8ஆண்டுகளில் சமஸ்கிருதத்துக்கு ரூ.1488 கோடி செலவு செய்த மத்தியஅரசு தமிழுக்கு வெறும் ரூ.74 கோடி மட்டுமே செலவு செய்துள்ளது! மத்தியஅமைச்சர் தகவல்…

டெல்லி: சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த கடந்த 8ஆண்டுகளில் ரூ.1488 கோடி செலவு செய்துள்ளதாகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.74 கோடி மட்டும் செலவு செய்துள்ளதாக  தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்விக்கு பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சுமாஷ் சர்க்கார் பதில் தெரிவித்துள்ளார். உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று கூறப்படும் நிலையில், இந்தியாவின் தொன்மையான மொழி சமஸ்கிருதம் என வடமாநிலத்தவர்கள் கூறி வருகின்றனர். இதனால் மத்தியஅரசு,   சமஸ்கிருதத்தை மக்களிடம் கொண்டு மொழியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக பல்வேறு … Read more

7நிமிடங்களில் முடிவடைந்த பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு!

சென்னை: தெற்கு ரயில்வே பொங்கலுக்கு 4 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ள நிலையில், அந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8மணிக்கு தொடங்கி யது.  சுமார் 7நிமிடங்களில்  4 ரயில்களுக்கான முன்பதிவும் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிக்கும் பெரும்பாலான தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். சொந்த ஊர்களில் பாரம்பரிய முறைப்படி மக்கள் பொங்கலை கொண்டாடுவதால், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதையொட்டி, தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்கும் நிலையில், தெற்கு … Read more

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பாலப்பணி நடக்கும் பார்டர் பகுதியில் பல கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல்..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பாலப்பணி நடக்கும் பார்டர் பகுதியில் பல கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லாரி ஓட்டுநர் – கேரள அரசுப் பேருந்து ஓட்டுநர் இடையே ஏற்பட்ட தகராறால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

டெலிகிராம் செயலி மூலம் ரூ. 31 லட்சம் மோசடி : டில்லி கும்பல் மீது புதுச்சேரி போலீஸ் வழக்கு | Through Telegram App Rs. 31 lakh fraud: Puducherry police case against Delhi gang

புதுச்சேரி : டெலிகிராம் செயலி மூலம் ரூ. 31 லட்சம் மோசடி செய்த டில்லி கும்பல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, புதுசாரம் அன்னை தெரேசா நகர் மல்லிகை வீதியைச் சேர்ந்தவர் ராஜாராமன், 30; மருந்து விற்பனை பிரதிநிதி. டெலிகிராம் செயலியில், பகுதி நேர வேலை உள்ளது எனக் கூறி ஒரு குரூப்பில் இணைத்துள்ளனர். முதலில் போனஸ் தொகை எனக்கூறி ரூ. 10 ஆயிரம் ராஜாராம் வெப்சைட் கணக்கிற்கு அனுப்பி … Read more

ஜோடோ யாத்திரை: “ராகுல்தான் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறினார்" – காங்கிரஸுக்கு சிஆர்பிஎஃப் பதில்

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. பல மாநிலங்களைக் கடந்து, கடந்த 24-ம் தேதி டெல்லியில் நுழைந்தது. இந்த நிலையில், “பாரத் ஜோடோ யாத்திரை சனிக்கிழமை டெல்லிக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டிருக்கிறது. பாரத் ஜோடோ யாத்திரை அதிகரிக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், Z+ பாதுகாப்பு ஒதுக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தியைச் சுற்றி பாதுகாப்பு வீரர்கள் வருவதைப் பராமரிப்பதிலும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. … Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்: டிசம்பர் 29 2022

 இலங்கை மத்திய வங்கி இன்று (29-12-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 42 சதம் – விற்பனை பெறுமதி 371 ரூபா 61 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 432 ரூபா 25 சதம் – விற்பனை பெறுமதி 449 ரூபா 05 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 10 சதம் – விற்பனை பெறுமதி 396 ரூபா 75 … Read more

டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கலாம்! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  10ம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்க தகுதியானவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசியச் சட்டப் பள்ளி உட்பட, இந்தியா முழுவதும் 22 சட்டப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் B.A., LL.B (Hons) மற்றும் B.Com., LL.B (Hons) ஆகிய ஐந்து வருட இளநிலைப் பட்டப்படிப்புகளிலும், LL.M ஒரு வருட முதுநிலைப் பட்டப்படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.  முதுநிலைச் சட்டப்படிப்புக்கு LL.B அல்லது அதற்கு … Read more

உள்ளாட்சி துறை திட்டங்களில் குறை இருந்தால் கூறலாம்: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

திண்டுக்கல்: உள்ளாட்சி துறையில் பல்வேறு திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய பிறகு மைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். திட்டங்களில் குறையை சுட்டிக்காட்டினால் அதனை விசாரித்து சரிப்படுத்தி சிறப்பாக செயல்படுத்துவோம் எனவும் அமைச்சர் கூறினார். 

“ஊரைவிட்டு வெளியேறிய மக்கள்; காட்டுப்பகுதியான கோட்டைமேடு!" – சுற்றுலாத்தலமாக அறிவிக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே  கொள்ளிடம் ஆறு  வங்கக் கடலில் பழையாறு துறைமுகத்தையொட்டி கலக்கிறது. கொள்ளிடம் ஆறு கலக்கும் பகுதியருகே திட்டுப்பகுதிகள் இருக்கின்றன. அதில் ஒரு திட்டுப் பகுதிதான் கோட்டைமேடு கிராமமாகும். இந்த கிராமத்தில் விவசாயமே பிரதானத் தொழில். கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இங்கு நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதால், இந்தத் திட்டுக் கிராமம் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது. இங்குள்ள நிலத்தடி நீரைப் பயன்படுத்தி இந்தப் பகுதியில் விவசாயம் செய்து வந்த இந்தக் கிராம மக்கள், … Read more