உக்ரைனில் பயங்கர ஏவுகணை தாக்குதல்: கொடூர முகத்தை மீண்டும் காட்ட தொடங்கும் ரஷ்யா

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா இன்று மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தி இருப்பதாக அந்த நாட்டின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உக்ரைனை சிதைக்க தயாராகும் புடின் உக்ரைன் போர் 11வது மாதத்தை தொட்டு இருக்கும் நிலையில், ரஷ்யா மற்றொரு மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உக்ரைன் முதன்மை தளபதி எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதனடிப்படையில் இராணுவ பயிற்சிகள் தீவிரமாக வழங்கப்பட்டு போருக்கு ஏற்ற வீரர்களாக தயார்படுத்தப்பட்ட 200,000 ரஷ்ய வீரர்களை, உக்ரைன் மீதான புதிய தாக்குதலில் பயன்படுத்த காத்து … Read more

ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ.4,194.66 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செய்ல்படுத்த டிசம்பர் 16-ல் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாக்., அமைச்சர் பேச்சால் சர்ச்சை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பிரதமர் மோடியை கசாப்புக்கடைக்காரர் எனவும், அவரும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் பாகிஸ்தான் அமைச்சர் வெளியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. பயங்கரவாத பிரச்னை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்த இந்தக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க் சென்றுள்ளார். நேற்றைய (டிச.,15) கூட்டத்தில் பாகிஸ்தானின் வெளியுறவு … Read more

“நானும் ஜோசியக்காரன்தான்" – கருநாக்கை நீட்டிக் காட்டிய அமைச்சர் மஸ்தான் – அரங்கில் எழுந்த சிரிப்பலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகர தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 14-ம் திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில், வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ” ‘ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சராக முடியாது. அவர் ஜாதகத்திலே அந்த அம்சம் இல்லை’ என்றெல்லாம் தேர்தல் நேரத்திலே சிலர் பேசினார்கள். ஆனால், அந்த ஜோசியங்களை எல்லாம் பொய்யாக்கி, இன்று ஆட்சியிலே அமர்ந்திருக்கிறார்.  செஞ்சி மஸ்தான் விழுப்புரம்: நேர்காணலில் மனைவி, … Read more

இறந்ததாக கருதி தந்தைக்கு பால் ஊற்றிய மகன்! நடந்த சடங்குகள்… எழுந்து உட்கார்ந்த ஆச்சரியம்

தமிழகத்தில் இறந்ததாக நினைத்து தந்தைக்கு மகன் பால் ஊற்றியபோது அவர் திடீரென்று எழுந்து நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பொருட்கள் போட்டு எரித்து சடங்கு புதுக்கோட்டை மாவட்டம் முரண்டாம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (60) விவசாயியான இவர் தனியார் மருத்துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு சம்பந்தமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி மருத்துவர்கள் ஆம்புலன்சில் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். முரண்டாம்பட்டி அருகே வந்த போது சண்முகம் மயங்கிய நிலையில் இருந்தார். ஊரை நெருங்கிய … Read more

கடனை செலுத்தாததால் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் வீடு ஏலம்! பொருட்களை மீட்டுத்தரக்கோரி காவல்நிலையத்தில் புகார்..

சென்னை:  வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்ட ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தியின் வீடு ஏலம் விடப்படுகிறது. இதையடுத்து சீல் வைக்கப்பட்ட அந்த வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என காவல்நிலையத்தில் மதுவந்தி புகார் கொடுத்துள்ளார். மனுவில்,  அந்த வீட்டில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை மீட்டுத் தரக் கோரியுள்ளார். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் பாஜகவின் செயற்குழு உறுப்பிdராக இருந்து வருகிறார். மேலும் கல்வி நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இவர் தனது … Read more

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தவறுதலாக கைது செய்யப்பட்ட 2 பேருக்கு இழப்பீடு தர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பரமக்குடி பாஜக பிரமுகர் முருகேசன் கொலை வழக்கில் தவறுதலாக கைது செய்யப்பட்ட 2 பேருக்கு இழப்பீடு தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராஜா முகமது, மனோகரன் ஆகியோருக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க காவல் ஆய்வாளருக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர். காவல் ஆய்வாளரின் தவறான விசாரணையில் கைது செய்யப்பட்ட 2 பேரின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கூறினார்.

நான்கு கால்களுடன் பிறந்த பெண் குழந்தை: ம.பி.,யில் ஆச்சரியம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் குவாலியர்: மத்திய பிரதேசத்தில் பெண் குழந்தை ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. அதில் இரு கால்கள் செயலற்று இருப்பதாகவும், அக்கால்களை அகற்றலாமா என குழந்தையை பரிசோதித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று (டிச.,16) பெண் குழந்தை பிறந்தது. ஆனால், இதில் ஆச்சரியம் என்னவெனில், அப்பெண் குழந்தைகள் … Read more

“ராசாவுக்கு தவறான தகவல் கொடுத்திருக்கின்றனர்; எங்கள் போராட்டம் தொடரும்!"- கோவை விவசாயிகள் அறிவிப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் தாலுகா சுற்றுவட்டார கிராமங்களில் தொழிற் பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து 3,731 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கோவை விவசாயிகள் போராட்டம் “விவசாய நிலம் கையகப்படுத்தப்படாது..!” – கோவை தொழிற் பூங்கா தொடர்பாக ஆ.ராசா உறுதி கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த நீலகிரி தி.மு.க எம்.பி ஆ.ராசா, “தொழிற் பூங்காவுக்காக … Read more

ஹரியும் மேகனும் அவிழ்த்துவிட்டுள்ள பொய்கள்… உண்மை என்ன தெரியுமா?

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியிட்டுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடரில் சரமாரியாக பொய்களை அவிழ்த்துவிட்டுள்ளார்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா? நெட்ப்ளிக்ஸ் தொடரில் உண்மைக்குப் புறம்பான விடயங்கள் ஒருபக்கம் ஹரி மேகனுடைய நெட்ப்ளிக்ஸ் தொடர் அவர்களுடைய குடும்பம் குறித்த தனிப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தியதன் மூலம் ராஜ குடும்பத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கமோ, அந்த தொடரில் ஹரியும் மேகனும் வெளியிட்டுள்ள பல விடயங்கள் உண்மையில்லை என ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. Credit: Netflix திருமணம் ஆன புதிதில், சிறிய … Read more