சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை: சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், புயல் நிலவரங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.