பெண் உள்ளிட்ட 9 பேர் கைது – அதிரவைக்கும் கேரளா சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது  சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமாகியிருக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு காவல்துறை அவரை மீட்டது. அப்போதுதான் போதையுடன் தன்னை ஏராளமானோர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சித் தகவலை அவர் கூறியிருக்கிறார். பாலியல் வன்கொடுமை பாலியல் சீண்டலிலிருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவிலிருந்து குதித்த சிறுமி – வெளியான அதிர்ச்சி வீடியோ! கொல்லம் பகுதியைச் சேர்ந்த டொனால்டு என்பவர் சிறுமிக்கு நட்பாகியிருக்கிறார். சிறுமி வேலை தேடிவந்த நிலையில், … Read more

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக சரிவு

சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 12,500 கன அடியாக சரிந்துள்ளது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து 15,500 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 12,500 கன அடியாக குறைந்துள்ளது.

தங்கம் விலை இனி குறைய வாய்ப்பில்லை… இதுதான் காரணம்!

தங்கம் விலை இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்தே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இது கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கும் அனைவருக்கும் கலக்கத்தை கிளப்பியுள்ளது. தங்க விலை உயர்வு(Gold price increase) ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் தயாரிப்பு மையம்… ஓசூர் தொழில் வளர்ச்சியில் ஒரு `மைல் ஸ்டோன்’ நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.4,940 ஆகவும், ஒரு பவுனுக்கு விலை ரூ.39,520 ஆகவும் இருந்தது. நேற்று மாலையில் ஒரு கிராமுக்கு தங்கத்தின் விலை … Read more

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா! மொத்த பரிசுத்தொகை 440 மில்லியன்..வெளியான விபரம்

கத்தாரில் தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவுக்கான பரிசுத்தொகை விபரம் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட விளையாட்டு தொடர் பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் 20ஆம் திகதி தொடங்குகிறது. சர்வதேச அளவில் நடத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டு போட்டி தொடர் இதுவாகும். இதுவரை பிரேசில், ஜேர்மனி, இத்தாலி, அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே, ஸ்பெயின், இங்கிலாந்து 8 அணிகள் மட்டுமே உலகக்கோப்பையை வென்றுள்ளன. [Sorin Furcoi/Al இவற்றில் பிரேசில் 5 முறையும், ஜேர்மனி மற்றும் இத்தாலி தலா 4 முறையும், அர்ஜென்டினா, பிரான்ஸ், … Read more

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை

சென்னை; அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்  பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்களுக்க அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. சுமார் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவல்லை. இது சர்ச்சையாகி உள்ளது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   நிர்வாக சீர்திருத்த காரணத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு … Read more

முற்போக்கு சிந்தனை உள்ள புத்தகங்களை இளைஞர்கள் வாசிக்க வேண்டும்: தி.க. தலைவர் கி.வீரமணி பேச்சு

சென்னை: முற்போக்கு சிந்தனை உள்ள புத்தகங்களை இளைஞர்கள் வாசிக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு இல்லை எனில் ஒரு தலித்தும் எம்.பி., எம்.எல்.ஏ., ஆக முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சனாதன சக்திகள் ஊடுருவும் போது அறிவார்ந்த புத்தகம் தேவைப்படுகிறது என திருமா குறிப்பிட்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உட்பட 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைதண்டனை அனுபவித்துவந்த எழுவரில், பேரறிவாளனைக் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. அதைத்தொடர்ந்து நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசின் தீர்மானத்தை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆறு பேர் விடுதலை அதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, நளினி உட்பட மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்யலாம் என்று நவம்பர் 11-ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பின்னர் … Read more

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஆறு பேர் விடுதலை ஆனதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்தியாவின் எதிர்காலத்தையும் 130 கோடி மக்களின் எதிர்காலத்தையும் சீரழிக்கும் நோக்கோடு இந்தியாவுக்குள் ஊடுருவி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்து நாசகார செயலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ஆறு பேர் நவம்பர் 11 ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் தண்டனை … Read more

அஃப்தாப்பின் போலீஸ் காவலை மேலும் 5 நாட்கள் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: அஃப்தாப்பின் போலீஸ் காவலை மேலும் 5 நாட்கள் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காதலி ஷ்ரத்தாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட அஃப்தாப்பின் உண்மை அறியும் சோதனை முடிவு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. அஃப்தாப்பிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளதால் டெல்லி போலீஸ் மனு அளித்தது. டெல்லி போலீசின் மனுவை ஏற்று அஃப்தாப்பின் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேற்கவங்க புதிய கவர்னராக ஆனந்த போஸ் நியமனம்| Dinamalar

கோல்கட்டா: மேற்கவங்க மாநில கவர்னராக ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இ்ம்மாநில கவர்னராக இருந்த ஜக்தீப் தங்கர், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். ஜக்தீப் தங்கருக்கு பதிலாக, மணிப்பூர் மாநில கவர்னர் இல. கணேசன், மேற்குவங்க மாநில கவர்னராக கடந்த ஜூலை மாதம் முதல் கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் மேற்கவங்க மாநில புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்தார். கோல்கட்டா: … Read more