“ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடாவிட்டால்…" – எம்.எல்.ஏ-வின் நேரடி மிரட்டல்… குற்றம்சாட்டும் பாஜக!

ஆம் ஆத்மி கட்சியின் விகாஸ் பூரி எம்.எல்.ஏ மகேந்திர யாதவ் தன்னுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களை மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குஜராத் சட்டமன்றத் தேர்தல் மற்றும் டெல்லி எம்.சி.டி தேர்தல் வருவதையொட்டி ஆம் ஆத்மி, பா.ஜ.க இடையே தீவிர போட்டி நிலவுகிறது. அதற்காக, இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் தீவிரமாக தேர்தல் களத்தை பரபரப்பாக்கி வருகின்றனர். 250 வார்டுகளைக் கொண்ட டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் (எம்சிடி) டிசம்பர் 4-ம் … Read more

பப்பாளியை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை வெறும் வயிற்றில் குடிங்க! இந்த அற்புத நன்மைகள் கிடைக்கும்

நாம் விரும்பி உண்ணும் பழங்களில் பப்பாளியும் ஒன்றாகும். இந்த பழத்தில் இதய நலன், ஜீரண மண்டலம், புற்றுநோய் எதிர்ப்பு பண்பு என பலவிதமான ஆரோக்கிய கூறுகள் உள்ளன. பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பப்பாளியை தண்ணீரில் போட்டு வெறும் வயிற்றில் குடித்தால் பல நன்மைகள் உடலுக்கு வந்து சேர்கின்றது. அவை என்னென்ன என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.  எப்படி எடுத்து கொள்ளலாம்?     ஒரு முழு பப்பாளி பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி … Read more

திருவண்ணாமலை தீபத்திருவிழா: உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி, அங்கு மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில்  தீபத்திருவிழாவையொட்டி, வரும் 27ந்தேதி கொடியேறுகிறது. 10நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் இறுதி நிகழ்ச்சியாக டிசம்பர் 6-ம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.  தீபத்திருவிழாவில் சுமார் 50லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பாக, அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு ஆகியோர் மாவட்ட நிர்வாகத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் வழக்கு: மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் போராட்டம்: அரசு மருத்துவர்கள் சங்கம்

மதுரை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் வழக்கில் மருத்துவர்கள் மீது பதியப்பட்ட வழக்குப்பிரிவை மாற்ற வேண்டும். மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் அரசு மருத்துவர்கள் சங்கம் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர். மதுரையில் அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத்தலைவர் செந்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு வலுவடைந்தது: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு| Dinamalar

புதுடில்லி: தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். … Read more

'காசி தமிழ் சங்கமம்' – தமிழ்நாட்டில் கிளம்பிய எதிர்ப்பும் பாஜக பதிலும்!

தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் இடையே கலாசார உறவுகளை மேம்படுத்தும் வகையில் `காசி – தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சிகள் கடந்த 16-ம் தேதி வாரணாசியில் தொடங்கியது. இதுகுறித்து முன்னதாக பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “வாரணாசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயான ஆழமான கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே காசி-தமிழ் சங்கமத்தின் நோக்கம். இந்த நிகழ்ச்சியின் அறிவுசார் பங்குதாரர்களாகச் சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் செயல்படும். சென்னை ஐஐடி இந்த நிகழ்ச்சிகளில் சுமார் … Read more

ராணியாருக்காக உழைத்த அரண்மனை ஊழியர்களை கலங்கடித்த மன்னர் சார்லஸின் ஒற்றை முடிவு

விண்ட்சர் மாளிகையில் எலிசபெத் ராணியாருக்கு உதவியாக இருந்த முக்கிய ஊழியர்கள் பலரை மன்னர் சார்லஸ் பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பணி நீக்கம் செய்வார் விண்ட்சர் எஸ்டேட்டில் முழுவதும் பணியாற்றும் ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களை மன்னர் சார்லஸ் பணி நீக்கம் செய்வார் என்றே கூறப்படுகிறது. ராணியார் உயிருடன் இருந்த வரையில், பணி நீக்கம் என்பது மிக மிக அரிதாகவே நடந்துள்ளது. @getty ஆனால் தற்போது மன்னர் சார்லஸின் முடிவால் பெரும்பாலான ராஜகுடும்பத்து ஊழியர்கள் தங்கள் … Read more

டாஸ்மாக் வருமானம் குறித்து செய்தி வெளியிட்ட ஜூனியர் விகடன் மீது வழக்கு! அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டல்…

சென்னை: சாராயஅமைச்சர் என அரசியல்கட்சிகளால் விமர்சிக்கப்படும் செந்தில் பாலாஜி, தீபாவளியொட்டியை நடைபெற்ற டாஸ்மாக் வருமானம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக,  ஜூனியர் விகடன் பத்திரிகை மீது வழக்கு தொடரப்போவதாக தெரிவித்து உள்ளார். திமுக அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக  செந்தில்பாலாஜி உள்ளார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தபோது, பண மோசடி செய்ததாக அவர்மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இவர் டாஸ்மாக் மூலமாக அதிகம் பணம் சம்பாதித்து வருவதாக … Read more

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் பணிநீக்கம்: துணைவேந்தர் நடவடிக்கை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் ராமனை பணிநீக்கம் செய்து துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவு அளித்துள்ளார். தொலைதூர கல்வி இயக்ககத்தில்  முறைகேடு புகாரில் துணைவேந்தர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே துணைப்பதிவாளர் ராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று பணிநீக்கம் செய்துள்ளனர். உரிய அங்கிகாரம் இல்லாத தொழில்நுட்ப படிப்புகள் நடத்தியது தொடர்பான புகாரில் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளனர்.

சுங்கச்சாவடி கட்டணத்தை 40% வரை குறைக்க திட்டம்: நிதின் கட்கரி| Dinamalar

புதுடில்லி: சுங்கச்சாவடி கட்டணத்தை 40% வரை குறைக்க அரசு முடிவு எடுத்திருப்பதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒருமுறை சிறிய அளவிலான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அளித்துள்ள பதில் கடிதத்தை திமுக எம்பி பி.வில்சன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். … Read more