3 மாதங்களில் தீர்ப்பாயம் அமைக்க உத்தரவு| Dinamalar
புதுடில்லி : பெண்ணையாறு நதி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகம் – கர்நாடகா இடையே நிலவி வரும் பிரச்னையை தீர்த்து வைக்க பெண்ணையாறு நதி நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை மூன்று மாதத்தில் அமைக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடகாவில் உருவாகும் பெண்ணையாறு, தமிழகம் வழியே சென்று வங்க கடலில் கலக்கிறது. தமிழகத்தில் ஓடும் பெண்ணை ஆற்றுக்கு தென்பெண்ணை ஆறு என்று பெயர். கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தி ஆகி, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, … Read more