எட்டு முறை விம்பிள்டன் வென்ற பெடரர்… யார் என்று தெரியாததால் மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்த காவலாளி

‘தி டெய்லி ஷோ’ டி.வி. நிகழ்ச்சியில் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் பங்கேற்றார். அவரிடம் சமீபத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ட்ரெவர் நோவ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரோஜர் பெடரர் இரு வாரங்களுக்கு முன்பு தான் தற்செயலாக லண்டன் செல்லவேண்டி இருந்ததாகவும் பொழுதை கழிக்க விம்பிள்டன் டென்னிஸ் கிளப்பிற்கு செல்ல நினைத்ததாகவும் கூறினார். எந்த வித திட்டமிடலும் இன்றி லண்டன் வந்ததால் தன்னிடம் உறுப்பினர் அட்டை கொண்டுவரவில்லை இருந்தபோதும் விம்பிள்டன் போட்டியில் … Read more

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வன தொழில் பழகுநர் தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: நாளை நடைபெறவிருந்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வன தொழில் பழகுநர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வன தொழில் பழகுநர் (தொகுதி 4) பதவி நியமனத்துக்கான நாளை நடைபெறும் தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இமாச்சல பிரதேசத்தில் ஒரு பெண் மட்டுமே எம்.எல்.ஏவாக தேர்வு…!

சிம்லா, இயற்கை எழில் கொஞ்சும் இமாசல பிரதேச மாநிலம், பா.ஜ.க.வின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டாவின் சொந்த மாநிலம் ஆகும். இங்கு 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் நடைபெற்று வருகிறது. 2017-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்ற நிலையில் இம்முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் என காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால் தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி பெற்று, தேர்தல்தோறும் ஆட்சி மாற்றம் என்னும் இமாசலபிரதேசத்தின் சரித்திரத்தை மாற்றிக்காட்டுவோம் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறி வந்தனர். 68 … Read more

பாலியல் தொழிலை குற்றமற்றதாக அறிவிக்கவுள்ள பிரபல நாடு!

தென்னாப்பிரிக்கா பாலியல் தொழிலை குற்றமற்றதாக அறிவிக்கவுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதற்கான சட்டத்தை நீதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) முன்மொழிந்ததைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்றவுள்ளது. இந்த சட்டம் தற்போது பொதுமக்களின் கருத்துக்காக உள்ளது. இது நிறைவேற்றப்பட்டால், தென்னாப்பிரிக்காவில் பாலியல் சேவைகளை விற்பதும் வாங்குவதும் இனி கிரிமினல் குற்றமாகாது. இந்த மசோதா பாலியல் தொழிலை குற்றமற்றதாக்குவது பற்றி மட்டுமே கூறுகிறது, பாலியல் தொழிலை ஒழுங்குபடுத்தவில்லை. Royce Kurmelovs/Al Jazeera இவ்வாறு பாலியல் தொழிலை … Read more

மாண்டஸ் புயல்: மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு…

‘சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக இன்று இரவு சென்னை மாநகர பேருந்து சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,   மெட்ரோ ரயில் சேவை மற்றும் மின்சார ரயில் சேவைகள் தொடரும் என அதன் நிர்வாகங்கள் அறிவித்து உள்ளது. வங்கக்கடலின் அந்தமான் அருகே உருவான காற்றழுத்ததாழ்வுமண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது. இது மாமல்லபுரம் நோக்கி மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் … Read more

பெரம்பலூரில் வருவாய் ஆய்வாளர் இந்திராணி லஞ்சம் வாங்கியதாக கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் கொளகாநத்தம் வருவாய் ஆய்வாளர் R I இந்திராணி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

மதம்-பெயரை மாற்றி சிறுமியை திருமணம் செய்ய முயற்சி போலீசை கண்டதும் ஓட்டம்…!

ஹர்லா ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் ஹர்லா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வங்கியில் கடன் வாங்க சென்றார். அங்கு அந்த பெண்ணை சந்தித்த 50 வயது நபர் ஒருவர் தனது பெயரை சஞ்சய் பெஸ்ரா என்று கூறி அந்த கடனை தான் தருவதாகபழக்கமாகி உள்ளார். அவர் கடனும் கொடுத்து உள்ளார். அதன் பிறகு அந்த நபர் தொடர்ந்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வரத் தொடங்கினார். அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவர் போலீஸ் சீருடையில் ஆல்டோ காரில் … Read more

FIFA உலகக் கோப்பை 2022: கத்தாரில் புலம்பெயர்ந்த தொழிலாளி மரணம்

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் கத்தாரில் பிலிப்பைன்ஸ் புலம்பெயர்ந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. FIFA உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுவரும் கத்தாரில், சவுதி தேசிய அணியினர் பயன்படுத்திய பயிற்சி முகாமில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிலிப்பைன்ஸ் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அலெக்ஸ் என்ற பெயரால் அடையாளம் காணப்பட்ட பிலிப்பைன்ஸ் நபர், புதன்கிழமையன்று (டிச. 7) சவுதி அரேபியா தேசிய அணிக்கான பயிற்சி தளமாகவும் … Read more