உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க குழு! அமைச்சர் பொன்முடி
சென்னை: உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். பச்சையப்பா அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்கள் நியமனம் செல்லாது என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று கூறினார். … Read more