தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்ப்பு! மேயருடன் அமைச்சர் சேகர்பாபு தகவல்..

சென்னை:  தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என சென்னை மழை பாதிப்பு குறத்து மாநக மேயர் பிரியாவுடன் இணைந்த ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர் பாபு கூறினார். சென்னை உள்பட கடலோர மாவட்டங்களை மிரட்டி வந்த மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் சென்னை உள்பட பல பகுதிகளில் … Read more

மெரினாவில் உள்ள கலைஞர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள் தற்காலிகமாக மூடல்

சென்னை: புயலால் இரண்டு மரங்கள் சரிந்துள்ளதால் மெரினாவில் உள்ள கலைஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு முந்தைய நாள்; 150 அடி உயர பாறையிலிருந்து செல்ஃபி… கல்குவாரி குட்டையில் விழுந்த ஜோடி

கேரள மாநிலம், கொல்லம் பரவூரைச் சேர்ந்தவர் வினு கிருஷ்ணன்(25). துபாயில் வேலை செய்து வருகிறார். அவருக்கும் கொல்லம் பாரிப்பள்ளியைச் சேர்ந்த சாந்த்ரா எஸ்.குமார்(19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதோடு நேற்று திருமணம் நடக்கவிருந்தது. அதற்காக துபாயில் இருந்து ஒரு வாரம் முன்பு வினு கிருஷ்ணன் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் வினு கிருஷ்ணனும், சாந்த்ராவும் சேர்ந்து ஆயிரவில்லி என்ற கோயிலுக்குச் சென்றிருக்கின்றனர். பின்னர் அருகில் உள்ள 150 அடி உயர பாட்டுப்புறம் பாறை மீது … Read more

கரையை கடந்த மாண்டஸ் புயல்: விளைவித்த சேதங்கள் என்னென்ன?

வட தமிழக மக்களை அச்சுறுத்தி வந்த மான்டஸ் புயல் சென்னையின் மாமல்லபுரம் அருகே இரவு 2:30 மணியளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரையை கடந்த மாண்டஸ் சென்னை மற்றும் வங்க கடலை ஒட்டியுள்ள வட கிழக்கு மாவட்டங்களை அச்சுறுத்திய மாண்டஸ் புயல், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்து, பின்னர் வலுப்பெற்று ஆழ்ந்த தாழ்வு மண்டல புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரிக்கும் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே அதாவது கிட்டத்தட்ட … Read more

மாண்டஸ் புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்! அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்புகளுக்கும்,  சேதமடைந்த படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு பேரிடர் மீட்புத்துறை  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார். மேலும், மாண்டஸ் புயலால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றும் கூறினார்.‘ சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களை மிரட்டி வந்த மாண்டஸ் புயல் பலத்த சூறைக்காற்று மற்றும் கனமழையுடன் நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.  அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் … Read more

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.40,440க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.40,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.5,055க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.73க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எதிரெதிர் துருவங்கள்தான் ஒட்டிக்கொள்ளுமா? ~ OPEN-ஆ பேசலாமா – 5

ஒரே மாதிரியான குணாம்சம் கொண்டவர்களைக் காட்டிலும் எதிரெதிர் குணாம்சம் கொண்டவர்களது உறவுதான் வலுக்கும் என்றும் அதுதான் சரியான பொருத்தம் என்றும் சமூகத்தில் பொதுவாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதாவது, வாயாடி ஆணுக்கு, அமைதியான பெண், துணிச்சலான பெண்ணுக்கு சாதுவான ஆண்… இது மாதிரியான எதிரெதிர் குணங்கள்தான் ஒத்துப்போகும் என்பதாகக் கூறப்படுகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். “குணாம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பொருத்தம் என்கிற கணக்கெல்லாம் இந்த நவீன கால சூழலுக்குப் … Read more

பிரித்தானியாவில் வீட்டின் அடியில் கிடைத்த 7ம் நூற்றாண்டு பொக்கிஷம்: தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பிரமிப்பு!

பிரித்தானியாவில் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான தங்கம் மற்றும் ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி பிரித்தானியாவின் லண்டனுக்கு வடக்கே 60 மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதையலுக்கு ஹார்போல் புதையல் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏப்ரலில் புதிய வீடுகள் சுற்றுப்புறத்தில் உள்ள சொத்து மேம்பாட்டாளர் விஸ்ட்ரி குழுமத்துடன் இணைந்து அகழ்வாராய்ச்சி அறிஞர்களால் இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டது. MOLA (Museum of London Archaeology) 10 வார கால அகழ்வாராய்ச்சியின் இறுதி நாட்களில், தொல்பொருள் ஆராய்ச்சி தளத்தின் … Read more

மாண்டஸ் புயல் பாதிப்பு: எழிலகத்திலுள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்களோடு முதலமைச்சர் பேச்சு..

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து எழிலகத்திலுள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து  புயல் பாதிப்பு ஏற்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களோடு உரையாடினார். வங்க கடலில் கடந்த 5-ந் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி பின்னர் தாழ்வு மண்டலமாக மாறி, மாண்டஸ் புயலாக உருவெடுத்தது.   இதன் காரணமாக, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை பெய்தது.  இந்த நிலையில், மாண்டஸ் புயலானது நள்ளிரவு 2.30 … Read more

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.