தலைப்பு செய்திகள்
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நடிகை கனகாவின் வீட்டில் தீ விபத்து
சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நடிகை கனகாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர்.
சென்னை: கைகளில் சுற்றப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஒயர்கள்… சடலமாக மீட்கப்பட்ட மில் மேலாளர்!
சென்னை அம்பத்தூர், பத்மாவதி ஸ்ரீனிவாசா நகர், மணிகண்டன் தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமர குரு (55). இவர் வங்கதேசத்தில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் மேலாளராகப் வேலைப்பார்த்து வந்தார். இவரின் மனைவி லலிதா (42). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு முத்துகுமரகுரு, விடுப்பில் சென்னைக்கு வந்தார். பின்னர் அவர், தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் நாம் தற்போது குடியிருக்கும் இந்த வீட்டை விற்றுவிட்டு புதியதாக வேறு இடத்தில் வீடு கட்டி, கார் வாங்கி வாழலாம் … Read more
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை! சடலங்கள் அருகே கிடந்த ஒரு பொருள்
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக மீட்பு பெங்களூரில் வசித்து வந்தவர் மருத்துவ சத்யநாராயணா. இவர் மனைவி யசோதா (70) தம்பதிக்கு அபர்னா, சுமன் (41) என்ற மகள்களும், நரேஷ் (36) என்ற மகனும் இருந்தனர். சத்யநாராயணா இரண்டாண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அபர்னாவுக்கு திருமணமாகி வேறு பகுதியில் கணவருடன் வசிக்கிறார். மற்ற மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் யசோதா, சுமன், நரேஷ் ஆகிய … Read more
மீண்டும் லாக்டவுன் தேவைப்படாது: புதிய வகை கொரோனா பரவல் குறித்து மருத்துவ நிபுணர் தகவல்…
சென்னை: புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என மருத்துவ நிபுணர் ராமசுப்ரமணியன், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளார். அதுபோல, புதிய வகை கொரோனா குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என கொரோனா தொற்று அனலிஸ்ட்டும் தெரிவித்து உள்ளார். சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் BF.7 என்ற உருமாறிய கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது … Read more
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 227 ரன்களில் ஆல் அவுட்
டாக்கா: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 227 ரன்களில் ஆல் அவுட் ஆனது. டாக்காவில் நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறும் 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேசம் தரப்பில் மொமின்முல் ஹக் 84, முஸ்பிகர் ரஹீம் 26, லிட்டன் தாஸ் 25 ரன்கள் எடுத்தனர். 73.5 ஓவரில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் … Read more
ஆன்லைனில் கடன் வாங்கியவரைச் சிக்கவைக்க வெடிகுண்டு மிரட்டல்? – பரபரப்பைக் கிளப்பிய போன்கால்
தமிழ்நாடு காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு நேற்று ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பில் பேசிய நபர், “நான் ஜப்பானிலிருந்து பேசுகிறேன். மாங்காடு பகுதியில் கபீர் முகமது என்ற நபர் தன்னுடைய வீட்டில் வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருக்கிறார்” என்று தகவலைச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்த தகவல் மாங்காடு பகுதி போலீஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை உடனடியாக காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் மாங்காடு முத்தமிழ் நகருக்கு விரைந்திருக்கிறார். இந்த செய்தி அந்தப் பகுதியில் பரவவே … Read more
வெளியே வந்தால் அது தாக்கிவிடும்…3 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராத தாய், மகள்!
கொரோனா வைரஸ் தாக்கி விடும் என்ற அச்சத்தில் வீட்டுக்குள் சென்று பூட்டிக் கொண்ட தாயும் மகளும் மூன்று ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளனர். 3 ஆண்டுகளாக வெளிவராத தாய் ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள குய்யேரு கிராமத்தைச் சேர்ந்த கர்நீதி கே. சூரிய பாபு என்பவரின் மனைவி மணி(44) மற்றும் மகள் துர்கா பவானி(20) ஆகிய இருவரும் கொரோனா வைரஸ் பரவி வந்த காலத்தில் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவும், தங்களை யாரேனும் கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவும் … Read more
தமிழ்நாட்டில் 5 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்ட அறிக்கை தயார்!
சென்னை: தமிழ்நாட்டில் எழும்பூர் உள்பட 5ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்ட அறிக்கை தயார் என மக்களவை யில் ரயில்வேத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவையில் பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் எழுத்துப்பூர்வ பதிலளித்து உள்ளது. அதில், “நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இதன்படி, சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை உள்பட 5 ரயில் நிலையங்களை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 5 ரயில்நிலையங்கள் … Read more
புதுச்சேரியில் 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து கூட்டு பாலியல் வழக்கில், 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 சிறுமிகளை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு ரூ. 7 லட்சமும், மற்ற 4 சிறுமிகளுக்கு தலா ரூ. 5 லட்சமும் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.