இரவு 8மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதியில்லை உள்பட பல கட்டுப்பாடுகள்: சென்னை காவல்துறை இன்று புதிய அறிவிப்பு…

சென்னை:  புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னை காவல்துறை இன்று புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவித்து உள்ளது. நேற்று இரவு 1மணிக்கு மேல் மட்டுமே மக்கள் கூட தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று பல கட்டுப்பாடுகளை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார். புத்தாண்டு அன்று சென்னையில் கடற்கரை சாலைகளில் இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை” என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். மேலும் நட்சத்திர விடுதிகளில் ஆம்புலன்ஸ் வசதி … Read more

10,12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு: சிபிஎஸ்இ

சென்னை: சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது. 12-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி மார்ச் 21 வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Blood Art: ரத்தத்தை எடுத்து வரையும் ஓவியத்துக்குத் தடை – எச்சரிக்கை செய்த தமிழக அரசு!

சமீப காலமாகவே இளைஞர்களும் காதலர்களும் ஒருவருக்கொருவர் வித்தியாசமான பரிசுகளை வழங்க வேண்டும் என்ற தேடலில் பல மாடர்ன் கலைகள் இங்குப் பிரபலமாகி வருகின்றன. அப்படிப் பிரபலமானதுதான் இந்த ‘Blood Art’. அதாவது, ஒருவரின் ரத்தத்தைச் சிறிய சிரஞ்ச் மூலம் எடுத்து அதை வைத்து அவர் பரிசு கொடுக்க விரும்புபவரின் ஓவியத்தை வரைவது. சென்னையில் சிலர் இதை MSMEல் பதிவு செய்து சிறு தொழிலாகவே செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.  சங்கமேஷ் பாகலி – Blood Art பல இளைஞர்களும் … Read more

சீன பயணிகளுக்கு புதிய விதி? உறுதிப்படுத்திய பிரித்தானிய அரசாங்கம்

பிரித்தானியாவுக்கு வரும் சீன பயணிகளுக்கு என புதிய விதி அமுலுக்கு கொண்டுவரப்படும் என்று அரசாங்கம் உறுதி செய்துள்ளது. கலக்கமடைந்துள்ள உலக நாடுகள் சீனாவில் தீவிரமாக பரவும் புதிய கொரோனா தொற்றால் தற்போது உலக நாடுகள் கலக்கமடைந்துள்ளன. 2020 ஜனவரி மாதம் லூனார் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் பொருட்டு, ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு படையெடுத்த சீன பயணிகளால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து இதுவரை உலக நாடுகள் மீளவில்லை என்றே கூறுகின்றனர். @AP இந்த நிலையில், சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் … Read more

தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம்! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் உள்ளதாகவும், அதில் இணைந்து பயன்பெறும்படி, தமிழ்நாடு   வேளாண்மை உழவர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக, தென்னை மரம் ஏறுபவர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து தொழிலாளர்கள் பயன்பெறுமாறு வேளாண்மை-உழவர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வேளாண் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு அரசு கலைஞரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், வயதானோர்களுக்கான ஓய்வூதியம், கல்வி, மருத்துவச் செலவு, விபத்து உள்ளிட்ட … Read more

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரை ஜனவரி 10 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

பூந்தமல்லி: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரை ஜனவரி 10 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அப்சர்கான், முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பைரோஸ்கானை நீதிமன்ற காவலில் வைக்க அணையிடப்பட்டது. போலீஸ்காவல் முடிந்து 5 பேரும் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து நீதிபதி அணையிட்டுள்ளார்.

தலாய்லாமாவை வேவு பார்த்த சீன பெண் உளவாளி பீஹாரில் கைது| Chinese spy arrested in Bihar for spying on Dalai Lama

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கயா: தலாய்லாமாவை வேவு பார்த்ததாக சீன பெண் உளவாளியை பீஹார் போலீசார் இன்று கைது செய்தனர். திபெத் புத்தமதத்தலைவர் தலாய்லாமா, 1959-ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதால், அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். ஹிமாச்சல் பிரதேசம் தர்மசாலாவில் தங்கியுள்ளார். இந்நிலையில் பீஹாரில் புத்தகயா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தலாய்லாமா வந்திருந்தார். அப்போது பெண் ஒருவரை கயா போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் … Read more

சென்னை: பணத்துக்காக முதியவர் அடித்துக் கொலை? – போலீஸ் தீவிர விசாரணை

சென்னை, வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (64). இவருக்குச் சொந்தமாக அந்தப் பகுதியில் கடைகள், வீடுகள் உள்ளன. அதன்மூலம் மாதந்தோறும் வாடகை பன்னீர் செல்வத்துக்கு கிடைத்து வந்தது. பன்னீர் செல்வத்தின் மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். அவரின் மகன் ராஜாவுக்கு திருமணமாகி, அவர் குடும்பத்துடன் எம்.கே.பி.நகரில் வசித்து வருகிறார். அதனால் பன்னீர் செல்வம் மட்டும் தனியாக வியாசர்பாடியில் வசித்து வந்தார். இந்த நிலையில் பன்னீர் செல்வத்தின் செல்போனுக்கு ராஜா தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. … Read more

1,385 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் ஆலை விரிவாக்க பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

திருச்சி: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அலகு-IIல் 1,385 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆலை விரிவாக்கப் பணிகளை திறந்து வைத்து, மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அலகு-IIல் 1,385 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆலை விரிவாக்கப் பணிகளை திறந்து வைத்து, மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து … Read more