இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தனியரசு ஆதரவு..!!

சென்னை: இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தனியரசு ஆதரவு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை வலிமைப்படுத்தி இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். திமுக அணி சிதறாமல், வலுவாக உள்ளதாக கூறினார்.

பா.ஜ., பிரமுகர் சுட்டுக் கொலை: ஒருவர் கைது| BJP leader shot dead: One arrested

மணிப்பூரில், பா.ஜ., பிரமுகர் நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தவுபால் மாவட்டத்தில் ஷேத்திரி பகுதியைச் சேர்ந்தவர் லைஷ்ராம் ராமேஷ்வர் சிங், ௫௦. இவர், இப்பகுதியில் பா.ஜ.,வின் மாநில முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் அமைப்பாளராக இருந்தார். இந்நிலையில், நேற்று இவர் தன் வீட்டு வாசல் முன் நின்றிருந்தபோது, பதிவு எண் இல்லாத காரில் வந்த மர்ம நபர்கள், ராமேஷ்வர் சிங்கை சுட்டுவிட்டு தப்பிவிட்டனர்.உடனே அவரை, அப்பகுதியினர் மீட்டு, … Read more

இடைத்தேர்தல்: “திமுக-வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது” – நெல்லையில் அண்ணாமலை பேச்சு

பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரான நயினார் நாகேந்திரன் இல்லத்துக்கு வந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அந்த வேட்பாளருக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவரே அதிருப்தி தெரிவித்திருக்கிறார். அண்ணாமலையுடன் நயினார் நாகேந்திரன் தி.மு.க கூட்டணிக்கு இடைத்தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் அக்கட்சியின் மூத்த அமைச்சர் தலைமையில் இப்போதே தேர்தல் … Read more

இந்திய உணவகத்தில் சாப்பிட்ட இறந்துபோன கணவர்… உண்மையை வெளிப்படுத்திய பிரித்தானிய பெண்

உள்ளூர் இந்திய உணவகம் ஒன்று வெளியிட்ட விளம்பர காணொளியில் இறந்துபோன தமது கணவரை அடையாளம் கண்டதாக கூறிய பிரித்தானிய பெண் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். கணவர் இறந்து 9 ஆண்டுகள் தொடர்புடைய உணவகத்தில் கடந்த வாரம் தமது கணவர் உணவருந்தியிருக்கலாம் என அந்த உணவக நிர்வாகம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய அந்த பெண், தமது கணவர் இறந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்டது என்றார். Credit: Google maps இது தவறுதலாக நடந்த விடயமாக இருக்கலாம் எனவும், ஆனால் அந்த காணொளி … Read more

நாஞ்சில் சம்பத் அரசு மருத்துவனையில் அனுமதி..

நாகர்கோவில்: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்னோவா சம்பத் இன்று அழைக்கப்படும் நாஞ்சில் சம்பத் பல்வேறு கட்சிகளை கடந்து, தற்போது திமுகவில் இருந்து வருகிறார்.  இலக்கியவாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்தக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை  கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு  மருத்துவர்கள்  … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 376 புள்ளிகள் குறைந்து 60,602ஆக வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 376 புள்ளிகள் குறைந்து 60,602ஆக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 119 புள்ளிகள் அதிகரித்து 17,999ஆக வர்த்தகமாகி வருகிறது.

இன்ஸ்டா காதல்; கண்டித்த பெற்றோர் – ரயில் முன் பாய்ந்த ஐ.டி.ஐ மாணவன், பள்ளி மாணவி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலிருக்கும் வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 17 வயது மகள், அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்புப் படித்து வந்தார். இந்த மாணவிக்கு ஆரணி அடுத்திருக்கும் களம்பூர் அரியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஐ.டி.ஐ மாணவன் ஒருவனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாணவனின் ரீல்ஸ் வீடியோக்கள் மாணவியை கவர்ந்ததால், காதல் வயப்பட்டார். இருவரும் செல்போன் நம்பர்களை பரிமாறிக்கொண்டு பேசிவந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருத்தரப்பு வீட்டுக்கும் சமீபத்தில் தெரியவந்தது. ‘இந்த வயதில் … Read more

ரூ.1,04,059 கோடியாக அதிகரிப்பு; வரி வசூலில் சாதனை படைத்து வரும் தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வரி வசூலில் தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது.  கடந்த மாதம் ரூ.1,04,059 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்ததும், வருமானத்தை பெருக்கும் நோக்கில் பெரும்பாலான வரிகளை உயர்த்தியது. முதலில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. பின்னர், மின் கட்டணம் உள்பட பல வரிகள் உயர்த்தப்பட்டு உள்ளன. வணிக வரிகளும் உயர்த்தப்பட்டு உள்ளதுடன், வரி வருவாய் … Read more

குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தென்காசி: குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.