ஐ.டி. நிறுவனங்களில் வேலை இழப்பு 30 சதவிகிதமாக உயர்வு! ஐ.டி ஊழியர்களே அலர்ட்!

நமது வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தால், நமது தெருவில் குறைந்தபட்சம் இரண்டு ஐ.டி ஊழியர்களாவது இருப்பார்கள். இவ்வளவு ஏன்? நமது உறவினர்கள் அல்லது நண்பர்களிலேயே ஒருவராவது ஐ.டி ஊழியராக இல்லாமல் இருக்க மாட்டார்கள். இப்படி ஐ.டி. ஊழியர்கள் எங்கும் இருக்கும் சூழலில், ஐ.டி. நிறுவனங்களில் வேலை இழப்புகள் 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியைக் கிளப்பி வருகிறது. அதிக வேலைவாய்ப்புகளை வழங்கு ஐ.டி! வேலையை விட்டுச் செல்லும் ஊழியர்கள்… ஐ.டி நிறுவனங்கள் சந்திக்கும் சவால்கள்! உலகளவில் ஐ.டி நிறுவனங்கள் … Read more

அடிமேல் அடி வாங்கும் ரஷ்யா… தலைநகரில் நுழைந்த ரஷ்ய ட்ரோன்களை வேட்டையாடிய உக்ரைன் ராணுவம்

உக்ரைன் தலைநகர் கீவ்வை தாக்கிய சுமார் 20 ரஷ்ய ட்ரோன்களில் 15-ஐ உக்ரைனிய வான் பாதுகாப்பு படை அளித்துள்ளதாக அந்த நாட்டின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தலைநகர் கீவ்வில் தாக்குதல் உக்ரைனிய தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது திங்கட்கிழமை ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தலைநகர் மீதான தாக்குதலில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏதும் இல்லை என்றும், சோலோமியான்ஸ்கி மற்றும் ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டங்களில் தாக்குதல் நடந்த இடங்களில் மருத்துவர்கள் பணிபுரிந்து வருவதாகவும், பூர்வாங்க தகவல்கள் … Read more

ராணிப்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் பாய்ந்து விபத்து: 3 பேர் காயம்

ஆற்காடு: ராணிப்பேட்டை ஆற்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். புதுப்பாடி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் கார் பாய்ந்த விபத்தில் நீரில் முழ்கிய 3 பேர் மீட்கப்பட்டுள்ளார்.

திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனம் பூசும் பணி; 15 நாள்களில் சுற்றுலா பயணிகள் அனுமதி!

சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அன்றைய முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. கடலின் நடுவே அமைந்துள்ளதால் கடல் காற்று, மழை, வெயில் போன்றவைகளால் திருவக்குவர் சிலை பாதிக்கப்படும். எனவே நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவள்ளுவர் சிலை சுத்தம் செய்யப்பட்டு ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட பிறகு ஐந்தாவது முறையாக ரசாயன கலவை பூசும் பணி கடந்த … Read more

14 மாணவர்கள் தற்கொலை! வெளியான அதிர்ச்சி காரணம்

இந்தியாவில் உள்ள முக்கிய நகரில் 2022இல் இதுவரை மொத்தம் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அதற்கான அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது. மாணவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா நகரில் தான் இந்த துயர சம்பவங்கள் நடந்துள்ளது. ஐ.ஐ.டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரபல தொழிற்கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளுக்கான பயற்சி வகுப்புகள் ராஜஸ்தானின் பல நகரங்களில் பெரிய அளவில் நடத்தப்படுகின்றன. நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் முக்கிய கேந்திரமாக ராஜஸ்தானின் கோடா நகரும் உருவெடுத்துள்ளது. அங்கு உள்ள … Read more

பொங்கல் பரிசு ரூ.1,500ஆக உயர்த்தி கொடுக்க தமிழக அரசு முடிவு?

சென்னை: முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1500 பணம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை தமிழர்கள் சிறப்புடன் கொண்டாட  தமிழகஅரசு பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, … Read more

சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது போக்சோ சிறப்பு நீதிமன்றம்..!!

சென்னை: சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியின் தாத்தா, சித்தப்பாக்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறுமியின் சகோதரர்கள் ஒருவருக்கு 10 ஆண்டும், மற்றொருவருக்கு 5 ஆண்டும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவின் புகாரில் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

‛‛கூகுளில் அதிகம் தேடப்பட்ட உலக கால்பந்து பைனல்: சுந்தர் பிச்சை தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நேற்றைய உலக கால்பந்து பைனலின்போது கூகுளில் அதிகம் பேர் தேடியதாக, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். கத்தாரில் 22வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. நேற்று லுசெய்ல் மைதானத்தில் நடந்த பைனலில் அர்ஜென்டினா(உலக ரேங்கிங்கில் 3வது இடம்), பிரான்ஸ்(4வது இடம்) அணிகள் மோதின. இதில் உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என … Read more

விழித்திறன் சவால் மனைவி; வியக்கவைக்கும் பூந்தோட்டம் அமைத்து அன்பை வெளிப்படுத்திய கணவன்!

ஜப்பானில், விழித்திறன் மாற்றுத்திறனாளியான தன் மனைவிக்காக, தோட்டத்தில் அழகிய, மணம் வீசும் பூச்செடிகளை நட்டு தனது அன்பினை வெளிப்படுத்தி வரும் கணவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். தன் மனைவியால் பூக்களைப் பார்க்க முடியவில்லை என்றாலும், அவற்றில் இருந்து வரும் மணம் அவருக்கு சந்தோஷத்தை தரும் என்பதற்காகவே இந்தத் தோட்டத்தை உருவாக்கியதாகக் கூறியிருக்கிறார் அந்த அன்புக் கணவர். குரோகி மற்றும் அவரின் மனைவி, ஜப்பானின் ஷின்டோமி என்ற கிராமப்புறத்தில் பால் பண்ணையாளர்களாக, இரண்டு அழகான குழந்தைகளை வளர்த்து … Read more