'கே.எஸ்.அழகிரிக்கு எதிராக புதிய அணி?' – காங்கிரஸில் வலுக்கும் உட்கட்சி பூசல்!

தமிழக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பிரச்னைக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. இதனால் சத்தியமூர்த்தி பவனில் அவ்வப்போது ஆக்க்ஷன் காட்சிகளைப் பார்க்க முடியும். ஆனால் 2019-ம் ஆண்டு தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்ட பிறகு கோஷ்டி பூசல் சற்று குறைந்தது. இதனால் அவருக்கு கட்சியினர் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவர் என்ற ‘இமேஜ்’ உருவானது. இதனைத் தன்னை காக்கும் அரணாக அழகிரி பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் 15-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளரான … Read more

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: குண்டு வீச்சு விமானங்களுடன் அதிகரிக்கும் போர் பயிற்சி

வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீண்டும் தங்கள் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை அமெரிக்காவின் முக்கிய பகுதிகளை தாக்கி அழிக்க கூடிய சக்தி கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா ஏவி இருப்பதாக ஜப்பான் சமீபத்தில் தெரிவித்து இருந்தது. அத்துடன் இந்த ஏவுகணை ஹொக்கைடோ-வின்(Hokkaido) மேற்கே 210 கிமீ தொலைவில் உள்ள கடல் பகுதியில் செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்ததும் … Read more

இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு 3.2லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 1.31 லட்சம் பேர் புறக்கணிப்பு…

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை 1.31 லட்சம் பேர் எழுதவில்லை என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழகஅரசு பணிகளில் காலியாக உள்ள  92 பணியிடங்களுக்கு 3,22,416 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இன்று தேர்வை எழுத பாதி அளவிலான நபர்களே வந்திருந்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல் நிலை தேர்வு. அரசு பணியில் காலியாக உள்ள துணை ஆட்சியர் 18 இடங்களும், துணை காவல் கண்காணிப்பாளர் 26 … Read more

துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றார் சைலேந்திரபாபு

சென்னை: டிஐஜி முதல் டிஜிபி வரை நடந்த துப்பாக்கி சுடுதலில் சைலேந்திர பாபு தங்கப்பதக்கம் வென்றார். சென்னை வடக்கு காவல் கூடுதல் ஆணையர் அன்பு வெள்ளி, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் வெண்கலம் வென்றார். மதுரை காவல் ஆணையர் செந்தில்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

`ஆளுநர் தமிழிசை அரசியலுக்கு அப்பாற்பட்டவர்' – தமிழன்னை விருது பெற்ற பத்மா சுப்ரமண்யன்

தமிழ்க்குடும்பங்களின் தலைமகளாக விளங்குகிற அவள் விகடன் இதழ் தன் வெள்ளி விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மருத்துவம், விளையாட்டு, இலக்கியம், சமூகச் செயல்பாடு, கல்வி என பல்துறை சார்ந்தும் தன் செயற்கரிய செய்கையால் சாதித்த பெண்களை பெருமிதப்படுத்துவதற்காக ‘அவள் விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த 5ம் ஆண்டு அவள் விருதுகள் 19 பிரிவுகளில் 21 பேருக்கு வழங்கப்பட்டது. ஆளுநர் தமிழிசை | அவள் விருதுகள் அவள் 25… அவர்கள் 25! – ஒரு சர்ப்ரைஸ் திட்டம் – … Read more

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம்: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு…

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் நவம்பர் 18ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி முக்கிய உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, பள்ளி மாணவ – மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தும்படி டிஜிபி சி.சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ‘‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை தடுப்பு தினம் நவம்பர் 19ம் நாள் உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு பள்ளி குழந்தை களை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு … Read more

கீழடி அருங்காட்சியத்தை 2 மாதங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: கீழடி அருங்காட்சியத்தை 2 மாதங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கீழடி அருங்காட்சியக கட்டிட பணிகள் 95% முடிவடைந்ததுள்ளன எனவும் தேவைப்பட்டால் கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு, கடந்த கால அகழாய்வு முடிவின் அடிப்படையில்  தொடங்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

ஷ்ரத்தா கொலை எதிரொலி: வீட்டை விட்டு ஓடிப்போன பெண்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு படை – மராட்டிய அரசு நடவடிக்கை!

மும்பை, மும்பையில் நடந்த ஷ்ரத்தா கொலை சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. மும்பை வசாய் பகுதியை சேர்ந்த கால்சென்டர் ஊழியர் ஷரத்தா (வயது26). இவரை காதலன் அப்தாப் அமீன் கடந்த மே மாதம் கழுத்தை நெரித்து படுகொலை செய்தார். மேலும் அவர் ஷரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின்னர் அதை சிறிது, சிறிதாக தூக்கி எறிந்து உள்ளார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த கொடூர படுகொலை … Read more

மகளுடன் வெளியே வந்த அதிபர் கிம் | 3 இன்ச் வளர 1.2 கோடி செலவு செய்த நபர் | உலக செய்திகள் ரவுண்ட்அப்

ஈராக்கில் எரிவாயு கசிந்து வெடித்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் பலத்த காயங்களோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாலி கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பாப் கலைஞர் ஆண்டி வார்ஹோல் பெயின்ட் செய்த காரின் மீது காலநிலை மாற்றப் போராளிகள் மாவு வீசி சேதப்படுத்தினர். இவர்கள் மூன்றாவது முறையாக கலை கண்காட்சியை குறிவைத்து இவ்வாறு செய்திருக்கின்றனர். உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தை ஹங்கேரி ஆதரிக்காது என்று பிரதமர் விக்டர் ஓர்பன் (Viktor Orbán) தெரிவித்திருக்கிறார். … Read more

இங்கிலாந்தில் வீட்டுக்கு அருகே பூமிக்கடியில் இரகசிய அறை: சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இங்கிலாந்தில் பூமிக்கடியில் இரகசிய அறை ஒன்றை பிரித்தானியர் ஒருவர் கட்டி வைத்திருப்பதை பொலிசார் கண்டுபிடித்தார்கள். அறையின் கீழிருந்த இரகசிய அறை இங்கிலாந்திலுள்ள Cowley என்ற இடத்தில் ஒரு குடும்பம் வாழ்ந்துவந்த நிலையில், பழைய பொருட்களை போட்டுவைப்பதற்கான அறை போன்ற ஒரு அறையை உருவாக்கியிருந்தார் Akil Budini (40) என்ற பிரித்தானியர். அந்த அறையை பொலிசார் சோதனையிட நேர்ந்தது. பொலிசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி அந்த அறையை பொலிசார் சோதனையிட்டபோது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அங்கு பிளாஸ்டிக் … Read more