மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 பேர் கைது

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டெல்லியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கானா நாட்டை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் அளித்த தகவலில் கத்தார் வழியாக மும்பை வந்த பயணியை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 16 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் ஒரு இலையுதிர் காலம்! – ஜில் அனுபவம்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் கனடாவில் இலையுதிர் காலத்தில் பல இடங்கள் சென்று இலைகளின் வண்ணமயமான அழகை கண்டு களிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பார்த்த இடங்கள் அனைத்திலும் எனக்கு மிகவும் பிடித்தது ஆல்கன்குவின் பூங்கா. இந்த பூங்கா டொரான்டாவிலிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும், அங்குள்ள … Read more

இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் பெயர் அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி, நடப்பு  ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி … Read more

தமிழ்நாட்டை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கம்போடியா நாட்டில் சிக்கி தவிப்பு

ஃப்நாம் பெந்: தமிழ்நாட்டை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கம்போடியா நாட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். அடித்து துன்புறுத்துவது உடலில் மின்சாரம் பாய்ச்சுவது உள்ளிட்ட கொடுமைகளுக்கு உள்ளாவதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆன்லைன் நிறுவனத்தில் வேலை என்று அழைத்துச் செல்லப்பட்டு சட்டவிரோத செயல்களை செய்ய கூறி மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. உணவு இன்றி தவிப்பவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“மகாபாரதத்தை Lord of the Rings பாணியில் எடுத்தால் நான் நடிக்கத் தயார்!”- `ஆதிபுருஷ்' சைஃப் அலி கான்

1993-ம் ஆண்டு யாஷ் சோப்ராவின் ‘பரம்பரா’ திரைப்படத்தில் அறிமுகமான சைஃப் அலி கான் இன்றுவரை பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். Kya Kehna, Tanhaji, Hum Tum போன்ற பல வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார். தற்போது ஓம் ராவத் இயக்கத்தில், டி-சீரிஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள`ஆதி புருஷ்’ படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்க, ராவணன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சைஃப் அலி கானின் கனவு கதாபாத்திரம் குறித்துக் கேட்கப்பட்டது. … Read more

அரசுப்பள்ளி மாணவர்களை இழிவுபடுத்திய காமெடி பேச்சாளருக்கு ஐபிஎஸ் அதிகாரி பதிலடி…

சென்னை: அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு என ஸ்டாண்ட்அப் காமெடியாக பேசிய  நகைச்சுவை பேச்சாளரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஐபிஎஸ் அதிகாரியான வருண் குமார் பதிலடி கொடுத்துள்ளார். ஸ்டாண்ட் ஆப் காமெடி  செய்யும், நகைச்சுவை பேச்சாளரான அபிஷேக்குமார் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,  அரசு பள்ளியில் பயின்றவர்கள் குறைந்த அறிவுத்திறனை உடையவர்கள் என பேசியது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  மேலும் பல்வேறு தரப்பினரும் ஸ்டாண்ட் ஆப் காமெடியன் அபிஷேக் … Read more

காவல் அதிகாரிகள் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியக் கோரிய உத்தரவு ரத்து

சென்னை: காவல் அதிகாரிகள் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியக் கோரிய நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீசார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியக் கோரிய வழக்கறிஞர் சுகுமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

22 குழந்தைகள் உட்பட 34 பேரை சுட்டுக் கொன்ற நபர்! – தாய்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்

தாய்லாந்தின் நோங் பூவா லாம்பூ வடகிழக்கு மாகாணத்தில் ஒரு பகல்நேர குழந்தைகள் பராமரிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்தக் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் மதிய உணவு நேரத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார். இந்தத் தாக்குதலில் 22 சிறுவர்கள் உட்பட மொத்தம் 34 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 34 வயதான முன்னாள் போலீஸ் அதிகாரி என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து … Read more

தமிழகஅரசின் நலத்திட்டங்களை கண்காணிக்க 30 அதிகாரிகள் நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

சென்னை; தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 நோடல் அதிகாரிகளை நியமனம் செய்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அதிகாரிகள் ஆய்வு செய்துஅறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல் ஏராளமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பல திட்டங்கள் முறையாக பயனர்களை சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பல திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், … Read more

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வில்லை, வழக்கமாக இருந்த அளவுதான் இருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வில்லை, வழக்கமாக இருந்த அளவுதான் இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மழைநீர் புகும் இடங்களில் பொது பணித்துறை அதிகாரிகளுடன் பேசி மழைநீர் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.