கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்ற முடிந்த நிலையில், அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்ற முடிந்த நிலையில், அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவேற்றாது. ரூ. 2,29,20,669, 228 கிராம் தங்கமும், 1,478 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.

மனிதநேயம், ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்காக மேற்கு வங்காளம் போராடுகிறது – மம்தா பானர்ஜி

கொல்கத்தா, மனிதாபிமானம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மேற்கு வங்காளம் போராடுகிறது என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 28 வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஒற்றுமை, மனிதநேயம், பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மேற்கு வங்காளம் போராடி வருகிறது. இந்த போராட்டம் தொடரும். எங்கள் அரசு யாருக்கும் தலை வணங்குவதில்லை, கெஞ்சவும் இல்லை. அமிதாப் பச்சன் இந்திய சினிமாவுக்கு நீண்ட காலமாக ஆற்றிய … Read more

"நடுவர் டேனியல் ஒர்சாடோ மிகவும் மோசமானவர்!"- குரோஷிய வீரர் லூகா மாட்ரிச் குற்றச்சாட்டு

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றில் குரேஷியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி  அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.  இதனிடையே அர்ஜெண்டினாவின் முதல் கோலுக்குக் காரணம் இத்தாலிய நடுவர் டேனியல் ஒர்சாடோ வழங்கிய தவறான பெனால்டி தீர்ப்புதான் என்று கூறி வரும் நிலையில், குரோஷிய அணியின் கேப்டன் லூகா மாட்ரிச் அந்த நடுவர் குறித்து விமர்சித்துப் பேசியிருக்கிறார். இத்தாலிய நடுவர் டேனியல் ஒர்சாடோ குறித்துப் பேசிய லூகா மாட்ரிச், “என்னைப் பொறுத்தவரை இது பெனால்டியே கிடையாது. பொதுவாக நடுவர்களைப் பற்றி … Read more

பள்ளிகளில் ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் சிசிடிவி 636 காமிராக்கள்! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் 636 சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சென்னைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, … Read more

சென்னை ராயப்பேட்டையில் 20-வது சர்வதேச திரைப்பட விழாவை அமைச்சர் சாமிநாதன் தொடங்கிவைத்தார்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் 20-வது சர்வதேச திரைப்பட விழாவை அமைச்சர் சாமிநாதன் தொடங்கிவைத்தார். இன்று தொடங்கிய சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் 51 நாடுகளை சேர்ந்த 102 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு 775 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

பிரான்சில் இருந்து கடைசி ரபேல் போர் விமானம் இந்தியா வந்தடைந்தது

புதுடெல்லி, நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2022 ஆம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, 36 ரபேல் விமானங்களில் முதல்கட்டமாக 5 விமானங்கள் கடந்த ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தடைந்தன. அவை முறைப்படி இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன. அவை … Read more

தூத்துக்குடி: `50 வருஷமா இதே நிலைமைதான்!' – கழுத்தளவு தண்ணீரில் இறந்தவர் உடலை தூக்கிச் சென்று தகனம்

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகில் உள்ளது மழவராயநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முழுமையாக விவசாயத் தொழிலையே நம்பி உள்ளனர்.  இந்த கிராமத்திற்கு பாத்தியப்பட்ட மயானம், இதே கிராமத்திற்கு அருகில் ஓடும் வாய்க்காலுக்கு அக்கரையில் உள்ளது. மயானத்திற்குச் செல்ல என தனிப்பாதை எதுவும் இல்லாததால், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது உயிரிழந்தால் அவரின் உடலை வாய்காலைக் கடந்துதான் தூக்கிச் செல்ல வேண்டும். தண்ணீரில் உடலை சுமந்து செல்லும் உறவினர்கள் … Read more

நாட்டின் ஒட்டுமொத்த துயரத்தையம் மறக்கடித்த FIFA உலகக்கோப்பை! மெஸ்ஸியின் அணியிடமிருந்து அதிர்ஷ்டத்தை நம்பும் மக்கள்

FIFA உலகக் கோப்பை கொண்டாட்டம் அர்ஜென்டினாவின் பணவீக்க துயரத்தை தற்காலிகமாக மறக்கடித்து மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. துயரத்தை மறந்து மக்கள் உற்சாகம் அர்ஜென்டினாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் புகழ்பெற்ற கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் தலைமையில் அதன் கால்பந்து அணி வெற்றி பெற்றதன் விளைவாக ஒட்டுமொத்த நாடும் உற்சாகமாக உள்ளது. அர்ஜென்டினாவின் மூன்றாவது உலக சாம்பியன் பட்டத்தை 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெல்லும் கனவுடன் இருக்கும் நாட்டு மக்கள், குறைந்த பட்சம் இப்போதைக்கு அவர்கள் … Read more

செய்யாறில் தீபாவளி சீட்டு நடத்தி 43 கோடி ரூபாய் மோசடி… பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் போலீசில் புகார்…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு வி.ஆர்.எஸ். பைனான்ஸ் அண்ட் சிட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களிடம் தீபாவளி பண்ட் பிடிப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கானோரிடம் பணம் வசூலித்து வந்தது. தவணை முடிந்தும் பணம் வழங்காததை அடுத்து பணம் வசூலித்து தரும் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்தவர்கள் அக்டோபர் மாத இறுதியில் இந்த நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளனர். டிசம்பர் மாதம் 10 ம் தேதி அனைவரின் வங்கிக்கணக்கிலும் … Read more

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் கைது

விருதுநகர்: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கலையரசன் ரூ. 9 லட்சம் பெற்று ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக மாவட்டத் தலைவர், செயலாளர் மீது அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகியே மோசடி புகார் தெரிவித்துள்ளார்.