குடியரசு தினத்தன்று விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

விருதுநகர்: குடியரசு தினத்தன்று விடுமுறை விடாத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விருதுநகரில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து உதவி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நடவடிக்கையில், விருதுநகரில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மணப்பாறை அருகே கருங்குளம் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 22 பேர் காயம்

திருச்சிராப்பள்ளி: மணப்பாறை அருகே கருங்குளம் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 22 பேர் காயம் அடைந்துள்ளனர். 3 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் 229 காளைகள் களம் இறக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 22 பேரில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி: ஜாமீனில் வெளியே வந்தவர் வெட்டிக் கொலை! – பழிக்குப் பழியாக நடந்ததா?

தூத்துக்குடி, கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் கருப்பு என்ற கருப்பசாமி. லாரி டிரைவரான இவர், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கு தொடர்பாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்திருந்தார். நேற்று இரவு தன்னுடைய மாமியார் வீடு இருக்கும் தெற்கு சங்கரப்பேரிக்கு தன்னுடைய மனைவியைப் பார்க்கச் சென்றிருக்கிறார். அப்போது இவரை 8 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்திருக்கிறது. கொலைசெய்யப்பட்ட கருப்பசாமி மாமியாரின் … Read more

எல்லையில் குவிக்கப்படும் அதிகப்படியான படைகள்: மேற்கு நாடுகளின் மீது தாக்குதல் நடத்த தயாராகும் புடின்

போரின் ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்கு நாடுகள் மீது விளாடிமிர் புடின் தாக்குதல் நடத்துவார் என உக்ரைனின் மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். உக்ரைனில் குவியும் படைகள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீதான படையெடுப்பை தொடங்கி ஓராண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், லுஹான்ஸ்க் முதல் டொனெட்ஸ்க் வரையிலும், சபோரிஜியா மற்றும் கெர்சன் முழுவதும் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டு வருவதை செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன என்று உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Getty Images உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் … Read more

காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி பொருந்தாது – ஜெய்ராம் ரமேஷ் கருத்து

அவந்திபோரா: காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி பொருந்தாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், நாடு முழுவதும் பரவியுள்ள ஒரே தேசிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எனவே 2024 தேர் தலுக்காக அமைக்கப்படும் எந்தஎதிர்க்கட்சி கூட்டணிக்கும் காங்கிரஸ் மட்டுமே ஆணிவேராக இருக்க முடியும். நாட்டின் ஒவ்வொரு கிராமம், தொகுதி, மற்றும் நகரங்களிலும் … Read more

மருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை: முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்த முத்தமிழ்பேரவையில் தமிழில் மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. மருத்துவ நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்று முதல்வர் கூறியுள்ளார்.

காலிஃபிளவர், ரோஜா, முருங்கைப்பூ… பூக்களில் வித்தியாசமான வீக் எண்டு ரெசிப்பீஸ்

இந்த வாரம் ஒரு மாறுதலுக்காக பூக்களில் சமையல் செய்வோமா….? என்ன பூக்களில் சமையலா என்கிறீர்களா…. இந்தப் பூக்கள் உங்களுக்குப் பரிச்சயமானவைதான்… எளிதில் கிடைக்கும், சுவையில் அசத்தும். இந்த வார வீக் எண்டை ஃபிளவர் சமையலில் அசத்துங்கள்…. கோபி ஃப்ரைடு ரைஸ் தேவையானவை: பாஸ்மதி அரிசி – ஒரு கப் காலிஃப்ளவர் (சிறிய பூக்களாக நறுக்கியது) – ஒரு கப் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் – தலா 3 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு (பொடியாக நறுக்கியது) – … Read more

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள்

கணவர் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில் மனைவி தனது இரட்டை குழந்தைகளுடன் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை குழந்தைகள் தமிழகத்தின் கடலூரை சேர்ந்தவர் ஜெயா (25). இவருக்கும் பெரம்பலூரை சேர்ந்த கண்ணன் – தமிழ்செல்வி மகன் விஜயகுமார் என்பவருக்கும் கடந்த 2020ல் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு நிகிதா, நிகிசா என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர். என்ஜினீயரான விஜயகுமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஜெயா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் … Read more

திறப்பு விழா சலுகையால் அலைமோதும் கூட்டம்

நாமக்கல்: நாமக்கலில் சிக்கன் கடை திறப்பு விழா சலுகையால் கூட்டம் அலைமோதுகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் சாலையில், புதிதாக திறக்கப்பட்டுள்ள இறைச்சி கடையில், 1 கிலோ சிக்கன் வாங்கினால் அரை கிலோ இலவசம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பால் கடையில் சிக்கன் வாங்க கூட்டம் அலைமோதுகிறது.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் டேங்கர் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளையில் டேங்கர் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வரதராஜன், சாம்ராஜ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.