6 பேர் விடுதலை உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு

டெல்லி: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆறு குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை வாதாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவு சட்டப்பூர்வமாக பிழையானது என்றும் மனுவில் தகவல் வெளியாகியது.

மயக்க மருந்து கொடுக்காமல் அலற, அலற பெண்களுக்கு கருத்தடை ‛ஆபரேஷன்: பீஹாரில் பயங்கரம்| Dinamalar

பாட்னா: பீஹாரில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் சுமார் 24 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. பீஹார் மாநிலம் ககாரியா பகுதியில் உள்ள 2 அரசு மருத்துவ நிலையங்களில் கருத்தடை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 24 பெண்களுக்கு வழக்கமாக கொடுக்கப்பட வேண்டிய மயக்க மருந்து எதுவும் கொடுக்கப்படாமல் விழிப்பில் இருந்த நிலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சிகிச்சையின்போது வலி தாங்காமல் அலறி துடித்ததாகவும், அப்போது 4 பேர் சேர்ந்து அவர்களின் கை, கால்களை பிடித்து கொண்டதாகவும் … Read more

சென்னை எழும்பூர்: கிளம்பிய ஆளுநர்… ஓய்வு அறையில் பாஜக தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்!

காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொன்மையான நாகரிக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக, ஒருமாத கால ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி, வாரணாசியில் இன்று (நவம்பர் -17) தொடங்கி டிசம்பர் 16 வரை நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக, காசி – தமிழகம் இடையேயான தொடர்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாகக் கொண்டு, சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சார்பில், அறிஞர்கள் இடையே கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. … Read more

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைதளமான மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்..

டெல்லி: ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைதளங்களை நிர்வகிக்கம்  மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கொரோனாவுக்கு பிறகு, மீண்டும் பொருளாதார வளர்ச்சி ஏற்றம் கண்டு வரும் நிலையில்,  பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.  பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணிநீக்கம் செய்து வருகின்றது.  ஏற்கனவே ஸ்நான்சாட் (`Snapchat)  நிறுவனம் 20 சதவிகிதம் வரை ஆட்குறைப்பு செய்தது. இதைத்தொடர்ந்து,  டிவிட்டரை கைப்பற்றிய எலன்மஸ்க் 75 சதவிகிதம் பேரை … Read more

விருத்தாசலம் முள்ளா ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கடலூர்: விருத்தாசலம் முள்ளா ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகின்றது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏராளமான மக்கள் சாலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பால்தாக்ரே நினைவிடத்தை கோமியத்தால் சுத்தம் செய்த உத்தவ் கட்சியினர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் மறைந்த பால்தாக்கரே நினைவிடத்தில் ஏக்நாத் ஷிண்டே மரியாதை செலுத்தி விட்டு சென்றவுடன் அந்த இடத்தை உத்தவ் தாக்கரே கட்சியினர் பசு மாட்டு கோமியத்தால் சுத்தம் செய்தனர். மஹாராஷ்டிராவின் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிரச்னையால், உத்தவ் தலைமையிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலும் சிவசேனா கட்சி இரு வேறு அணியாக பிரிந்தது. கட்சியின் சின்னமான வில் அம்பு தேர்தல் ஆணையத்தால் முடக்கிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவசேனா கட்சியை நிறுவிய … Read more

சென்னை: ஒரு தலைக் காதல்; இளம்பெண் முகத்தில் 25 தையல்கள் – இளைஞர் சிக்கியது எப்படி?

கேரளாவைச் சேர்ந்த 20 வயதாகும் இளம்பெண், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விமான பணிப்பெண் பயிற்சிக்காக வந்திருக்கிறார். அவர், கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருக்கிறார். இந்தச் சூழலில் கேரள இளம்பெண்ணுக்கு சென்னையைச் சேர்ந்த 25 வயதாகும் நவீன் என்ற இளைஞர் சமூகவலைதளம் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். இருவரும் நட்பாக பழகி வந்திருக்கின்றனர். அப்போது நவீன், தான் கடற்படையில் வேலைப்பார்ப்பதாக கூறியிருக்கிறார். நவீன் இந்தச் சூழலில் நவீன், கேரள இளம்பெண்ணை நேரில் சந்திக்க கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹோட்டலுக்குச் … Read more

பொருளாதார மந்தநிலையில் பிரித்தானியா: எச்சரிக்கை விடுத்த நிதியமைச்சர்

பிரித்தானியா ஏற்கனவே பொருளாதார மந்தநிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட், மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவடையும் என தெரிவித்துள்ளார். பணவீக்கம் சரிவடையும் பிரித்தானியர்கள் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இந்த ஆண்டு பணவீக்கமானது 9.1% என இருக்கும் என குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட், 2023ல் 7.4% என சரிவடையும் என்றார். @Skynews நமது தொடர் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த ஆண்டு மத்தியில் பணவீக்கம் சரிவடையும் எனவும் … Read more

இந்தியர்களுக்கான விசா வழங்க போலீஸ் அனுமதி சான்று தேவையில்லை சவுதி அரேபியா அறிவிப்பு

சவுதி அரேபியா செல்லும் இந்தியர்களுக்கு விசா வழங்க போலீஸ் அனுமதி சான்றிதழ் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியா வெளியிட்டிருக்கும் செய்தியில் இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே நெடுங்காலமாக தொடரும் நல்லுறவின் காரணமாக இந்தியர்களுக்கு இந்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தவிர, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சவுதி அரேபியாவில் அமைதியாக வாழ்ந்து வருவதை பாராட்டும் விதமாக சவுதி அரேபிய சாம்ராஜ்யம் இந்த சலுகையை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. விசாவுக்கான போலீஸ் அனுமதியிலிருந்து … Read more

சீர்காழி தாலுகாவில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

மயிலாடுதுறை:  சீர்காழி தாலுகாவில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் நாளை (18.11.2022) விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழை பெய்த நிலையில் மறுசீரமைப்பு பணி நடப்பதால் நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.