கடற்படை பல்கலையில் பெண்கள் நீதிமன்றத்தில் அரசு பதில்| Dinamalar

புதுடில்லி நம் கடற்படை பல்கலையில் சில குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் பெண்கள் சேருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. கடற்படை பல்கலையில் பெண்கள் சேர்ந்து படிக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் பெண்களுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்களை பல்கலையில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவாக விளக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரப்பட்டது. இந்த மனு … Read more

17.11.22 வியாழக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 17 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஹலோ ஜெலென்ஸ்கி! நாங்க ஜஸ்டினும், ரிஷி சுனக்கும் பேசுறோம்..கனேடிய பிரதமரின் வீடியோ

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு போன் செய்து பேசுவது போன்ற வீடியோவை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிர்ந்துள்ளார். உக்ரைனுக்கு ட்ரூடோவின் ஆதரவு இந்தோனேஷியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதியைத் தவிர்த்து மற்ற உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் ”நாங்கள் உக்ரைன் மக்களுக்காக உறுதியாக துணை நிற்கிறோம்” எனக் கூறினார். … Read more

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தீ விபத்து

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். விடுதி டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மருந்து தயாரிப்பு ஆலையில் குழாய் வெடித்து 3 பேர் பலி| Dinamalar

அமராவதி :ஆந்திராவில், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், ரசாயன பொருட்களை மறுசுழற்சி செய்யும் குழாய் வெடித்ததில், அங்கு பணியில் இருந்த மூன்று பேர் உயிரிழந்தனர். ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கவுரிபட்டினம் என்ற இடத்தில், தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.இங்கு, ரசாயன பொருட்களை மறுசுழற்சிக்கு எடுத்துச் செல்லும் குழாயில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை, பழுதுநீக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிக … Read more

போலந்து மீது ரஷ்யா ஏவுகணை வீசியிருக்க வாய்ப்பில்லை என்று கூறிய அமெரிக்க அதிபர் பைடனுக்கு ரஷ்யா பாராட்டு

போலந்து மீது ரஷ்யா ஏவுகணை வீசியிருக்க வாய்ப்பில்லை என்று கூறிய அமெரிக்க அதிபர் பைடனுக்கு ரஷ்யா பாராட்டுகளை தெரிவித்துள்ளது. ஜீ 20 மாநாட்டுக்காக இந்தோனேசியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் பைடன், அங்கு ஜி-7 அமைப்பின் அவசர கூட்டத்தில் கலந்துகொண்டார். அதற்க்கு பின்னர் பேசிய ஜோ பைடன் , போலந்தில் விழுந்து வெடித்தது ரஷ்யாவின் ஏவுகணையாக என கூறினார்.

“ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல..!" – லோக் ஆயுக்தா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் தொடர்ச்சியாக அசாதாரணசூழல் நிலவிவருகிறது. தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாகவே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க அரசுக்கும் மோதல்போக்கு தொடர்கிறது. முக்கியமாகத் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றன. முதல்வர் ஸ்டாலின் – ஆளுநர் ரவி இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, `ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல’ என்று … Read more

யுவன் சங்கர் ராஜாவை கேவலமாக திட்டிய பிரதீப்! சர்ச்சையில் லவ் டுடே இயக்குனர்

லவ் டுடே படத்தை இயக்கி நடித்துள்ள பிரதிப் ரங்கநாதன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சில வருடங்களுக்கு முன் திட்டி பதிவிட்டுள்ள பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. சூப்பர் ஹிட்டடித்த லவ் டுடே கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். 2019ம் ஆண்டு வெளியான அப்படம் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், தானே இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் லவ் டுடே. ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவான … Read more

முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி

சென்னை; திருச்சி முகாமில் உள்ள முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 4 பேருக்கும் பாஸ்போர்ட் கிடைத்தால் தான் அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப முடியும். 4 போரையும் முறைப்படி வெளியில் விட சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.