முன்னின்று மனைவிக்கு 2-வது திருமணம் செய்து வைத்த முதல் கணவன்! வாய்பிளந்த ஊர் மக்கள்

இந்தியாவில் மனைவியை அவரின் காதலனுக்கு கணவரே திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காதல் திருமணம் பீகார் மாநிலத்தின் மிர்சாபூரை சேர்ந்தவர் விஸ்வஜீத் பகத். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கும் ஆர்த்தி குமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் காதல் ஏற்பட்ட நிலையில் கடந்த 30ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த சூழலில் அவர்களுக்கு இடையில் அபிராஜ் என்ற இளைஞர் வந்தார். அபிராஜும், ஆர்த்தியும் ஒரு சமயத்தில் காதலித்து பின்னர் … Read more

டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து… 9மணி நேரமாக தொடரும் போராட்டம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள சாந்தினி சௌக் மார்கெட் பகுதியில் நேற்றிரவு பயங்கர  தீ விபத்து ஏற்பட்டது.  40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்ட நிலையில், 9மணி நேரத்துக்கு பிறகு, தற்போது தீ பரவல்  கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லி சாந்தினி சவுக்கின் பாகிரத் பேலஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் நள்ளிரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், காவல்தறையினரும் தீயணைப்பு துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து … Read more

வழக்கறிஞர் பண்பற்ற முறையில் கேள்வி கேட்டதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு

சென்னை: வழக்கு ஒன்றின் பொது பெண் மனுதாரரிடம் வழக்கறிஞர் பண்பற்ற முறையில் கேள்வி எழுப்பியதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கவர்த்தி மன்னிப்பு கேட்டார். உயர் நீதிமன்றத்திற்குள்ளேயே இந்த சம்பவம் நடந்துள்ளதால் மன்னிப்பு கோருகிறோம் என நீதிபதி தெரிவித்தார். மூன்று பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்தும் அவர்களின் தாயை அவமதிக்கும் வகையிலும் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.  

“சுமார் 2 லட்சம் பொதுமக்களிடம் ரூ.9,000 கோடி மோசடி; தகவல் அளித்தால், தக்க சன்மானம்" – காவல்துறை

தமிழகத்தில் பல பகுதிகளில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், டி.ஜி.பி அலுவலகம் சார்பில் நேற்று செய்தி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், “தமிழகத்தின் பல பகுதியில் நிதி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களை கவரும் வகையில், முதலீட்டு தொகைக்கு மாத வட்டியாக 10 – 25 சதவீதம் வரை தருவோம் என்று ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. பொதுமக்களிடம் முதலீடுகளை … Read more

9 செயற்கை கோளுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டோ: 9 செயற்கைகோளுடன்  பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ அறிவித்து உள்ளது. பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நவம்பர் 26-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து ஓசன்சாட்-3 மற்றும் பூடான் உட்பட எட்டு நானோ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி54/ஈஓஎஸ்-06 விண்ணில் ஏவுகிறது. PSLV-C54 ஏவுதல் முதல் ஏவுதளத்தில் (FLP), SDSC, SHAR இல் இருந்து திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 4 நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையும் தனித்தனி … Read more

அம்மா உணவகங்கள் எதையும் நாங்கள் முழுமையாக புறங்கணிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை : அம்மா உணவகங்கள் எதையும் நாங்கள் முழுமையாக புறங்கணிக்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தேவை இல்லாமல் அம்மா உணவகங்களை மூடவில்லை, உணவகங்கள் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை பணிக்கு உறுதுணையாகா இல்லாவிட்டாலும் வசைபாட வேண்டாம் என அமைச்சர் கூறினார்.

பசுமை சந்தை

வாசக விவசாயிகளே! விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர்பான தகவல்கள் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இலவசப் பகுதி இது. இந்த இலவசப் பகுதியின் நோக்கம், விற்க விரும்பும் விவசாயிகள் மற்றும் வாங்க விரும்பும் வியாபாரிகள் இருதரப்புக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தித் தருவதே. … Read more

லண்டன் பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு! பல லட்சங்களை இந்திய இளைஞர் இழந்தது எப்படி? எச்சரிக்கை செய்தி

லண்டனை சேர்ந்த இளம்பெண் இந்தியாவுக்கு வருவதாக கூறி இளைஞர் ஒருவரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. லண்டன் பெண்ணுடன் நட்பு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரை சேர்ந்தவர் சூரஜ் பிரகாஷ் குர்ஜர் (31). இவருக்கு பேஸ்புக் மூலம் விக்டோரியா ஹஸ்டின் என்ற பெண் நட்பாகியுள்ளார், பின்னர் வாட்ஸ் அப் மூலம் மிகவும் நெருக்கமாகியுள்ளனர். அவர் இந்தியாவுக்கு வர விரும்புவதாக சூரஜிடம் விருப்பம் தெரிவித்த நிலையில் லண்டனில் இருந்து டெல்லிக்கு வருவதற்கான விமான டிக்கெட் பெறுவதற்காக ஹசினாவுக்கு … Read more

ஆன்லைன் ரம்மி தடை மசோதா: தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்..!

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக  விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று அமைச்சர் ரகுபதி, தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் தற்போதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என குற்றம் சாட்டிய நிலையில், தற்போது ஆளுநர் விளக்கம் கோரியிருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபரில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு … Read more

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வு முடிவு பட்டியல் போலி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிக்கான தேர்வு முடிவு குறித்த போலியான பட்டியல் சமூக வலைதளத்தில் பரவுகிறது. தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியலை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வாணையத்தின் அனானித்து தேர்வு முடிவுகளும் தேர்வணைய இணையதளத்தில் மட்மே வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புவோர்களின் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.