சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

சென்னை; மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய சென்னையில் நாளை (டிச.17) பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  வெள்ளிக்கிழமைக்கான பாடவேளை பின்பற்ற வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்/.

ஷாரூக்கான் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை : ஷாரூக்கான் நடித்துள்ள ‛பதான்’ படத்திலிருந்து வெளியாகி உள்ள ‘பேஷ்ரம் ரங்’ பாடல் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக கூறி இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பதான் படத்தை திரையிட விட மாட்டோம் என வட மாநிலங்களில் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அவற்றை புறக்கணிக்க சொல்லி டிரெண்ட் செய்வது அதிகமாகி உள்ளது. தற்போது ஷாரூக்கானின் பதான் படமும் இந்த சர்ச்சையில் சிக்கி … Read more

சீக்கியர்கள் கொலை வழக்கு; 43 காவலர்களுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் – அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

1991-ஆண்டு ஜூலை மாதம், உத்தரப்பிரதேசத்தில் 10 காலிஸ்தானி பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த மாநிலக் காவல்துறை அறிவித்தது. ஆனால், இது திட்டமிடப்பட்ட படுகொலை என புகார்கள் எழவே, இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், உ.பி போலீஸார் 1991-ம் ஆண்டு ஜூலை 12 அன்று, சீக்கிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்தை தடுத்து நிறுத்தி, அதிலிருந்து 10 பேரை கீழ இறக்கியது தெரியவந்தது. பின்னர், அவர்களை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றதாக … Read more

நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்ப்பு..! முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

சென்னை: நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும் அரசியல் சாசன திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை வரவேற்றும்  மத்தியஅரசுக்கு நன்றி தெரிவித்தும்   முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தச் சூழலில், கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமர் … Read more

ஜிஎஸ்டி கவுன்சில் ரப்பர் ஸ்டாம்ப் போல் செயல்படுகிறது: பழனிவேல் தியாகராஜன் விமர்சனம்

சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் ரப்பர் ஸ்டாம்ப் போல் செயல்படுகிறது என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்துள்ளார். ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்படுவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. 3 மாதத்துக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற வேண்டும் ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி எப்படி கணக்கிடப்பட்டு மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது என யாருக்கும் புரிவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

போர் வெற்றி தினத்தையொட்டி ராஜ்நாத் சிங் மரியாதை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வெற்றி தினத்தையொட்டி டில்லியில் போர் நினைவு சின்னத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். பாகிஸ்தான் போரில் உயிர்நீத்த வீரர்களுக்காக மரியாதை செலுத்தினர். கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாக காரணமாக இருந்த இந்த போரில், பாகிஸ்தான் படைகள் சரணடைந்த நாளான டிசம்பர் 16ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமாக ‛விஜய் திவாஸ்’ … Read more

பிரியாணி, சமோசா; 2022-ல் மக்கள் ஸ்விக்கியில் வாங்கிய உணவுகளில் முதலிடம்!

ஒவ்வோர் ஆண்டும், ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி (Swiggy), மக்கள் தங்களிடம் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் பற்றிய தகவல்களை வெளியிடும். அந்த வகையில் இந்த 2022-ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளைப் பற்றிய தகவல்களை ஸ்விக்கி வெளியிட்டுள்ளது.  ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2022 -ல் அதிக ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளது. ஒரு வினாடிக்கு 2.28 பிரியாணி ஆர்டர்களை பெற்றுள்ளதாகவும், ஒவ்வொரு … Read more

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டது ‘ஆவின் நெய்’ விலை…

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே அவின் பால் விலை மற்றும் நெய் மற்றும் பால் பொருட்களை விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ஆவின் நெய் விலை இரண்டாவது முறையாக  விலையையும் உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.  இந்த விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகஅரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின்,  பொதுமக்களுக்கு மலிவு விலையில் பால் பொருட்கள் கிடைக்கும் வகையில், மாநில அரசால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், … Read more

உலகக்கோப்பையை நாங்களே வெல்ல விரும்புகிறோம்! கண்ணீர் தழும்ப உணர்ச்சிபூர்வமாக பேசிய மெஸ்ஸி

முதல் போட்டியில் மோசமான தோல்வியிலிருந்து மீண்டு தற்போது இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என மெஸ்ஸி கூறியுள்ளார். லியோனல் மெஸ்ஸி ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்குள் அர்ஜென்டினா அணி நுழைந்துள்ளது. அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸியிடம், அந்நாட்டு கால்பந்து தொகுப்பாளரான சோபியா மார்டினெஸ் ஒரு உரையாடல் நடத்தினார். அப்போது,இறுதிப்போட்டியில் முடிவுகள் எதுவாக இருந்தாலும், கோப்பையை கடந்து உங்களிடமிருந்து யாராலும் எடுக்க முடியாத ஒன்று இருக்கிறது. அதை நான் தீவிரமாக நம்புகிறேன். அது மக்கள் உங்கள்மேல் வைத்துள்ள அன்பு. … Read more

விளையாட்டுநேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்கக் கூடாது என வலியுறுத்தப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பள்ளிகளில் விளையாட்டுநேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்கக் கூடாது என ஆசிரியர்களுக்கு வலியுறுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மாநில கல்வி கொள்கை குழுவினரின் முழு அறிக்கை ஜனவரியில் முதல்வரிடம் வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.