”விண்வெளிக்குச் சென்று வந்த உணர்வு!”- வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்ட அரசுப்பள்ளியில் மாணவர்கள் பரவசம்
தஞ்சாவூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் தென்னிந்தியாவிலேயே இரண்டாவதாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் வானியல் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் பூமி, நிலவு, செவ்வாய்க் கிரகம், இரவு – பகல் எப்படி வருகிறது, வானம் எப்படி நீல நிறமாக மாறுகிறது உள்ளிட்ட வானியல் நிகழ்வுகளைப் பள்ளியிலிருந்து கொண்டே மாணவர்கள் நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். வானியல் ஆய்வகத்தைத் திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் தஞ்சாவூர் அருகே உள்ள மேலஉளூர் அரசு மேல்நிலைப் பள்ளி பழைமையானது. … Read more