ஈரோடு அருகே தனியார் உணவகத்தில் ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி 5 மணிநேரமாக ஆலோசனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் உணவகத்தில் ஆதரவாளர்களுடன் பழனிசாமி 5 மணிநேரமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை நாளை அறிவிக்க பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

தினமும் ஒரு டம்ளர் கொத்தமல்லி ஜூஸ் குடிச்சு பாருங்க! இந்த நோய் பறந்து ஓடிவிடுமாம்

 பொதுவாக நாம் அன்றாடம் உணவில் மணம் மற்றும் சுவைக்காக சேர்த்துக் கொள்ள கூடிய ஒரு மூலிகை தான் கொத்தமல்லி இலை. இது சுவையை கொடுப்பதுடன் உடலுக்கு பல விதமான நன்மைகளையும் தரக்கூடிய, மருத்துவ குணம் நிறைந்ததுமாகும். கொத்தமல்லி தழையில் விட்டமின் ஏ, பி, சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்பு சத்தும், இரும்புச்சத்தும் உள்ளன. மனித்தனின் உடலை வலுவாக்கும் அனைத்து சத்துக்களும் இதில் உள்ளது. இதனை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வருவது இன்னும் நன்மையே தரும்.  … Read more

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், அமைச்சரவை சகாக்கள் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்களுக்கு துணைநிலை ஆளுநர் அழைப்பு

டெல்லி: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், அமைச்சரவை சகாக்கள் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்களுக்கு துணைநிலை ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். நாளை மாலை 4 மணிக்கு அமைச்சரவை சகாக்கள், 10 எம்.எல்.ஏ.க்களுடன் தன்னை சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பணிக்கொடை வரம்பு: ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக உயர்த்தப்படுமா?

பழைய பென்ஷன் திட்டம் சார்ந்தவர்கள், என்.பி.எஸ். திட்ட ஊழியர்கள் இ.பி.எஸ். திட்ட ஊழியர்கள், இ.பி.எஃப் அமைப்பின் கீழான ஊழியர்கள், இ.பி.எஃப். சாராத பிறதுறை ஊழியர்கள் என பெருபான்மை சம்பளதாரருக்கும் ஓய்வு பெற்றவுடன் கணிசமான ஒரு தொகையை வழங்குவது பணிக்கொடைதான். பணிக்கொடை சம வயது, சமமான சம்பள வளர்ச்சி… ஓய்வுக்காலப் பணமும் சமமாகக் கிடைக்குமா? கடந்த காலத்தில் பணிக்கொடை உச்சவரம்ப் எவ்வளவு என்று பார்ப்போம். 01.01.1973 முதல் ரூ.24,000 01.10.1979 முதல் ரூ.30,000 31.05.1982 முதல் ரூ.36,000 01.10.1984 … Read more

உக்ரைனுக்கு மறைமுக ஆதரவு… சுவிட்சர்லாந்து நாடாளுமன்றம் எடுத்துள்ள முடிவு

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவு பெருகிவருகிறது எனலாம். காரணம், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கத் தயக்கம் காட்டிய ஜேர்மனி முதலான நாடுகள் தற்போது ஆயுதங்கள் வழங்கத் திட்டமிட்டுவருகின்றன. சுவிஸ் நாடாளுமன்றம் எடுத்துள்ள முடிவு நடுநிலை வகிக்கும் நாடான சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்றம், தற்போது உக்ரைன் போருக்கு மறைமுக ஆதரவைத் தெரிவிப்பதுபோல் ஒரு முடிவை எடுத்துள்ளது. அதாவது, சுவிட்சர்லாந்து நாட்டின் விதிகளின்படி, சுவிஸ் தயாரிப்பான ஆயுதங்களை வாங்கும் நாடுகள், அவற்றை வேறொரு நாட்டுக்கு விற்கவோ இலவசமாக கொடுக்கவோ கூடாது. image – … Read more

ஹிண்டன்பெர்க் நிறுவன சவால் … நீதிமன்றம் செல்வாரா அல்லது சரிவை ஏற்படுத்துவாரா அதானி ?

அதானி நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்ததாக ஹிண்டன்பெர்க் என்ற அமெரிக்க பங்கு வர்த்தக ஆலோசனை நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து இந்த நிறுவனம் மீது வழக்கு தொடருவதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக அதானி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பங்குச் சந்தையில் பதிவுசெய்துள்ள நிறுவனங்களின் நிதி மோசடி குறித்த தடயங்களை ஆய்வு செய்து அந்நிறுவனங்களின் ஏமாற்று வேலைகளை அறிக்கையாக வெளியிட்டு அவர்களுக்கு சவால் விடுவதை ஹிண்டன்பெர்க் என்ற அமெரிக்க நிறுவனம் செய்து வருகிறது. 2017 ம் … Read more

பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் காலமானார்

வேலூர்: பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம்(92) வயது முதிர்வு காரணமாக வேலூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். ரஜினிகாந்த் நடித்த 46 படங்களில் சண்டை பயிற்சி அளித்துள்ள ஜூடோ ரத்தினம் காலமானார். மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் நடித்த 52 படங்களில் ஜூடோ ரத்தினம் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

நிதியமைச்சகத்தில் அல்வா கிண்டும் நிகழ்ச்சி: அமைச்சர் உள்பட மூத்த அதிகாரிகள் பங்கேற்பு| Alva Kindum program at Ministry of Finance: Participation by senior officials

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் உள்ள நிதியமைச்சகம் அலுவலகத்தில், இன்று(ஜன.,26) அல்வா கிண்டும் நிகழ்ச்சி கோலாகலகமாக நடைபெற்றது. 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் படி, பிப்ரவரி 1ம் தேதி பார்லிமென்டில் 2023-24 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். வழக்கமாக பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்பாகவே துவங்கிவிடும். பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் … Read more