மகளை கொன்ற தந்தை கைது| Dinamalar

ஹைதராபாத் :தெலுங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் ‘மொபைல் போனில்’ பேசிய 17 வயது சிறுமி, வளர்ப்பு தந்தையால் கொலை செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் வசிப்பவர் முகமது தவுபிக். இவருடைய வளர்ப்பு மகள் யாஸ்மின் உன்னிசா, 17. இந்த சிறுமி நேற்று முன்தினம் நள்ளிரவில் மொபைல் போனில் ஒருவருடன் பேசியுள்ளார். இதைக் கவனித்த முகமது தவுபிக், யாருடன் பேசுகிறாய் என கூறி கடுமையாக திட்டியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த முகமது தவுபிக், யாஸ்மின் உன்னிசாவை கழுத்தை … Read more

`உயிருக்கு பயந்தே சமாதானம் ஆனேன்' – ஊராட்சி உறுப்பினர் Vs ஒன்றிய கவுன்சிலரின் கணவர் – நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் 7-வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார் அ.தி.மு.க-வை சேர்ந்த முருகவேல். இந்நிலையில், நேற்று முன்தினம் (17.12.2022) அப்பகுதியை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் சாலை பகுதியில் கழிவுநீர் தொட்டியை அமைக்க முற்பட்டுள்ளார். இதனை முருகவேல் எதிர்த்த நிலையில், அப்பணியை செய்வதற்கான பொருள்களை கொண்டு வந்திருந்த தி.மு.க ஒன்றிய கவுன்சிலரின் கணவர் விஜயராகவன் என்பவர் இவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு இரு தரப்புக்கும் இடையே கைக்கலப்பும் … Read more

மெஸ்ஸிக்கு அரசர்களுக்கான தங்க உடையை அணிவித்து கௌரவத்த கத்தார்: எழுந்த விவாதம்

ஃபிஃபா உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு சாம்பியன் கோப்பையை கையளிக்கும் முன்னர் லியோனல் மெஸ்ஸிக்கு அணிவிக்கப்பட்ட உடை தொடர்பில் எழுந்த விவாதத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அரேபிய பாரம்பரிய உடை அர்ஜென்டினா அணியின் கேப்டனும் உலக அளவில் அறியப்படும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸிக்கு சாம்பியன் கோப்பையை கையளிக்கும் முன்னர் கத்தார் ஆட்சியாளரும் ஃபிஃபா தலைவரும் இணைந்து bisht எனப்படும் அரேபிய பாரம்பரிய உடை ஒன்றை அணிவித்துள்ளனர். @getty இது உலக அளவில் பார்வையாளர்கள் மத்தியில் குழப்பத்தையும் விவாதத்தையும் … Read more

டிசம்பர் 19: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 212-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 212-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டிச-19: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சிறுமியை 12 மணி நேரம் பலாத்காரம் செய்தவர்கள் கைது| Dinamalar

மும்பை : மஹாராஷ்டிராவில் 16 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்கர் கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள ஆள் அரவமற்ற கட்டடத்துக்குத் துாக்கிச் சென்ற மர்ம நபர்கள், 12 மணி நேரத்துக்கும் மேலாக பலாத்காரம் செய்ததாக, போலீசாரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தார். இதையடுத்து, தேடுதல் வேட்டை … Read more

போர்க்களமான நகரங்கள்… கைதான நூற்றுக்கணக்கானோர்: கலவரத்தில் முடிந்த பிரான்ஸ் தோல்வி

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வெற்றிபெற்றதை அடுத்து பிரான்ஸ் முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. தெருக்களில் குவிந்த ரசிகர்கள் பிரான்ஸ் அணி பெனால்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில், பாரிஸ், நைஸ் மற்றும் லியான் நகரங்களில் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் தெருக்களில் குவிந்தனர். @AFP பாரிஸ் நகரில் அமைந்துள்ள பிரபலமான Champs-Elysees பகுதியில் கலவர தடுப்பு பொலிசாருக்கும் கால்பந்து ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனிடையே, லியான் பகுதியில் கலவரம் … Read more

உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உறுதியாக மிகவும் சிறப்புடைய ஒரு போட்டி. பிரான்சு அணியின் ஒருபோதும் விடாத மனப்பான்மை மற்றும் எம்பாப்பேவின் ஹாட்ரிக் கோல் இந்த போட்டியை உலகக் கோப்பையின் சிறந்த இறுதிப் போட்டிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா மற்றும் G.O.A.T மெஸ்சிக்கு வாழ்த்துக்கள். … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 66,71,778 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.71 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 66,71,778 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 657,745,906 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 631,398,875 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,129 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.