நடப்பாண்டு புதிய டிசைனில் பொங்கல் இலவச வேட்டி, சேலை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மற்றும் ஆய்வு …

சென்னை: பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து,  குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டிகள் மற்றும் சேலைகளை மாண்புமிகு முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக வேட்டி சேலை வழங்கப்படவில்லை. இந்த … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி தரப்பில் பதில் மனு தாக்கல்

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக அலுவலகத்தை சூறையாடி கட்சியின் விதிகளை பன்னீர்ச்செல்வம் மீறியுள்ளதாக பழனிச்சாமி குற்றசாட்டு தெரிவித்துள்ளார். பொதுக்குழு கூட்டப்படுவதற்கு முன்னதாக பன்னீர் செல்வத்துக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டது என்று பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது என்று பழனிச்சாமி கூறியுள்ளார்.

நெருக்கடி நிலையில் திருப்பூர் தொழில் துறை… பின்னலாடை ஏற்றுமதி 34% சரிவு!

பின்னலாடை மூலம் அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் நகரமாக திருப்பூர் விளங்கி வருகிறது. ஆயத்த ஆடைகள் மற்றும் ஓவன் ஆடைகள் தயாரிப்பில் இந்திய அளவில் திருப்பூரின் பங்களிப்பு 55 சதவீதமாக உள்ளது. திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் அதுசார்ந்த சாயமிடுதல், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, நூல் மில்கள் உள்ளிட்ட உப தொழில்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். திருப்பூர் `வேளாண் ஸ்டார்ட்-அப்’களுக்கு ரூ.10 லட்சம் … Read more

12 நாட்கள் ஒரே இடத்தில் வட்டமாக சுற்றிவந்த ஆடுகள்: உலகத்தின் அழிவுக்கு அடையாளமா?

சீனாவில் ஆட்டு மந்தை வைத்திருக்கும் ஒருவருடைய ஆடுகள் சில நடந்துகொண்ட விதத்தைக் கண்ட மக்கள் இது உலகத்தின் அழிவுக்கு அடையாளம் என்று கூறியிருக்கிறார்கள். 12 நாட்கள் ஒரே இடத்தை வட்டமாக சுற்றிவந்த ஆடுகள் அவரிடம் ஏராளம் ஆடுகள் உள்ளன. அவற்றை பல மந்தைகளாக அடைத்து வைத்துள்ளார். அவற்றில் சில ஆடுகள் தொடர்ந்து 12 நாட்கள் ஒரே இடத்தை சுற்றி சுற்றி வரும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன. The great sheep mystery! Hundreds of sheep … Read more

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: ஒரேநாளில் 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்..

திருவனந்தபுரம்:  சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை தொடங்கி உள்ள நிலையில், அங்கு  பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மற்றும் நேற்று தினங்களில், நாள் ஒன்றுக்கு  60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு, நடப்பாண்டு கட்டுப்பாடுகள் களையப்பட்ட சபரிமலைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், ஆன்லைன் பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், 41நாட்கள் நடை திறந்திருக்கும்படியான மண்டல பூஜை கடந்த 16ந்தேதி மாலை கோவில் நடை … Read more

ஜனவரி 10-ம் தேதிக்குள் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்க முடிவு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜனவரி 10-ம் தேதிக்குள் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு நிறங்களில் 15 புதிய டிசைன்களில் சேலைகளும், ஆண்களுக்கான வேஷ்டி 5 டிசைன்களில் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அரசியல்ல சொகுசு வாழ்க்கை சகஜமப்பா| Dinamalar

புதுடில்லி: டில்லி ஆம்ஆத்மியின் அமைச்சருக்கு ஜெயிலில் மசாஜ் செய்யப்பட்ட வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சத்யேந்திரஜெயின் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.. சுகேஷ் என்பவரிடம் 10 கோடி பெற்றதாகவும் புகார் உள்ளது. டில்லி அமைச்சரவையில் சிறைத்துறை அவருக்கு தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு ஜெயிலில் மசாஜ் செய்த … Read more

உலகிற்கு முதன்முறையாக தனது மகளை அறிமுகம் செய்த கிம் ஜோங் உன்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தனது 9 வயது மகளை முதன்முறையாக உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளதுடன், அரசு செய்தி ஊடகத்தில் புகைப்படமும் வெளியாகியுள்ளது. மகளின் புகைப்படம் இதுவரை தமது பிள்ளைகள் தொடர்பில் எந்த தகவலையும் வெளியிட்டிராத கிம் ஜோங், தற்போது முதன்முறையாக தமது மகளின் புகைப்படத்தை அரசு செய்தி ஊடகத்தில் வெளியிட அனுமதித்துள்ளார். @reuters குறித்த சிறுமி கிம் ஜோங் உடன் ஏவுகணை ஏவும் வளாகத்தில் காணப்பட்டுள்ளார்.. மட்டுமின்றி, பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை முடியும் … Read more

திஹார் சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஜெயிலில் சிறப்பான கவனிப்பு… வீடியோ

டெல்லி திஹார் சிறையில் உள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஜெயிலில் மசாஜ் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணமோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கப் பிரிவினரால் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட சத்யேந்திர ஜெயின் டெல்லி திஹார் சிறையில் உள்ளார். அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு வசதிகள் செய்து கொடுத்த விவகாரத்தில், சிறை கண்காணிப்பாளர் உட்பட 4 சிறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதுடன், 35க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #WATCH | … Read more