தூத்துக்குடி: `50 வருஷமா இதே நிலைமைதான்!' – கழுத்தளவு தண்ணீரில் இறந்தவர் உடலை தூக்கிச் சென்று தகனம்
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகில் உள்ளது மழவராயநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முழுமையாக விவசாயத் தொழிலையே நம்பி உள்ளனர். இந்த கிராமத்திற்கு பாத்தியப்பட்ட மயானம், இதே கிராமத்திற்கு அருகில் ஓடும் வாய்க்காலுக்கு அக்கரையில் உள்ளது. மயானத்திற்குச் செல்ல என தனிப்பாதை எதுவும் இல்லாததால், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது உயிரிழந்தால் அவரின் உடலை வாய்காலைக் கடந்துதான் தூக்கிச் செல்ல வேண்டும். தண்ணீரில் உடலை சுமந்து செல்லும் உறவினர்கள் … Read more