“கொடுமை தாங்க முடியலை… காப்பாத்துங்க!"- துபாயிலிருந்து வீடியோ வெளியிட்டு மீட்க கோரும் சென்னை பெண்
சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ்பால். இவரின் மனைவி புவனா. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். குடும்ப வறுமை காரணமாகவும், கடன் காரணமாகவும் புவனா சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் ஏஜென்ட் மூலமாக துபாய்க்கு பணிக்குச் சென்றுள்ளார். ஒரு வீட்டில் பணிப்பெண் வேலைக்காகக் கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்றுள்ளார். புவனா இந்த நிலையில், துபாயில் தனக்குச் சொன்ன சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், தன்னை அந்த வீட்டின் உரிமையாளர் துன்புறுத்துவதாகவும் புவனா ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். … Read more