`நாயை அடிக்கிற மாதிரி அடிச்சிருவேன் பாத்துக்கோ..!' – மிரட்டிய பெண் எஸ்.ஐ – விளக்கம் கேட்ட எஸ்.பி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் கந்தன். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையின் பிணவறையில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி தாயம்மாள். இவர்களின் மகள் தனலெட்சுமிக்கும், தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த முத்துக்குட்டி நாராயணன் என்பவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. கணவன், மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுவதும், பின்னர் இருவரின் பெற்றோர் சமரசம் செய்து வைப்பதும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் … Read more