பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் 7 பேர் மீது வழக்குப்பதிவு
திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக 12 கிராம மீனவர்களிடையே பிரச்சனை இருந்து வந்தது. ஏற்கனவே பிரச்சனை தொடர்பாக பல கட்ட பேச்சு நடத்தி ஆட்சியர் கடந்த மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.