இளவரசர் ஹரி ராஜ குடும்பத்துக்கு அளிக்க இருக்கும் அடுத்த அதிர்ச்சி: இளவரசர் வில்லியம் கவலை என தகவல்

இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ் தொடர் தோல்வி என பல ராஜ குடும்ப எழுத்தாளர்களால் கருதப்படுகிறது. ஆனால், ஹரியின் ராஜ குடும்பம் மீதான தாக்குதல் அத்துடன் முடிந்துவிடவில்லை. இளவரசர் ஹரி ராஜ குடும்பத்துக்கு அளிக்க இருக்கும் அடுத்த அதிர்ச்சி காரணம், இன்னும் சில வாரங்களில், அதாவது, 2023 ஜனவரி 10ஆம் திகதி, ஹரியின் புத்தகம் ஒன்று வெளியாக உள்ளது. அதில் ராஜ குடும்பத்துக்கு மேலும் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை ஹரி வெளியிடுவார் என … Read more

பள்ளிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்! அமைச்சர் தகவல்

சென்னை: பள்ளிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளது. மீண்டும் பரவி வரும் புதிய வகை கொரோனா காரணமாக, மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், முக்கவசம் அணிவது, சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக இருக்கும்படி, மத்தியஅரசு வலியுறுத்தி உள்ள நிலையில், தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்க எந்தவித கட்டுப்பாடும் விதிக்காமல் அனுமதி வழங்கி உள்ளது. அதேவளையில் 2வது நாள் தொடங்கும் பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை … Read more

ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டிக்கியவர் ஜெயக்குமார்: மருது அழகுராஜ் குற்றச்சாட்டு

சென்னை: எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தலைமை கழகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை கழகம் சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டிக்கியவர் ஜெயக்குமார் எனவும் குற்றம் சாட்டினார். 

அவை, நவதானியங்கள் அல்ல; சிறுதானியங்கள்! ஆனாலும் குறையொன்றுமில்லை `பிக்பாஸ்' கமல் அவர்களே?

கமல்ஹாசன் கலக்கிக் கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’  நிகழ்ச்சியில் தொடர்ந்து புத்தகப் பரிந்துரையைச் செய்துவருகிறார். அதேபோல, அவ்வப்போது பொதுவான விஷயம் ஒன்றையும் தொட்டுப்பேசத் தவறுவதில்லை. அந்த வகையில், கடந்த வாரத்தில், ‘எல்லோரும் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்’ என்று பேசி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். பொதுவாகவே சிறுதானியங்கள் குறித்து கடந்த பல ஆண்டுகளாகவே இயற்கை விவசாயிகள், சூழல் ஆர்வலர்கள் என்று உலக அளவில் பேசிவருகின்றனர். இதையடுத்து, உலக அளவில் சிறுதானியத்துக்கான மரியாதை கூடிவருகிறது. வரும் 2023 -ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்து … Read more

இடுக்கி மூணாறு வனப்பகுதியில் அடுத்தடுத்து 3 குட்டி யானைகள் உயிரிழப்பு! வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி…

தேனி: இடுக்கி மூணாறு வனப்பகுதியில் அடுத்தடுத்து 3 குட்டி யானைகள் உயிரிழந்துள்ளது வனத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாரை ஒட்டி உள்ள வனப்பகுதி வனவிலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. அந்த வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, மான், புலி, காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. மூணார் சுற்றுலா தளமாக விளங்கி வருவதால் அங்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா … Read more

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது

கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கோவிட்| 39 International Travellers Test Covid Positive At Indian Airports In 2 Days

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து, கடந்த 2 நாட்களில் இந்தியா வந்த 39 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஒமைக்ரான் வைரசின் புதிய வகை பரவல் வேகம் எடுத்ததால், அந்நாடு திணறி வருகிறது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவும் பல முன்னேற்பாடுகளை செய்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அந்த வகையில், வெளிநாடுகளில் … Read more

“ஹிந்தியில் தான் பேச வேண்டும்” CRPF வீரர்கள் மீது நடிகர் சித்தார்த் ஆவேசம்

மதுரை விமான நிலையத்தில் நடிகர் சித்தார்த்தின் பெற்றோர்களை இந்தியில் பேச சொல்லி சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் அவமரியாதை செய்துள்ளனர். இந்தியில் பேச சொல்லி அவமரியாதை தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் தெலுங்கு இந்தி உட்பட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்தார்த். அவரது பெற்றோர் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள மதுரை விமான நிலையத்திற்கு  வந்து இறங்கியுள்ளனர், அப்போது அவர்களது உடைமைகளை பரிசோதனை செய்த சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் நடிகர் சித்தார்த்தின் பெற்றோரிடம் கடுமையான தோனியில் ஹிந்தியில் பேசியுள்ளனர். … Read more

கடந்த அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கொரோனா மருந்துகளில் 6 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் காலாவதியாகி விணானதாக ஆர்டிஐ தகவல்…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்துகள் காலாவதியாகி வீணடிக்கப் பட்டுள்ளது. கொரோனா 2வது அலை தாக்கத்தின்போது,  வாங்கப்பட்ட  ரெம்டெசிவர் என்ற கொரோனா  தடுப்பு மருந்துகளில்,  6 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் காலாவதியாகி விணானதாக ஆர்டிஐ  மூலம் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது, கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்க ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட்டு … Read more