ஆசிய நாட்டவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய இளம்பெண்: வழக்கில் அதிரடி திருப்பம்

ஆசிய நாட்டவர்கள் கொண்ட கும்பல் ஒன்று தன்னைக் கடத்தி வன்புணர்ந்ததாக பிரித்தானிய இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, அவர் சொன்னது பொய் என்பது தெரியவந்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னைக் கடத்தி பாலியல் தொழிலில் பயன்படுத்தியதாக தெரிவித்த இளம்பெண்   இங்கிலாந்தில் வாழும் Eleanor Williams (22) என்னும் இளம்பெண், தன்னை ஆசிய கடத்தல்காரரான Shaggy Wood என்பவர் தன்னைக் கடத்தியதாகவும், Mohammad Ramzan என்பவர் தனக்கு 12 வயது இருக்கும்போதிலிருந்தே தன்னை … Read more

கோவை கேரளா எல்லையில் வாளையார் சோதனைச் சாவடி அருகே 160 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!

கோவை: கோவை  கேரளா எல்லையில் வாளையார் சோதனைச் சாவடி அருகே 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கோவை வழியே மீன் பெட்டிகளுக்குள் மறைத்து வைத்து கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சியாச்சினில் சிங்கப்பெண்: உலகின் உயரமான போர்க்களத்தின் முதல் பெண் அதிகாரி கேப்டன் ஷிவா சவுகான்!

உலகின் மிக உயரமான போர்க்களமான, பனிபடர்ந்த சியாச்சின் மலைப்பகுதி இந்திய ராணுவப்படைப் பிரிவின் முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையை, கேப்டன் ஷிவா சவுகான் பெற்றுள்ளார். இமயமலையில், காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள சியாச்சின் பனிப்பாறை, சுமார் 20,000 அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயர்ந்த ராணுவமயமாக்கப்பட்ட மண்டலம். இங்கு, சுமார் 15,600 அடி உயரத்தில் அமைந்துள்ள குமார் போஸ்ட்டில், தன்னுடைய மூன்று மாத கடுமையான பயிற்சிக்குப் பிறகு, கடந்த திங்கள்கிழமை அன்று ராணுவ அதிகாரியாக … Read more

உலகக்கோப்பைக்கு பிறகு PSG-க்கு திரும்பிய மெஸ்ஸிக்கு கிடைத்த மரியாதை! வழங்கப்பட்ட நினைவுப்பரிசு

அர்ஜென்டினாவுக்கான FIFA உலகக் கோப்பையை வென்ற பிறகு, கிளப்புக்கு திரும்பிய லியோனல் மெஸ்ஸிக்கு PSG அணியினரிடமிருந்து மரியாதைக்குரிய வரவேற்பு வழங்கப்பட்டது. PSG-ன் பயிற்சி மையத்திற்கு வந்தவுடன், மெஸ்ஸி தனது அணியினரிடமிருந்து ஒரு மரியாதையைப் பெற்றார், மேலும் PSG-ன் ஆலோசகர் Lluis Campos அவர்களால் சிறப்பு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது. கத்தாரில் தஹனது நாட்டிற்காக உலகக் கோப்பையை வென்ற பிறகு PSG கிளப்பிடமிருந்து லியோனல் மெஸ்ஸிக்கு 10 நாள் இடைவெளி கொடுக்கப்பட்டது. @PSG_inside/Twitter குடும்பத்துடன் வெற்றியை கொண்டாடிய மெஸ்ஸி, கிறிஸ்துமஸ், … Read more

சிதம்பரம் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் இல்லை! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழக அரசின் அறநிலையத்துறையின் கீழ் ஏராளமான கோவில்கள் உள்ள நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட சில கோவில்கள், தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதுபோல சிதம்பரம் நடராஜர் கோவில், தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஒருசிலர் கொடுக்கும் புகாரின் அடிப்படையில், தமிழகஅரசு கோவில் நிர்வாகத்தில் தலையிட்டு, கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில்,  திருக்கோயில் … Read more

பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 பயனாளிகளுக்கு நேரடியாக மட்டுமே வழங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 பயனாளிகளுக்கு நேரடியாக மட்டுமே வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். அனைத்து நியாய விலைக்கடைகளும் வரும் 2  ஆண்டுகளில் மேம்படுத்தப்படும் எனவும் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். தமிழகத்தில் 4,455 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.  

கர்நாடகா துறவி மீதான பாலியல் வழக்கு: தடயம் இல்லை என்கிறது மருத்துவ அறிக்கை| Medical report says no trace of sex case against Karnataka monk

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சித்ரதுர்கா,கர்நாடகாவின் முருகா மடத்தைச் சேர்ந்த துறவி மீதான பாலியல் பலாத்கார வழக்கில், புகார் அளித்த சிறுமியர் இருவரும் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தடயம் இல்லை என மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருகா மடம் என்ற ஆசிரமத்தை, துறவி சிவமூர்த்தி ஷரணரு என்பவர் நிர்வகித்து வருகிறார். இவரது ஆசிரமத்தில் தங்கி இருந்த இரு சிறுமியர், துறவி மீது பாலியல் புகார் தெரிவித்தனர். மூன்றாண்டுகளாக தங்களை பாலியல் … Read more

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி  டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடல்நலம் பாதிப்பு மற்றும் சுவாச நோய்த்தொற்றால் அவதிப்பட்டு வரும்  அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கிய சோனியா காந்தி  அதற்கான தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.அவதிப்பட்டு வருகிறாகாரணமாக, , தற்போது அமைதியான முறையில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும், ராகுலின் யாத்திரையிலும் அவ்வப்போது பங்கேற்று உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த … Read more