ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா

பாங்காக்-கில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி காலிறுதி ஆட்டத்தில் சீன தைபேயின் சென் சூ-யுவை 4-3 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா. இதன் மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு நுழையும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனிகா பத்ரா பெற்றார். டேபிள் டென்னிஸ் விளையாட்டில் உலகின் 44வது நிலையில் இருக்கும் மனிகா பத்ரா 23வது நிலையில் இருக்கும் சீன தைபேயின் … Read more

தமிழ்நாட்டில் நாளை 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 18 துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு நாளை நடைபெறுகிறது. குரூப் 1 தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளனர்

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சிதான் – பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேருவது அதிமுக பாலிசி! செல்லூர் ராஜூ

சென்னை: தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் தான் ஆட்சிதான் – பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேருவது அதிமுக பாலிசி அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி நோக்கி கிளம்பி விட்டது,  ஓபிஎஸ்,டிடிவி இணைப்பு காலம் பதில் சொல்லும் என அதிமுக முன்னாள் அமைச்சர்  செல்லூர் ராஜூ கூறினார். மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியான தாராபட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக ரூ.52.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தரைப் பாலம், பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட பணிகளை … Read more

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.34 கோடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், ஐப்பசி மாதம்  சுமார் ரூ.1.34 கோடி உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 174 கிராம் தங்கமும், 852 கிராம் வெள்ளியும் பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

ஈரோடு: வெளிமாநில சரக்கு லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! – ரூ.100 கோடி மதிப்பிலான பொருள்கள் தேக்கம்

ஈரோட்டிலிருந்து ஜவுளி, மஞ்சள், ஆயில், தானியங்கள், மருந்து உள்ளிட்டவை கனரக சரக்கு லாரிகள் மூலமாக டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஈரோடு பார்க் ரோடு, பவானி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் பெரும்பாலும் கர்நாடகா மற்றும் வெளிமாநிலங்களை தலைமையிடமாக கொண்டு கிளை நிறுவனங்களாக இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு லாரிகளில் வரும் சரக்குகளை ஏற்றி … Read more

கணவன் உயரம் குறித்து கவலை கொண்ட மனைவி: 3 அங்குலம் வளர 1,30,000 பவுண்டுகள் செலவு செய்த நபர்!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மூன்று 3 இன்ச் வரை உயரம் கூட்டுவதற்காக ராய் கான் என்பவர் 1,30,000 பவுண்டுகள் வரை செலவழித்துள்ளார். மனித உடல் உயரம் கூட்டும் சிகிச்சை அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ராய் கான் என்பவர் ஐந்து அடி ஆறு அங்குலத்தில் இருந்த நிலையில், தனது உடல் உயரத்தை மூன்று அடிகள் வரை உயர்த்தி கொள்வதற்காக 1,30,000 பவுண்டுகள் வரை செலவழித்துள்ளார். இதற்காக அவரது இரண்டு தொடை எலும்புகளும் உடைக்கப்பட்டு அதில் உலோக நகங்கள் சேர்க்கப்படும் வலிமிகுந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. … Read more

மூட நம்பிக்கைக்கு ஸ்வாஹா: சந்திரகிரகணத்தின்போது பெரியார் திடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணுக்கு சுக பிரசவம்…

சென்னை: சந்திரகிரகணத்தின்போது பெரியார் திடலில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு  நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணுக்கு சுக பிரசவம் நடைபெற்றுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மூட நம்பிக்கைக்கு  வேட்டு வைக்கும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. பொதுவாக கிரகணங்களின்போது, கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது என்றும், இந்த நேரத்தில் சாப்பிடுவது கூடாது என்றும் பல ஆண்டுகளாக மக்களிடையே நம்பிக்கை உள்ளது. ஆனால், இதற்கு அறிவியல்பூர்வ சான்றுகள் இல்லை. ஆனால் மக்களிடையே இந்த பழக்க வழக்கங்கள் தொன்று தொற்று கடைபிடிக்கப்படுகிறது. … Read more

மதுரையில் திருமலை நாயக்கர் மஹாலை சுற்றி பார்க்க இலவச அனுமதி: தொல்லியல் துறை அறிவிப்பு

மதுரை: மதுரையில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு மன்னர் திருமலை நாயக்கர் மஹாலை பொதுமக்கள் சுற்றி பார்க்க ஒரு வாரத்திற்கு இலவச அனுமதி என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. நாளை(19.11.2022) முதல் 25ம் தேதி வரை பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக மகாலை சுற்றி பார்க்கலாம்.

லிவ்-இன் பார்ட்னரைக் கொன்றுவிட்டு குழந்தையுடன் தப்பிய இளைஞர்! – மடக்கிப் பிடித்து கைதுசெய்த போலீஸ்

சமீபத்தில் தன் லிவ்-இன் பார்ட்னர் அப்ஃதாப்பால் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கர் குறித்த செய்திகள் வெளிவந்து மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தென்கிழக்கு டெல்லியின் சரிதா விஹார் பகுதியில் தன் லிவ்-இன் பார்ட்னரை கொலைசெய்து வீட்டுக்குள் சடலத்தை மறைத்த இளைஞரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். கைது இந்த விவகாரத்தில் 30 வயதான ராகுல் லால் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் குல்சானா என்ற பெண்ணுடன் லிவ்-இன் உறவு முறையில் இருந்துள்ளார். குல்சானா ஏற்கெனவே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர் … Read more