பெரியம்மாவின் புறம்பேச்சு, அக்காவின் பொறாமை; காயப்படுத்துபவர்களை கையாள்வது எப்படி? #PennDiary88
எங்களுடையது மிகவும் ஏழ்மையான கிராமத்து குடும்பம். நான், தம்பி என வீட்டில் இரண்டு பிள்ளைகள். நான் பள்ளிப் படிப்பை முடித்தபோது, கல்லூரியில் படிக்கவைக்க வீட்டில் பொருளாதார வசதி இல்லை. எனவே, நகரத்தில் இருந்த பெரியம்மாவிடம் என் அம்மா, தங்கள் பெற்றோரது பூர்விக வீட்டில் தனது பங்கையும் அவரையே எடுத்துக்கொள்ளச் சொல்லியும், பதிலுக்கு என்னை அவர்கள் வீட்டில் தங்கவைத்து, கல்லூரிப் படிப்புக்கான கட்டணத்தை கட்டும்படியும் கேட்டுக்கொண்டார். அவ்வாறே, நான் பெரியம்மா வீட்டில் தங்கி என் கல்லூரிப் படிப்பை முடித்தேன். … Read more