இடைத்தேர்தலில் அதிமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும்: செங்கோட்டையன் பேட்டி

சென்னை: சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஆராய்ச்சியில் விண்ணை தொடும் இந்தியா | Scientist Venkatraman surprises India as it touches the sky in space research

ஆங்கிலேயரிடம் ஒரு காலத்தில் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா இன்று அந்த நாட்டின் செயற்கைகோள்களை தன் ராக்கெட் மூலம் ஏவும் அளவுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் உச்சம் தொட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மங்கள்யான், சந்திரயான் என பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. அதன் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரும் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இணை இயக்குனருமான முனைவர் வெங்கட்ராமன் மதுரை மாவட்டம் திருமங்கலம் விடத்தக்குளத்தை சேர்ந்தவர். பயின்ற திருமங்கலம் பி.கே.என்., பள்ளி விழாவில் பங்கேற்க வந்தவர் … Read more

மராட்டியத்தில் நைகாவ் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் மீது கிரேன் மோதல்; மோட்டார் மேன் படுகாயம்

கட்டுப்பாட்டை இழந்தது மும்பை மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் நைகாவ் ரெயில் நிலையம் பிளாட்பாரம் நம்பர் 1-ல் லிப்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக ஹைட்ரா கிரேன் பயன்படுத்தப்பட்டது. கிரேனை கமலேஷ் யாதவ் என்பவர் இயக்கினார். நள்ளிரவு 12.55 மணி அளவில் ரெயில் நிலையத்திற்கு வந்த திருநங்கை ஒருவர் கமலேஷ் யாதவ் மீது கல் வீசி தாக்கியதாக தெரிகிறது. அந்த கல் கமலேஷ் யாதவின் கைவிரலில் பட்டு காயமடைந்தார். இதனால் கிரேன் கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரம் … Read more

தூரத்திலிருந்து ஒரே கிக்கில் வீரர்களை தாண்டி கோல்! இரண்டு கோல்கள் அடித்து அதிர வைத்த பிரேசில் வீரர்

மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ரீடிங் அணியை வீழ்த்தியது. FA Cup தொடர் ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்த FA Cup தொடர் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரீடிங் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என சமனில் இருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் அனல் பறந்தது. குறிப்பாக பிரேசிலின் கேஸ்மிரோ 54 மற்றும் 58வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து மிரள … Read more

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

ஈரான்: ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். ஈரானின் மேற்கு வடமேற்கு பகுதியில் உள்ள கோய் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர் என்றும், 440 பேர் காயமடைந்துள்ளநற் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 215 கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம் . சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 465 மில்லியன் கனஅடியாக உள்ளது.

பழனி கோவிலில் ஆகம விதிகளின்படி பூஜை நடைபெறுகிறது – ஐகோர்ட்டில் அரசு விளக்கம்

சென்னை, சென்னை ஐகோர்ட்டில் ஆலயம் வழிபடுவோர் சங்க தலைவர் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கும்பாபிஷேகம் நடைபெற்ற பழனி முருகன் கோவிலில் 48 நாட்கள் மண்டல பூஜை பெயரளவில் நடைபெறுகிறது. ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறவில்லை. இதனால், இந்த கோவிலில் நடைபெற உள்ள தைப்பூச திருவிழா தடைபட வாய்ப்புள்ளது. எனவே, பழனி கோவிலில் ஆகம விதிப்படி பூஜை நடைபெற உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி … Read more

என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! உருகிய கணவர்..பிரித்தானிய பெண்ணின் மரணத்தில் ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம்

பிரித்தானியாவில் உணவு விஷமானதால் பெண்ணொருவர் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், ஒரு மாதம் கழித்து உண்மை காரணம் தெரிய வந்துள்ளது. கெல்லி க்ளீஸன் கிரேட்டர் மான்செஸ்டரின் ஸ்டாக்போர்ட் நகரைச் சேர்ந்தவர் கெல்லி க்ளீஸன்(40). இவர் கடந்த மாதம் 29ஆம் திகதி படுக்கையில் இறந்துகிடந்தார். அவர் உண்ட உணவு விஷமானதால் (Food Poisoning) உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் நம்பினர். எனினும் கெல்லியின் மரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்தது. அவர் இறந்து ஒரு மாதம் ஆன நிலையில் அவரது இறப்பிற்கான … Read more

ஜனவரி 29: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 253-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 253-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜனவரி -29: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.