி அமைப்புடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் பிரதமர் மோடி 78 சதவீதம் பேரின் ஆதரவை பெற்று பிரபல தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு அடுத்த பட்டியலில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் … Read more

2 அடி, 7 கிலோ எடையோடு பிறந்த குழந்தை; தாயின் நீரிழிவு நோயே காரணம் என மருத்துவர்கள் விளக்கம்!

பிரேசிலைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவர், நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை மூலமாக இவருக்கு குழந்தை பிறந்தநிலையில், குழந்தை இரண்டடி உயரத்தில், 7.3 கிலோ கிராம் எடையோடு இருந்துள்ளது. இக்குழந்தைக்கு `ஆங்கர்சன் சாண்டோஸ்’ என்று பெயரிட்டுள்ளனர். மாதிரிப்படம் இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், “குழந்தையின் தாய், கடுமையான நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அறுவை சிகிச்சை மூலமாக இவருக்குப் பிறந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது. குழந்தை இரண்டடி உயரமும், 7.3 கிலோ எடையுடனும் … Read more