புதுச்சேரி: `விதிமுறைகளைத் தளர்த்துங்கள்…' – மத்திய அமைச்சர் முன்பு குமுறிய முதல்வர் ரங்கசாமி
மத்திய சுற்றுலா அமைச்சக நிதியின் கீழ் சுதேசி தர்ஷன் திட்டத்தில், மேம்படுத்தப்பட்ட திட்டங்களை சுற்றுலாப்பயணிகள், பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா இன்று அண்ணா சாலை தனியார் விடுதியில் நடந்தது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “சுற்றுலாவை மேம்படுத்த புதுவைக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி அளித்திருக்கிறது. மேலும் நிதி வழங்கவும் ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. புதுவை சுற்றுலாவை மேம்படுத்தவேண்டிய சிறிய மாநிலம். சுற்றுலா வளர்ச்சியில் புதுவை … Read more